Grace and Truth

This website is under construction !

Search in "Tamil":
Home -- Tamil -- 17-Understanding Islam -- 098 (Preach the whole counsel of God)
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Telugu? -- Ukrainian -- Yoruba

Previous Chapter -- Next Chapter

17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
பாகம் ஆறு: இஸ்லாத்திலிருந்து கிறிஸ்தவ விசுவாசத்திற்கு வந்தவர்களைப் புரிந்துகொள்ளுதல்
பதினான்காவது 15: சபைக்கான ஆலோசனை

15.7. கடவுளின் முழு ஆலோசனையையும் போதியுங்கள்


நாம் பெரும்பாலும் கிறிஸ்தவத்தை ஒரு தலைபட்சமான பார்வையில் சித்தரிக்கிறோம். இதில் சமாதானம் மற்றும் ஆறுதல் போன்ற நேர்மறையான அம்சங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. துன்பம், துன்புறுத்தல் மற்றும் சவால்களுக்கு எதிராக போராடும் யதார்த்தம் பெரும்பாலும் மறைக்கப்படுகிறது. இதன் விளைவாக, துன்பங்கள் வரும்போது, அவற்றை எதிர்கொள்வது கடினமாக இருக்கும்.

கடவுள் நமக்கு ஒரு கட்டளையைக் கொடுக்கும்போது, அதை நிறைவேற்றுவதற்கான பலத்தையும் அவர் நமக்குத் தருவார் என்பதை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். நாம் உண்மையுள்ளவர்களாகயிருந்தால், கடவுளின் ராஜ்யத்தின் முன்னேற்றத்திற்காக கடவுள் நமக்கு பல வாக்குறுதிகளை அளிக்கிறார். நம்மிடம் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய வேண்டுமென்று கேட்கப்படவில்லை, மாறாக நமது இராஜாவுக்கு விசுவாசமாகவும், உண்மையாகவும் இருக்க வேண்டியது மட்டுமே எதிர்பார்க்கப்படுகிறது. துன்பங்கள் வரலாம், நாம் துன்பப்படலாம், ஆனால் அது மீட்பின் ஒரு பகுதி. நமது பாடுகளை அறிந்த இராஜா நமக்கு இருக்கிறார் என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்.

www.Grace-and-Truth.net

Page last modified on April 24, 2026, at 02:34 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)