Grace and TruthThis website is under construction ! |
|
|
Home Afrikaans |
Home -- Tamil -- 17-Understanding Islam -- 048 (Fear for Muslims)
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Ukrainian -- Yoruba
Previous Chapter -- Next Chapter 17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
இஸ்லாத்தில் சுவிசேஷத்திற்கு இருக்கும் தடைகளைப் புரிந்துகொள்ளுதல்
அத்தியாயம் 9: முஸ்லீம்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கும்போது கிறிஸ்தவர்கள் கடந்து வர வேண்டிய தடைகள்
9.3. முஸ்லீம்களைப் பற்றிய பயம்முந்தைய காரணத்தோடுகூட, சுவிசேஷத்தைக் கேட்கும் முஸ்லீம்களுக்கு என்ன நடக்கும் என்ற பயமும் நம்மைத் தடுத்து நிறுத்தக் கூடும். இது பின்னர் விரிவாக விவாதிக்கப்படும், ஆனால் பல பகுதிகளில், கிறிஸ்தவ மதத்திற்கு மாறுவது, வேதத்தை வாசிப்பது அல்லது கிறிஸ்தவர்களுடன் மதம் சார்ந்த உரையாடலில் ஈடுபடுவது கூட, சட்ட ரீதியான (சிறைப்படுத்துதல் அல்லது மரண தண்டனை) அல்லது சமூக ரீதியான விளைவுகளுக்கு வழிவகுக்கும். சில கிறிஸ்தவர்கள் இந்த விளைவுகளுக்குப் பொறுப்பேற்க விரும்பவில்லை. நிச்சயமாக, இந்த அச்சம் மேலே சுட்டிக்காட்டப்பட்ட சுவிசேஷத்தை அறிவிப்பதின் அவசியத்தினாலும், நாம் பகிர்ந்துகொள்ளும் கடவுளுடனான உறவின் மதிப்பினாலும், இறுதியில் மீட்பது கடவுள் ஒருவரே, நாம் வேறு ஒருவரை மனமாற்றம் செய்பவர்கள் அல்ல, என்ற அறிவினாலும் நிறைந்திருக்க வேண்டும். |