Home
Links
Contact
About us
Impressum
Site Map?


Afrikaans
عربي
বাংলা
Dan (Mande)
Bahasa Indones.
Cebuano
Deutsch
English-1
English-2
Español
Français
Hausa/هَوُسَا
עברית
हिन्दी
Igbo
ქართული
Kirundi
Kiswahili
മലയാളം
O‘zbek
Peul
Português
Русский
Soomaaliga
தமிழ்
తెలుగు
Türkçe
Twi
Українська
اردو
Yorùbá
中文



Home (Old)
Content (Old)


Indonesian (Old)
English (Old)
German (Old)
Russian (Old)\\

Home -- Tamil -- 08. Good News -- 16 Golden rules for conversations with Muslims

This page in: -- Chinese -- English -- French -- German? -- Indonesian -- TAMIL -- Turkish

Previous lesson

08. இஸ்லாமியருடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளுதல்
பிற்சேர்க்கை

16 - முஸ்லிம்களுடன் உரையாடுவதற்கான பொன்னான விதிகள்



விதி. 1: விண்ணப்பம், விண்ணப்பம், விண்ணப்பம்

முஸ்லிம்கள் நடுவில் பணிசெய்வது என்பது ஒரு ஆவிக்குரிய போராட்டம். கிறிஸ்து மட்டுமே முஸ்லிம்களை மாற்ற முடியும். ஆகவே, விண்ணப்பம் என்பது முஸ்லிம்கள் நடுவில் பணி செய்வதற்கான அடிப்படை ஆதாரமாகும். தங்கள் மனதை மூடியிருப்பவர்களுடைய மனங்கள் திறக்கப்படவும், தேடிக்கொண்டிருப்பவர்கள் கிறிஸ்துவைக் கண்டுகொள்ளவும், மனந்திரும்பியவர்கள் கிறிஸ்துவில் நிலைத்திருக்கவும் விண்ணப்பஞ் செய்யுங்கள். நற்செய்தி அறிவிக்கச் செல்வதற்கு முன்பாக அவருடைய கிருபைக்காக விண்ணப்பஞ் செய்யுங்கள். முஸ்லிம்களுடனான உங்கள் கலந்துரையாடல்களில் அவர் உங்களை வழிநடத்த வேண்டும் என்று விண்ணப்பியுங்கள். நற்செய்தி அறிவிக்கப்பட்ட பிறகு அந்த செய்தி அவர்களை விட்டு விலகாதிருக்கும்படி அவர்களுக்காக விண்ணப்பியுங்கள்.

விதி. 2: அன்பின் நடைமுறைச் சேவைகள்

மனமுவந்து அன்பின் சேவைகளைச் செய்வதில்தான் முஸ்லிம்கள் நடுவிலான பணியில் நாம் குறைவுள்ளவர்களாயிருக்கிறோம். அவ்விதமான சேவைகள் எதிரிகள் மீதான இறைவனுடைய அன்பை தனித்துவமான முறையில் வெளிப்படுத்துவதாயிருக்கும். உதாரணங்கள்: அ) ஆதரவு தேடும் முஸ்லிம்களைத் தேடிச்சென்று அதிகாரிகளிடம் அழைத்துச் செல்லுதல், அவர்களுக்காக விண்ணப்பப்படிவங்களை நிரப்புதல் போன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். ஆ) சுகவீனமாயிருக்கிற முஸ்லிம்களைத் தேடிச் சென்று அவர்களுக்கு உதவி செய்து உற்சாகப்படுத்துங்கள். இ) முஸ்லிம்களுடைய வாழ்க்கை வரலாறு மற்றும் பழக்கவழக்கங்களில் ஆர்வம் காட்டுங்கள். ஈ) உண்மையைத் தேடிக்கொண்டிருக்கிற முஸ்லிம்களின் குழப்பங்களையும் கேள்விகளையும் ஏற்றவாறு கையாளுங்கள். உ) மனமாற்றமடைந்த முஸ்லிம்கள் உபத்திரவங்கள் அனுபவிக்கும்போது அவர்களுக்கு ஆதரவளியுங்கள்.

விதி. 3: ஒவ்வொரு முஸ்லிமும் வித்தியாசமானவர்

அனைத்து முஸ்லிம்களையும் நாம் ஒரே மாதிரியானவர்கள் என்று கருதிவிடக்கூடாது. ஒவ்வொரு தனிப்பட்ட முஸ்லிம்களின் தனித்துவத்தையும் நாம் கவனமாகக் கருத்தில்கொள்ள வேண்டும். உதாரணமாக துருக்கியர்கள் அரேபியர்களைவிட வித்தியாசமானவர்கள். கல்லாத முஸ்லிம்களிடத்தில் பேசுவதைப் போல கற்றறிந்த முஸ்லிம்களுடன் பேசக்கூடாது. பழமைவாத முஸ்லிம்களுக்கும் தீவிரவாத முஸ்லிம்களுக்கும் நீங்கள் வித்தியாசமாகப் பதிலளிக்க வேண்டும். பாரம்பரிய முஸ்லிம்களுக்கும் இவ்வுலகத்தின் நாகரீகத்திற்குள் வாழும் முஸ்லிம்களுக்கும் வித்தியாசமான அணுகுமுறை அவசியம். இஸ்லாமிய சிறப்புக் குழுக்களுடைய விசுவாசம் பாரம்பரிய முஸ்லிம்களுடைய விசுவாசத்திலிருந்து வித்தியாசப்படும். பெண்கள் ஆண்களைப் போல வாழமாட்டார்கள். சிறுவர்களைப் போல பெரியவர்களைக் கையாள முடியாது.

விதி. 4: மனமாறியவர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள்

முஸ்லிம்கள் நடுவில் சிறப்பாகப் பணிசெய்பவர்கள் முன்னாளில் முஸ்லிம்களாக இருந்து கிறிஸ்துவை விசுவாசித்தவர்களே. அவர்கள் தங்கள் முந்தைய சகோதர்களுடைய மொழியையும் கலாச்சாரத்தையும் கற்றுக்கொள்ள வேண்டிய தேவையில்லை. அவர்கள் இஸ்லாத்தை உள்ளிருந்து அறிந்திருப்பதால், அதிலிருந்து வெளியேறுவது எப்படி என்பதையும் அறிந்திருக்கிறார்கள். நற்செய்திப் பணியில் ஆர்வமுள்ள முன்னாள் முஸ்லிம்களை ஆர்வத்துடன் பின்பற்றுபவர்கள் முஸ்லிம்களை எவ்வாறு சந்திப்பது என்பதை அதிவிரைவாக அறிந்துகொள்வார்கள். சரீர ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் மனம்மாறுகிறவர்களுக்கு உதவிசெய்வதும் இதில் அடங்கும்.

விதி. 5: ஊடகங்களைப் பயன்படுத்துங்கள்

நீங்கள் இலக்கியம் (வேதாகமம், நற்செய்தி நூல்கள், நற்செய்தியறிவிக்கும் சிறு நூல்கள், கைப்பிரதிகள்), ஒலிப்பதிவு செய்யப்பட்ட கருவிகள், சிடிக்கள், வீடியோக்கள், இணையதளங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தினால் முஸ்லிம்களைச் சந்திக்கும் வாய்ப்பை அதிகப்படுத்துகிறீர்கள். நீங்கள் ஒரு நபருடன் கலந்துரையாடுவது ஒரு குறுகிய காலம் மட்டுமே. ஆனால் நீங்கள் அவருக்கு ஏதாவது ஊடகத்தைக் கொடுத்தால் அது அவர்களுக்கு நீண்டநேரம் முழுமையாக நற்செய்தியை அறிவிக்கும் திறனுடையவை. மேலும் நற்செய்தியைக் கேட்பதற்கு எதிர்ப்புள்ள தருணங்களில் அதைக் கேட்பவர்கள் இரகசியமாக அவற்றைப் பயன்படுத்துவதற்கு இலகுவானதாக இருக்கும்.

விதி. 6: பொறுமை

பொதுவாக நற்செய்திக்கு தங்களைத் திறந்துகொடுத்து கிறிஸ்துவை அறிக்கை செய்வதற்கு முஸ்லிம்களுக்கு அதிக காலம் எடுக்கும். மனமாற்றமடைந்த பிறகும் அவர்கள் கிறிஸ்துவின் சாயலுக்கு மாறுவதற்கு இன்னும் அதிக காலம் செல்லும். ஆகவே எவ்வளவு பொறுமை அவசியம். அ) ஒரு முஸ்லிம் நற்செய்தியை அவமதிக்கும்போது பொறுமை அவசியம் (அனைத்து அவமதிப்புகளையும் நாம் முக்கியமாகக் கருதவேண்டியதில்லை). ஆ) மனமாற்றத்திற்கான அடையாளங்களைக் காண்பித்தவர்கள் மறுபடியும் இஸ்லாத்தின் நடைமுறைகளைப் பின்பற்றும்போது (இஸ்லாத்தின் ஷரியாத் சட்டத்திலிருந்து கிறிஸ்துவின் சட்டத்திற்கு ஒருவரை மாற்றுவதற்கு அதிக காலம் எடுக்கும்). இ) மனமாற்றமடைந்தவர்கள் உபத்திரவங்களை அனுபவிக்கும்போது பொறுமை அவசியம் (காலம் பல காயங்களை ஆற்றிக் குணப்படுத்தும் வல்லமையுள்ளது).

விதி. 7: பின்தொடர்பணி நற்செய்திப்பணியைவிட அதிக முக்கியமானது

இன்று முஸ்லிம்களை கிறிஸ்துவை விசுவாசிக்கும்படி அழைப்பது ஒப்பீட்டளவில் எளிமையானதாக இருக்கிறது. ஆனால் அவர்களைக் கிறிஸ்தவ விசுவாசத்திலும் திருச்சபைகளிலும் நிலைத்திருக்கச் செய்வது அதிக சவாலாகக் காணப்படுகிறது. ஆகவே பின்தொடர்பணியே அதிக முக்கியமானது. ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது என்பது வேறு, அதற்கு தகப்பனாயிருந்து அதைப் பராமரிப்பது என்பது வேறு. பின்தொடர்பணி என்பது, நடைமுறையில் மனந்திரும்பிய ஒரு சகோதரனுக்குப் பெண் பார்த்து, மணமுடித்து வைத்தல், ஒரு வேலை வாங்கிக்கொடுத்தல், அவர் உறவினர்களைவிட்டுத் துரத்தப்பட்டால் அவருக்குப் புதிய உறவினரை ஏற்படுத்திக்கொடுத்தல் ஆகியவற்றைக் குறிக்கும். ஒருவேளை ஒருவர் அவருடைய உறவினரால் கடுமையாகத் தாக்கப்பட்டால் அவருக்கு மருத்துவ சிகிட்சை அளிக்கப்பட வேண்டும்.

விதி. 8: அறிஞர்களுடைய உதவியை நாடவேண்டும்

இஸ்லாத்தைப் பற்றியும் அதற்கான கிறிஸ்தவ பதில்களைப் பற்றியும் பேசுகின்ற நூல்களை வாசித்து அறிந்துகொள்பவர்கள் முஸ்லிம்கள் நடுவிலான ஊழியத்தில் அதிக பயனை அனுபவிப்பார்கள். நோய்களையும் அவற்றிற்கான மருத்துவ முறைகளையும் படித்தறியும் ஒரு மருத்துவரே அவற்றிற்கு வெற்றிகரமான முறையில் சிகிட்சை அளிக்க முடியும். நீங்கள எந்த முஸ்லிம்களுடன் தொடர்புள்ளவர்களாயிருக்கிறீர்களோ அவர்களுடைய சமயத்தையும் கலாச்சாரத்தையும் பற்றி படித்தறிந்துகொள்வது மிகவும் நல்லது. இஸ்லாத்திலிருந்து மனமாறியவர்கள் மேற்கத்திய கிறிஸ்தவர்களைவிடச் சிறப்பாகச் செயல்பட முடியும். அவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

விதி. 9: கேள்விகளைக் கேட்டு அதற்கான மேற்கோள்களை சத்தமாக வாசிக்க வேண்டும்

இஸ்லாம் ஒப்புக்கொடுத்தலையும், கேள்விமுறையற்ற கீழ்ப்படிதலையும் அடிப்படையாகக் கொண்ட மதமாகும். கேள்வி கேட்டு விவாதிக்கும் முறை அதில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஆகவே, முஸ்லிம்களுடைய சிந்தனைகளைத் தூண்டக்கூடிய கேள்விகளைக் கேட்க வேண்டும். நீங்கள் வேதாகமப் பகுதிகளை அவர்களையே சத்தமாக வாசிக்கச் செய்து அதன் பொருளை அவர்களிடமே கேட்க வேண்டும். நீங்களே வேதாகமத்தை வாசித்து அதன் பொருளைச் சொல்வதைக் காட்டிலும் அது பயனுள்ளதாயிருக்கும்.

விதி. 10: வேதாகம வசனங்களை மனப்பாடம் செய்தல்

சிறுவர்களாயிருக்கும்போது முஸ்லிம்கள் குரானுடைய பகுதிகளை மனப்பாடம் செய்வார்கள். அவர்களுடைய மனதில் ஆழமாகப் பதிந்துள்ள அந்தப் போதனைகளை மாற்றுவதற்காக அவர்கள் வேதாகம வசனங்களை அவர்கள் மனப்பாடம் செய்யும்படி உற்சாகப்படுத்த வேண்டும். அது இஸ்லாமிய மனசாட்சிக்கு பெரிய அளவில் உதவக்கூடும். அவர்களுக்கு முன்னுதாரணமாக நாமும் அவர்களுடன் சேர்ந்து வேதாகமப் பகுதிகளை மனப்பாடம் செய்ய வேண்டும்.

விதி. 11: குழு விவாதத்தைவிட தனிப்பட்ட முறையில் பேசுதல் அதிக பலன்தரும்

இஸ்லாத்தைவிட்டு விலகுகிறவர்கள் மூன்று நாட்களுக்குள் மனந்திரும்பாவிட்டால் ஷரியாத் சட்டப்படி அவர்கள் கொலைசெய்யப்பட வேண்டும். கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்வது முஸ்லிம்களுக்கு ஒரு இழிவான செயல் ஆகும். நற்செய்தியைக் கேட்க அவர்கள் குழுவாக வந்தால் அவர்கள் மற்றவர்களால் காட்டிக்கொடுக்கப்படக்கூடும் என்ற பயம் அவர்களுக்கு இருக்கும். அதனால் அவர்கள் தனிப்பட்ட முறையில் சந்திக்கப்பட்டால் அவர்களுடைய உண்மையான நிலைப்பாடு நன்கு தெரியும். ஆகவே குழு விவாதத்தைவிட தனிப்பட்ட ஊழியமே சிறந்தது.

விதி. 12: ஆண்கள் ஆண்களையும் பெண்கள் பெண்களையும் சந்திக்க வேண்டும்

கிறிஸ்தவத்தைக் காட்டிலும் இஸ்லாத்தில் பாலினம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு ஆண் இஸ்லாமியப் பெண்ணுடன் தனியாகப் பேசிக்கொண்டிருந்தால் அந்த ஆண் அந்தப் பெண்ணை பாலியல் ரீதியாக பயன்படுத்த விரும்புகிறார் என்று கருதுவார்கள். ஒரு முஸ்லிம் பெண் ஒரு ஆணுடன் தனியாக நடந்துசென்றால் அவள் தன்னை அந்த ஆணுக்குக் கொடுக்கும்படியான நிலைக்குச் சென்றுவிடுவாள் என்று கருதப்படுவாள். இப்படிப்பட்ட காரணத்தினால் ஆண்கள் ஆண்களுடனும் பெண்கள் பெண்களுடனும் பேசுவது சிறந்தது.

www.Grace-and-Truth.net

Page last modified on June 07, 2013, at 11:37 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)