Home
Links
Contact
About us
Impressum
Site Map?


Afrikaans
عربي
বাংলা
Dan (Mande)
Bahasa Indones.
Cebuano
Deutsch
English-1
English-2
Español
Français
Hausa/هَوُسَا
עברית
हिन्दी
Igbo
ქართული
Kirundi
Kiswahili
മലയാളം
O‘zbek
Peul
Português
Русский
Soomaaliga
தமிழ்
తెలుగు
Türkçe
Twi
Українська
اردو
Yorùbá
中文



Home (Old)
Content (Old)


Indonesian (Old)
English (Old)
German (Old)
Russian (Old)\\

Home -- Tamil -- 17-Understanding Islam -- 072 (Did Mohammed immediately dictate the Qur’an to his companions who wrote it down without any editing?)
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Telugu? -- Ukrainian -- Yoruba

Previous Chapter -- Next Chapter

17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
பாகம் ஐந்து: கிறிஸ்தவத்துக்கான முஸ்லீம்களின் எதிர்ப்பைப் புரிந்துகொள்ளுதல்
அத்தியாயம் 13: கிறிஸ்தவத்துக்கு இஸ்லாமின் எதிர்ப்பு
13.1. குர்ஆன் அப்படியே இருக்கிறது, ஆனால் பைபிள் திருத்தப்பட்டிருக்கிறது என்ற நம்பிக்கை

13.1.2. முகமது குர்ஆனை உடனடியாகவே தோழர்களிடம் சொல்லி, எழுதச் சொன்னாரா? எந்த திருத்தமும் இல்லாமல் அப்படியே எழுதப்பட்டதா?


முகமது உடனடியாக தான் சொல்வதைக் கேட்டு எழுதும்படி தனது தோழர்களுக்கு கட்டளையிட்டார் என்ற கூற்று இஸ்லாமிய வரலாற்று ஆதாரங்களால் ஆதரிக்கப்படவில்லை. குர்ஆனை அவர் தன்னிச்சையாகக் கூறுகையில் அதைத் திருத்தியதாகவும் கூட நமக்குக் கூறப்படுகிறது:

நபி அவர்கள் எழுதும்படி எனக்குக் கட்டளையிட்டார் என்று சையது பின் தாபித் இவ்வாறு விளக்குகிறார்: முஃமின்களில் வீட்டிலேயே இருப்போரும், அல்லாஹ்வின் பாதையில் பாடுபட்டு போராடுபவர்களும் சமமாக மாட்டார்கள் என்று (நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்). ஸைத் (ரலி) அவர்கள் மேலும் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டுக் கொண்டிருந்த போது இப்னு உம்மி மக்தூம் (ரலி) வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் போரிடும் சக்தி எனக்கு இருந்தால் நிச்சயமாக (போரிடுவேன்)” என்று கூறினார். அவர் பார்வையற்றவர் ஆவார். அப்போது, என் தொடை எலும்பு முறிந்துவிடுமோ என்று நான் அஞ்சிய நிலையில், அல்லாஹ் தனது தூதருக்கு வஹி (வேத மறை) அருளினான். பிறகு, அந்த நிலை நபியை (ஸல்) விட்டு நீங்கியது. அல்லாஹ், “எவர்கள் காயத்தால் தடுக்கப்பட்டிருக்கிறார்களோ, அல்லது பார்வையற்றவர்களோ, அல்லது முடக்குவாதம் உள்ளவர்களோ (அவர்கள் தவிர)” என்று (வஹி) அருளினான்.

முகமதுவின் மரணத்திற்குப் பிறகு, குர்ஆனின் முழு அத்தியாயங்களும் மறந்துவிட்டதாகவும், அவை எங்களிடம் இல்லை என்றும் அவரது தோழர்கள் கூறுகிறார்கள். முகமது நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரான ஆபு முஸா அல்-அஷ்அரி, அல்-பஸ்ரா மக்களுக்கு குர்ஆன் கற்றுக்கொடுப்பவர்களைச் சந்திப்பதற்காக அனுப்பப்பட்டார், மேலும் குர்ஆனை மனனம் செய்துள்ள முந்நூறு பேர் அவரைச் சந்திக்க வந்தனர். அவர் சொன்னார்:

“நீங்கள் அல்-பஸ்ரா மக்களிலும், அவர்களின் குர்ஆன் கற்றுக்கொடுப்பவர்களிலும் சிறந்தவர்கள் ஆவீர்கள், ஆகவே அதை ஓதுங்கள். ஆனால், நீண்ட ஆயுள் உங்கள் இதயங்களை கடினமாக்க விடாதீர்கள், உங்களுக்கு முன்பாக வந்தவர்களின் இதயங்கள் கடினமடைந்தது போல்.” ‟ நாங்கள் ஒரு சூராவை ஓதி வந்தோம், அதை அல்-பராஅத் (இன்று அத்தவ்பா என அழைக்கப்படுகிறது) என்ற சூராவின் நீளத்திற்கும் வலிமைக்கும் ஒப்பிட்டு வந்தோம், பின்னர் அதை மறந்து விட்டேன். ஆனால் அதில் (இந்த வார்த்தைகள்) எனக்கு நினைவிருக்கிறது: “ஆதமுடைய மகனுக்கு இரண்டு பள்ளத்தாக்குகள் செல்வம் இருந்தாலும் அவன் மூன்றாவதை விரும்புவான், ஆனால் ஆதமுடைய மகனின் வயிற்றை மண் தவிர வேறு எதுவும் நிரப்பாது.” நாங்கள் முஸபிஹாத் என்பதை ஒத்திருக்கும் ஒரு சூராவை ஓதி வந்தோம், ஆனால் அதை மறந்து விட்டேன். ஆனால் அதில் (இந்த வார்த்தைகள்) எனக்கு நினைவிருக்கிறது: “விசுவாசிகளே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள். இது உங்கள் கழுத்தில் சாட்சியாக எழுதப்பட்டு, மறுமை நாளில் அது பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். (ஸஹீஹ்'' முஸ்லீம்)

இன்றைய குர்ஆனில் இந்த அத்தியாயம் எங்கும் காணப்படவில்லை, எனவே நம்மிடம் காணாமல் போன அத்தியாயம் உள்ளது, அல்லது (முஸ்லீம்கள் தங்கள் இரண்டாவது மிகவும் நம்பகமான ஹதீஸ் தொகுப்பு என்று கருதும்) ஸஹீஹ் முஸ்லீம் குர்ஆன் தொகுப்பு பற்றி தவறாகக் கூறுகிறது, எனவே அதை நம்ப முடியாது (இது எல்லாவிதமான சிரமங்களையும் ஏற்படுத்தும்).

www.Grace-and-Truth.net

Page last modified on April 24, 2026, at 01:16 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)