Grace and Truth

This website is under construction !

Search in "Tamil":
Home -- Tamil -- 11-Presuppositional Apologetics -- 045 (A fool by any other name)
This page in: -- Chinese -- English -- French? -- German -- Indonesian -- Russian -- TAMIL -- Ukrainian

Previous Chapter -- Next Chapter

11. முன்ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரைக்கான விவிலிய அறிமுகம்
கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிரான தாக்குதல்களில் மறைந்திருக்கும் பொய்களையும் அடிப்படைத் தவறுகளையும் எப்படி அம்பலப்படுத்துவது?
பாகம் 4 – செயலில் ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரை
31. வேதாகம் ஓரிறைக் கோட்பாட்டின் போலி வடிவத்திற்கு பதிலுரைத்தல் – இஸ்லாம்

உ) ஏதாவது ஒரு பெயரில் மூடன்


குர்ஆனின் கீழ்க்காணும் வசனங்களை ஒப்பிட்டுப் பாருங்கள்:

(i) “‛இறை தூதர்களில் நான் புதிதாக வந்தவன் அல்லன். மேலும், என்னைப் பற்றியோ, உங்களைப் பற்றியோ என்ன செய்யப்படும் என்பதை அறியமாட்டேன்; எனக்கு என்ன வஹீ அறிவிக்கப்படுகிறதோ அதைத்தவிர வேறு எதையும் நான் பின்பற்றுவதில்லை. தெளிவாக அச்சமூட்டி எச்சரிப்பவனேயன்றி நான் வேறில்லை என்று நபியே நீர் கூறும்.’ ” (கு 46:9)
(ii) “‛இன்னும் மர்யமுடைய மகன் ஈஸôவே, அல்லாஹ்வை அன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள் என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா? ’ " (கு 5:116)
(iii) “யூதர்கள் நபி உஜைரை (எஸ்றா) அல்லாஹ்வின் மகன் என்று கூறுகிறார்கள். கிறிஸ்தவர்கள் (ஈஸô) மஸீஹை அல்லாஹ்வினுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் தங்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; (அவர்களுக்கு) முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! அவர்கள் எங்கே திருப்பப்படுகிறார்கள்?” (கு 9:30)

இங்கு இரண்டு காரியங்களைப் பார்க்கிறோம். இங்கே செய்தி கொண்டுவரும் ஒருவர் செய்தியாளராகச் சொல்லப்படுகிறார். ஆனால் அவருடைய மீட்பைப் பற்றியே அவருக்கு நிச்சயம் இல்லை (ஒப்பிடுக எபே. 1:7, ரோமர் 3:24 போன்று பல வசனங்கள்). இவர்களுடைய உலக நோக்கு அவர்களை எங்கே கொண்டு போகப் போகிறது அல்லது தங்களுக்கு என்ன நடக்கப்போகிறது என்று தெரியாதிருக்கும்போது, அவர்கள் எங்களையும் அந்த உலக நோக்கைப் பின்பற்றச் சொன்னால் நீங்கள் அவர்களுக்கு என்ன சொல்வீர்கள்?

அனைத்தையும் அறிந்தவனாகக் கூறப்படும் அல்லாஹ்விற்கு உண்மையில் அதிகம் தெரியாது என்பதை அடுத்த இரண்டு வசனங்களும் நமக்குக் காண்பிக்கின்றன. வாதத்திற்காக கிறிஸ்தவர்கள் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட வேதாகமத்தை திருத்திவிட்டார்கள் என்றும் திரியேகத்துவம் என்ற உபதேசத்தை கண்டுபிடித்துவிட்டார்கள் என்றும் வைத்துக்கொள்வோம். கிறிஸ்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையாவது அல்லாஹ் சரியாகச் சொல்ல வேண்டாமா? குர்ஆன் சொல்வதைப் போல திரியேத்துவம் என்பது தந்தை, தாய், மகன் என்பதல்லவே. இந்த வசனத்திலிருந்து அல்லாஹ் தான் பேசும் காரியம் என்னவென்று அறியாது பேசுகிறார் என்பதையே நாம் அறிந்துகொள்ள முடிகிறது.

இறுதி வசனத்திலும் அதுதான் நடைபெறுகிறது. “எஸ்றா அல்லாஹ்வின் மகன்” என்று யூதர்கள் சொல்வதாக குற்றஞ்சாட்டப்படுகிறது, ஆனால் இதை நீங்கள் எந்த யூதர்களுடைய எழுத்துக்களிலும் காண முடியாது. பிறகு அல்லாஹ் அவர்கள் ஏமாற்றப்பட்டவர்கள் என்று அவர்களை அழைக்கிறார். ஆனால் கெடுவாய்ப்பாக இந்த வசனம் யாரை பரப்ப நினைக்கிறதோ அவர்தான் ஏமாற்றப்பட்டிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

www.Grace-and-Truth.net

Page last modified on April 13, 2023, at 02:24 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)