Grace and TruthThis website is under construction ! |
|
Home Afrikaans |
Home -- Tamil -- 11-Presuppositional Apologetics -- 040 (Answering the worldview of unitarian biblical counterfeits -- ISLAM)
This page in: -- Chinese -- English -- French? -- German -- Indonesian -- Russian -- TAMIL -- Ukrainian
Previous Chapter -- Next Chapter 11. முன்ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரைக்கான விவிலிய அறிமுகம்
கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிரான தாக்குதல்களில் மறைந்திருக்கும் பொய்களையும் அடிப்படைத் தவறுகளையும் எப்படி அம்பலப்படுத்துவது?
பாகம் 4 – செயலில் ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரை
31. வேதாகம் ஓரிறைக் கோட்பாட்டின் போலி வடிவத்திற்கு பதிலுரைத்தல் – இஸ்லாம்இந்த வகையான ஓரிறைக் கோட்பாட்டு மார்க்கங்களுக்கு உதாரணமாக நான் உதாரணமாகப் பயன்படுத்துகிறேன். ஏனெனில் சில வேளைகளில் இஸ்லாம் முன்ஊக கிறிஸ்தவ காப்பு வாதத்தினால் வீழ்த்த முடியாத சவாலாக முன்வைக்கப்படுகிறது. சிலர் இவ்விதமாக வாதிடுகிறார்கள்: கிறிஸ்தவராகிய நீங்கள் வேதாகமம்தான் இறுதி அதிகாரம் என்றும் அனைத்து அறிவுக்கும் ஆதாரம் என்றும் கோருகிறீர்கள்; அவ்வாறே முஸ்லிம்கள் தங்களுடைய இறுதி அதிகாரம் குர்ஆன் என்றும் அனைத்து அறிவுக்கும் அதுவே ஆதாரம் என்றும் கோருகிறார்கள். ஆகவே, அவர்களோடு பேசும்போது நீங்கள் முன்ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரையைப் பயன்படுத்த முடியாது, ஏனெனில் முஸ்லிம்களும் தங்கள் குர்ஆனை முன்ஊகமாகக் கொள்வதால் நீங்கள் எதுவும் செய்ய முடியாது. இப்படிப்பட்ட வாதம் இஸ்லாத்தை அல்லது முன்ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரையை அல்லது இரண்டையுமே குறித்து அறியாதவர்களால் முன்வைக்கப்படுகின்றது. உண்மையில் இஸ்லாத்தைத்தான் முன்ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரையைப் பயன்படுத்தி மிக இலகுவாகக் கையாளலாம். எப்படி? சில உதாரணங்களைப் பார்ப்போம். |