Grace and TruthThis website is under construction ! |
|
|
Home Afrikaans |
Home -- Tamil -- 17-Understanding Islam -- 089 (Legal threat)
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Telugu? -- Ukrainian -- Yoruba
Previous Chapter -- Next Chapter 17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
பாகம் ஆறு: இஸ்லாத்திலிருந்து கிறிஸ்தவ விசுவாசத்திற்கு வந்தவர்களைப் புரிந்துகொள்ளுதல்
பதினான்காவது 14: இஸ்லாத்திலிருந்து புதிதாக மதம் மாறியவர்கள் சந்திக்கும் சமூக சிரமங்கள்
14.5. சட்டப்பூர்வ மிரட்டல்இஸ்லாமிய பெரும்பான்மை கொண்ட பெரும்பாலான நாடுகளில், இஸ்லாத்தை விட்டு வெளியேறுவது சட்டப்பூர்வ குற்றமாகும், இதற்கு சிறை தண்டனை விதிக்கப்படும்; சில நாடுகளில் மரண தண்டனை விதிக்கப்படலாம். நிச்சயமாக இது மிகவும் அச்சமூட்டும் விஷயம்தான்! உங்கள் சபையில் புதிதாக மதம் மாறிய ஒருவர் இணைந்திருந்தால், அவர்கள் உங்களுடன் தொடர்புகொள்வதன் மூலம் எடுத்துக்கொள்ளும் ஆபத்தான சிரமங்களை நினைவில்கொள்வது நல்லது. மேலும், மதம் மாறியவரின் அச்சங்களுக்கு மதிப்பளிப்பதும், தேவைப்படும் இடங்களில் புத்திசாலித்தனமான பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை பின்பற்றுவதும் அவசியம். இது புதிதாக கிறிஸ்தவ மதத்திற்குமாறியவர்கள் தங்களது நம்பிக்கைகளை சமரசம்செய்ய நாம் ஊக்குவிக்க வேண்டும் என்பதைக் குறிக்கவில்லை. ஆனால், எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லாத சில ஆபத்துகள் நிச்சயமாக இருக்கும். எந்த சூழ்நிலையிலும், மதம் மாறியவருடன் சேர்ந்து அவர்களுக்காகவும் ஜெபம் செய்யலாம், அவர்கள் (அல்லது அவர்களின் குடும்ப உறுப்பினர்) கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டால் நடைமுறை ஆதரவை வழங்கலாம். உங்கள் சபையில் மதம்மாறி வந்த ஒருவர் ஆபத்திலிருந்தாலும் இல்லாவிட்டாலும், கிறிஸ்தவ நிறுவனங்களின் பணிகளைப் பின்தொடர்வதையும், நன்கொடை அளிப்பதையும், கூட பங்கேற்பதையும் நீங்கள் விரும்பலாம். இதுபோன்ற நிறுவனங்களில் Barnabas Fund, Open Doors, or Voice of the Martyrs ஆகியவை அடங்கும். இவை துன்புறுத்தப்படும் சபையையும் தனி நபர்களையும் பாதுகாத்து ஆதரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. நிச்சயமாக, இதுபோன்ற குழுக்கள் ஆற்ற வேண்டிய மிக முக்கிய பங்கு உள்ளது. |