Grace and TruthThis website is under construction ! |
|
|
Home Afrikaans |
Home -- Tamil -- 17-Understanding Islam -- 085 (Rejection by family)
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Telugu? -- Ukrainian -- Yoruba
Previous Chapter -- Next Chapter 17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
பாகம் ஆறு: இஸ்லாத்திலிருந்து கிறிஸ்தவ விசுவாசத்திற்கு வந்தவர்களைப் புரிந்துகொள்ளுதல்
பதினான்காவது 14: இஸ்லாத்திலிருந்து புதிதாக மதம் மாறியவர்கள் சந்திக்கும் சமூக சிரமங்கள்
14.1. குடும்பத்தினரால் புறக்கணிக்கப்படுதல்இதுவே உலகெங்கிலும் இஸ்லாத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்கள் அனுபவிக்கும் மிகவும் பொதுவான விளைவு. அவர்களது குடும்பத்தினர் அவர்களை முழுவதுமாக ஒதுக்கிவிடுவதற்கும், எந்தவிதமான உறவையும் தொடர்ந்து வைத்துக் கொள்ள மறுப்பதற்கும் மிக அதிகமான சாத்தியம் உள்ளது. எனது சொந்த தந்தையே நான் கிறிஸ்தவனாக மாறியதற்காக என்னைப் பற்றி காவல்துறைக்குப் புகார் கொடுத்தார். பல வருடங்கள் கழித்து, அவர் இறந்த பிறகு, நான் நாட்டை விட்டு வெளியேறி, விஷயங்கள் சரியாகி இருக்கலாம் என்று நினைத்து திரும்பி வந்தபோது, என் சகோதரன் என்னைப் பற்றி மீண்டும் காவல்துறைக்குப் புகார் கொடுத்தார். இஸ்லாமிய கலாச்சாரம் பொதுவாக மானம்/ அவமானம் என்ற அடிப்படையில் அமைகிறது. இதில், குழுவின் நன்மை தனிநபரின் நன்மையை விட உயர்வானதாகக் கருதப்படுகிறது, குடும்பத்தின் கௌரவமே எல்லாவற்றிற்கும் மேலாகக் கருதப்படுகிறது. இஸ்லாத்தை விட்டு வெளியேறுவது என்பது ஒருவர் தனது குடும்பத்திற்கு கொண்டு வரக்கூடிய மிகப்பெரிய அவமானங்களில் ஒன்றாகும். எனவே, சமூகத்தின் பார்வையில் மானத்தை மீட்டெடுப்பதற்காக, குடும்பத்தினர் அனைத்து உறவுகளையும் துண்டித்துவிடுவார்கள் அல்லது சில சமயங்களில் (துரதிர்ஷ்டவசமாக நாம் நினைப்பது போல் அரிதாக இல்லை), அவமானத்தை ஏற்படுத்திய குடும்ப உறுப்பினரைக் கொலை செய்வார்கள். |