Grace and TruthThis website is under construction ! |
|
|
Home Afrikaans |
Home -- Tamil -- 17-Understanding Islam -- 001 (INTRODUCTION)
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Ukrainian -- Yoruba
17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
அறிமுகம்உலகெங்கிலும் பல்வேறு இடங்களில், பல்வேறு பின்னணிகளில் வாழும் நம்மில் பலருக்கு முஸ்லீம்கள் அண்டை வீட்டாராக, பணியாளர்களாக, நண்பர்களாக மற்றும் தொடர்புகளாக இருக்கிறார்கள். எதிர்த்து வாதாடவோ அல்லது சவால் விடவோ முடியாத மிகவும் சக்தி வாய்ந்தது இஸ்லாம் என்று சில கிறிஸ்தவர்கள் நினைப்பதைப் போலவே, நீங்களும் நினைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால், உண்மை அதுவல்ல. நீங்கள் பல வருடங்களாக கிறிஸ்தவராக இருந்தாலும், உள்ளூர் சபையில் தலைமை பதவியில் இருந்தாலும், எந்தக் கல்லூரி படிப்பும் இல்லாத புதிய விசுவாசியாக இருந்தாலும் சரி, இஸ்லாமிய மக்களை கிறிஸ்துவுக்காக ஆதாயப்படுத்த வேண்டும் என்ற விருப்பம் மட்டும் இருக்கிறதா? அப்படியானால், இந்தப் புத்தகம் உங்களுக்கானதுதான்! ஏனென்றால், இஸ்லாமிய மக்களை கிறிஸ்துவுக்காக ஆதாயப்படுத்த நீங்கள் அதிகப் பயிற்சி பெற வேண்டியதில்லை. இந்தப் புத்தகத்தில் விளக்கப்படும் சில அடிப்படை விஷயங்களை புரிந்து கொண்டாலே போதும். இஸ்லாமிய வரலாற்றின் சுருக்கமான பார்வையுடன் நமது பயணத்தைத் தொடங்குவோம். முதலில், சிறுபுத்தகம் 1-ல் இஸ்லாத்திற்கு முந்தைய அரேபியாவின் நிலைமைகளை ஆராய்வோம். இதன் மூலம், முகம்மது நபி (ஸல்) அவர்கள் தனது போதனைகளை வழங்கிய சூழலைப் பற்றிய தெளிவான புரிதலைப் பெற முடியும். இஸ்லாமிய நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்களைப் பற்றிய ஆழமான பார்வையைப் சிறுபுத்தகம்-2 வழங்கும். இதில், இவை வேதாகமப் போதனைகளிலிருந்து அடிப்படையில் எந்தளவு வேறுபடுகின்றன என்பதையும் காண்போம். இஸ்லாமியர்கள் இயேசுவைப் பற்றி என்ன நம்புகிறார்கள் என்பதைப் பற்றிய ஆழமான புரிதலை சிறுபுத்தகம் 3 தருகிறது. இஸ்லாமிய மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கும்போது கிறிஸ்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்வதில் இஸ்லாமியர் சந்திக்கும் சவால்கள் ஆகிய இரண்டையும் சிறுபுத்தகம்-4 விளக்குகிறது. இறுதியாக, கிறிஸ்தவர்களுக்கான பொதுவான அறிவுரைகளையும் இது வழங்குகிறது. இஸ்லாமியர்கள் பொதுவாக எதிர்க்கும் சுவிசேஷ செய்தியின் அம்சங்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து சிறுபுத்தகம்-5 விளக்குகிறது. கடைசிப் பகுதி (சிறுபுத்தகம்-6) முஸ்லீம்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறும்போது அவர்கள் சந்திக்கும் அனுபவங்கள் பற்றிய பார்வையை வழங்குகிறது. மேலும் கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்காக அவர்கள் மாபெரும் அடியை எடுத்துவைக்கும்போது சபை அவர்களை எவ்வாறு ஆதரிக்க முடியும் என்பதற்கான சில நடைமுறை வழிகளையும் ஆலோசனையாக வழங்குகிறது. குறிப்பாக இஸ்லாத்தில் சன்னி மற்றும் ஷியா என இரண்டு பிரதானப் பிரிவுகள் இருப்பதையும், அவற்றைத் தவிர சில சிறிய பிரிவுகளும் இருப்பதையும் நினைவில் கொள்ளவும். இந்தப் பிரிவுகளில் பல ஒற்றுமைகள் இருந்தாலும், சில முக்கியமான வேறுபாடுகளும் உள்ளன. இஸ்லாத்தின் சன்னி பிரிவின் மீது கவனம்செலுத்த முடிவுசெய்துள்ளேன். இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன: – இது மிகப்பெரிய பிரிவு, உலக முஸ்லீம்களில் சுமார் 90 சதவீதத்தினர் இதனை பின்பற்றுகிறார்கள்; மேலும்
– நான் சன்னி குடும்பத்திலும் சமூகத்திலும் வளர்ந்தேன், வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் சன்னி இஸ்லாத்தை தீவிரமாகப் பின்பற்றினேன். எனவே, இதைக் குறித்து நான் மிகவும் நன்றாக அறிவேன்.
சன்னி இஸ்லாமியர் அனைவரும் ஒரே அடிப்படை போதனைகளைப் பின்பற்றுகின்ற போதிலும், விளக்கங்கள் மற்றும் நடைமுறைகள் பிராந்தியங்களுக்கு ஏற்பவும், தனிநபருக்கேற்பவும் மாறுபடும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். எனவே, தங்களை முஸ்லீம் என்று அழைத்துக்கொள்ளும் ஒவ்வொரு நபரும் ஒரே மாதிரியாக நம்புவார்கள் என்று நாம் ஊகிக்க முடியாது - அவர்களின் நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளில் வேறுபாடுகள் இருக்கலாம். இந்தப் புத்தகம் இஸ்லாமிய கற்பித்தல்களை (முகம்மது பேசியவை மற்றும் செய்தவை) அதன் அதிகாரப்பூர்வ ஆவணங்களான குர்ஆன் மற்றும் சுன்னாவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி விளக்குகிறது. குறிப்பாக குறிப்பிடப்படாத வரை, இஸ்லாமிய அறிஞர்களால் மிகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டவை என்பதால், நான் முதன்மையாக திருக்குர்ஆன் (அல்-ஹிலாலி மற்றும் கான் மொழிபெயர்ப்பு) அல்லது ஸஹீஹ் இன்டர்நேஷனல் மொழிபெயர்ப்பு ஆகியவற்றை மேற்கோள் காட்டுகிறேன். முகம்மது நபி (ஸல்) அவர்கள் பேசியதை (ஹதீஸ்) கொண்ட பல்வேறு தொகுப்புகளில் இருந்தும், சில இடங்களில் அவர்களின் பேச்சு மற்றும் செயல்களின் விரிவான தொகுப்புகளில் இருந்தும் நான் மேற்கோள் காட்டுகிறேன். இந்தத் தொகுப்புகள் ஹதீஸ்களின் வகையை பொறுத்து வெவ்வேறு பெயர்களைக் கொண்டுள்ளன. முஸ்லீம்களால் மிகவும் நம்பத்தகுந்தவை என அறியப்படும் சஹீஹ் எனப்படும் தொகுப்புகள், ஆனால் நான் வேறு வகையான ஹதீஸ் தொகுப்பான முஸ்னத் மற்றும் முகம்மது நபியின் கூற்றுக்கள் மற்றும் செயல்களின் பரந்த தொகுப்பான சுன்னா ஆகியவற்றையும் குறிப்பிடுகிறேன். நான் இப்னு கதீர் மற்றும் இப்னு ஹிஷாம் ஆகியோரால் எழுதப்பட்ட இரண்டு முகம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறுகள் (சீராக்கள்) பற்றி குறிப்பிடுகிறேன், இவை இஸ்லாமியக் கோட்பாடுகளின் வளர்ச்சிக்கு நம்பகத்தகுந்த மூலங்களாகவும் கருதப்படுகின்றன. நான் மொழிபெயர்ப்புகளைக் குறிப்பிட்டுச் சொல்லாத வரையிலும், ஹதீஸ்கள் மற்றும் சீராக்களின் மொழிபெயர்ப்புகள் என்னுடையவை. அரபு பெயர்களின் உச்சரிப்பு தேவைப்படும் இடங்களில், நிலையான அல்லது தொழில்நுட்ப ரீதியாக துல்லியமான மொழிபெயர்ப்பு முறையைப் பின்பற்றாவிட்டாலும், பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட ஆங்கில ஒலிபெயர்ப்பு முறைக்கே நான் முன்னுரிமை அளித்துள்ளேன். பரவலாக அறியப்பட்ட ஆங்கில ஒலிபெயர்ப்பு இல்லாத இடங்களில், நான் என் சொந்த முறையைப் பயன்படுத்தியுள்ளேன். இறுதியாக, முஸ்லீம் பின்னணியிலிருந்து வரும் கிறிஸ்தவர்களை எந்த அடைமொழியும் வேறுபடுத்தப்படக் கூடாது என்று நான் மனதார நம்புகிறேன். நாங்கள் கிறிஸ்தவர்கள், மற்ற எந்த கிறிஸ்தவர்களையும் விட உயர்ந்தவர்களோ அல்லது தாழ்ந்தவர்களோ அல்ல. கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்ட அனைத்து கிறிஸ்தவர்களையும் போலவே நாங்களும் இருக்கிறோம். சாதாரணமாக எங்களை விசுவாசிகள் என்று அழைப்பதற்கு பதிலாக, மதம் மாறியவர்கள் என்று குறிப்பிடுவது மனரீதியாக காயப்படுத்துவதாகும், மேலும் அப்படி அழைப்பது தவறானது. இருப்பினும், இந்தப் புத்தகத்தின் விவாதத்தின் தன்மை கொஞ்சம் அதிக தெளிவாக இருக்க வேண்டும் என்பதால், நான் பொதுவாக "இஸ்லாமிருந்து மனந்திரும்பியர்கள்" என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன். மற்றவர்கள் "முஸ்லீம் பின்னணியிலிருந்து வந்த விசுவாசி" போன்ற வேறு சொற்களை விரும்பலாம். இது கட்டாயமில்லை என்றாலும்கூட, நீங்கள் இந்தக் கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளை "கிறிஸ்தவர்கள்" அல்லது "விசுவாசிகள்" என, அல்லது உங்கள் சபையில் உள்ளோரை அழைக்க நீங்கள் பரவலாகப் பயன்படுத்தும் சொல்லையேப் பயன்படுத்துங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். |