Grace and TruthThis website is under construction ! |
|
Home Afrikaans |
Home -- Tamil -- 11-Presuppositional Apologetics -- 020 (Presuppositional apologetics discounts the use of evidence)
This page in: -- Chinese -- English -- French? -- German -- Indonesian -- Russian -- TAMIL -- Ukrainian
Previous Chapter -- Next Chapter 11. முன்ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரைக்கான விவிலிய அறிமுகம்
கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிரான தாக்குதல்களில் மறைந்திருக்கும் பொய்களையும் அடிப்படைத் தவறுகளையும் எப்படி அம்பலப்படுத்துவது?
பாகம் 3 – ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரையின் செயல்முறைகள்
15. முன்ஊகக் கொள்கைக் காப்புவாதத்தைக் குறித்த பொதுவான தப்பெண்ணங்கள்
இ) முன்ஊகக் காப்புரை ஆதாரங்களின் பயன்பாட்டை குறைத்து மதிப்பிடுகிறதுமுன்ஊகக் கிறிஸ்தவ காப்புரையைப் பற்றி மிகவும் பொதுவான தப்பெண்ணம் இதுவாகும். முன்ஊகக் காப்புரை ஆதாரங்களின் பயன்பாட்டைக் குறைத்து மதிப்பிடவில்லை. ஆகிலும் இங்கு பாரம்பரிய முறைப்படி ஆதாரங்கள் பயன்படுத்தப்படுவதில்லை. அதாவது, அவநம்பிக்கையாளரின் சுயாதீன அறிவிற்கு அபயமிடும் முறையில் ஆதாரங்கள் பயன்படுத்தப்படுவதில்லை. முன்ஊகக் காப்புரையின் நம்பிக்கை என்னவென்றால் கிறிஸ்தவ இறைநம்பிக்கையின் உலக நோக்குக்கு அப்பாற்பட்டு சுயாதீனமான பகுத்தறிவு என்பதே சாத்தியமல்ல அல்லது எதையும் நிரூபிக்க முடியாது என்பதே. ஆதாரங்கள் விளக்கம் செய்யப்பெறாமல் நம்மிடத்தில் வருவதில்லை என்பதால் அந்த ஆதாரம் செயல்படுவதற்குரிய ஒரு சட்டகம் நமக்குத் தேவையாயிருக்கிறது. ஆகவே, அவநம்பிக்கையாளர்களின் சிந்தனை முறையை அல்லது சட்டகத்தை சவாலுக்கு உட்படுத்தாமல் ஆதாரத்தைப் பயன்படுத்து பலனளிக்காது. இங்கு முக்கிய கருத்து எதுவெனில் முதலில் ஒரு அவநம்பிக்கையாளருக்கு ஆதாரத்தைப் பயன்படுத்துவதற்கு அவரை அனுமதிக்கும் ஒரு சட்டகம் இல்லை என்பதோடு கிறிஸ்தவ உலக நோக்கு மட்டுமே எவரையும் ஆதாரத்தைப் பயன்படுத்தி அனுமதிக்க முடியும் என்பதையும் கவனிக்க வேண்டும். |