Previous Chapter -- Next Chapter
20. அறிவுசார் பாவங்கள்
எந்தவொரு பணியையும் செய்து முடிப்பதற்கு நமக்குச் சில கருவிகள் தேவைப்படுகின்றன. முன்ஊக கிறிஸ்தவ கொள்கைக் காப்புரையில் நாம் ஈடுபட வேண்டுமாயின் சிந்தனைக் கருவிகள் நமக்குத் தேவை. இவை கடவுளை நியாயந்தீர்ப்பவையோ இறுதி அதிகாரம் உடையவையோ அல்ல, அவை வெறும் கருவிகள். எந்த காரியத்தைப் போலவும் நாம் சில விதிமுறைகளை இங்க பின்பற்றாவிடில் அறிவு என்பதே சாத்தியமற்றுப் போகும். அவ்வாறு அறிவைச் சாத்தியமற்றதாக்கும் சில காரியங்களை நாம் தவிர்க்க வேண்டும். நீங்கள் அவநம்பிக்கையாளர்களுடன் பேசும்போது அடிக்கடி சந்திக்க நேரிடும் “அறிவுசார் பாவங்கள்” இங்கே கையாளப்பட்டிருக்கின்றன: தாறுமாறான சிந்தனை அல்லது பேச்சு, முன்னுக்கு முரணான சிந்தனை அல்லது பேச்சு, அறிவுடைமையின் முன்நிபந்தனைகள். இவற்றை நாம் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.