Grace and TruthThis website is under construction ! |
|
Home Afrikaans |
Home -- Tamil -- 11-Presuppositional Apologetics -- 036 (Every way of a man is right in his own eyes (Proverbs 21:2) -- Or: Types of Worldviews)
This page in: -- Chinese -- English -- French? -- German -- Indonesian -- Russian -- TAMIL -- Ukrainian
Previous Chapter -- Next Chapter 11. முன்ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரைக்கான விவிலிய அறிமுகம்
கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிரான தாக்குதல்களில் மறைந்திருக்கும் பொய்களையும் அடிப்படைத் தவறுகளையும் எப்படி அம்பலப்படுத்துவது?
பாகம் 4 – செயலில் ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரை
27. ஒவ்வொரு மனிதருடைய வழியும் அவர் பார்வையில் சரியாகவே இருக்கும் (நீதிமொழிகள் 21:2) – அல்லது உலக நோக்குகளின் வகைகள்நம்முடைய உலக நோக்கு அடங்கலாக நாம் பார்க்கவிருக்கிற உலக நோக்குகள் அனைத்தும் இந்த மூன்று வகைக்குள் அடக்கப்படும். அ - ஒருமைவாத பொருள் முதல்வாதம் (Materialistic Monism): இந்த உலக நோக்குகள் பொருள் எனப்படும் ஒரே மெய்மை இருப்பதாகவும் அவை அணுக்களின் சேர்க்கையாக ஆதிமுதல் இருந்து இந்த உலகத்தை உருவாக்கியுள்ளது என்று நம்புகின்றன. அல்லது அண்டத்திலுள்ள விண்மீன் கூட்டம் (cosmic nebula) என்பதிலிருந்துதான் உலகம் பரிணமித்தது. இந்த உலக நோக்குகளின்படி பௌதீக காரியங்கள் மட்டுமே உண்மையானவை. மனம் மற்றும் மனசாட்சி சார்ந்த காரியங்கள் அனைத்தும் பௌதீக காரியங்களின் விரிவாக்கமே. ஒருமைவாத பொருள் முதல்வாதம் பல்வேறு வித்தியாசமான வடிவங்களில் உள்ளன (Behaviorism - நடத்தைவாதம், Determinism – முடிவுவாதம், Functionalism – நடப்புவாதம், Structuralism – அமைப்புவாதம்); இவற்றிற்கு இடையில் உள்ள வேறுபாடு நம்முடைய காப்புரையில் உள்ள அணுகுமுறையை பெரிதாகப் பாதிப்பதில்லை. இவை அவர்களுக்கிடையில் உள்ள அற்ப வேறுபாடுகளினால் உண்டானவை.
ஆ - இருமைவாதம்: கிறிஸ்தவம் உள்ளிட்ட இருமை வாத உலக நோக்குகளின்படி இரண்டு மெய்மைகள் உலகத்தில் உண்டு: ஒன்று மனம் இன்னொன்று பொருள் (ஆவி மற்றும் உடல்). சில காரியங்கள் பௌதீக தன்மையுள்ளதாக இருந்தாலும் மெய்மையின் இன்னொரு பகுதி ஆன்மீக அல்லது மனம் சார்ந்த அல்லது கருத்துக்கள் சார்ந்த பகுதியாக உள்ளது. பல அவநம்பிக்கையாளர்கள் இந்த மனநிலையில் இருக்கிறார்கள். அவர்களில் சிலருக்கு தங்களடைய நிலைப்பாடு என்ன என்பதே தெரியாது. அவர்கள் பொருள்சார்ந்த அணுகுமுறையைக் கைக்கொள்கிறார்கள். அதேவேளையில் அவர்கள் ஒழுக்கம், தர்க்கநியாயம், அறிவியல் அனுமானம் அல்லது இதுபோன்ற காரியங்களையும் நம்புகிறார்கள்.
இ – குறிப்பிட்ட மதங்களின் உலக நோக்குகள்: உலக மதங்கள் அனைத்தையும் கையாள்வது ஒரு கடினமான பணியாகத் தோன்றலாம். ஆனால், அது ஒன்றும் அத்துணை சிரமமானதல்ல. அதை எளிதாக்க உலக மதங்கள் அனைத்தையும் மூன்றாக வகைப்படுத்துகிறோம்.
அ) கடந்து நிற்கும் மருளியல்வாதம் (Transcendent Mysticism): இது மனித அனுபவத்தைக் கடந்து செல்லும் காரியங்களை வலியுறுத்தி, மெய்மையையும் அனைத்துவகையான வேறுபாடுகளையும் (கருத்துக்கள், மக்கள், பொருட்கள் எதற்கும்) மறுதலித்து, எந்தவித விவாதத்திற்கும் இடமில்லாமல் செய்கிறது.
ஆ) உள்ளார்நத ஒழுக்க வாதம் (Immanent Moralism): இது பௌத்தத்தைப் போல அருகில் இருக்கும் காரியத்தை வலியுறுத்துகிறது. அவர்களுடைய தெய்வங்களும் சமய சக்திகளும் அவர்களுக்கு அருகில் இருக்கின்றன. அதைப் போலவே சில ஒழுக்க சமயங்கள் இறைமறுப்புத் தன்மையுள்ளவையாகவும் இருக்கின்றன. அவை மனிதர்கள் வாழ்ந்து காட்ட வேண்டிய ஒழுக்கவியல் அறம் சார்ந்த காரியங்களை வலியுறுத்துகின்றன.
இ) வேதாகமப் போலிகள்: இந்த சமயங்கள் வேதாகம உலக நோக்கினால் தாக்கமுற்றவைகள், ஆனால் அவை கடவுளின் உண்மையான வெளிப்பாட்டை திரித்துவிட்டன.
இந்த வேதாகம போலிகளை கீழ்வருமாறு இன்னும் வகைப்படுத்தலாம்:
வாதங்களை நாங்கள் தகர்த்தெறிகிறோம் (2. கொரிந்தியர் 10:5) |