Grace and TruthThis website is under construction ! |
|
|
Home Afrikaans |
Home -- Tamil -- 17-Understanding Islam -- 099 (Be patient and understanding)
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Telugu? -- Ukrainian -- Yoruba
Previous Chapter -- Next Chapter 17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
பாகம் ஆறு: இஸ்லாத்திலிருந்து கிறிஸ்தவ விசுவாசத்திற்கு வந்தவர்களைப் புரிந்துகொள்ளுதல்
பதினான்காவது 15: சபைக்கான ஆலோசனை
15.8. பொறுமையாகவும் புரிந்துணர்வுடனும் இருங்கள்பழக்கங்கள் மனதில் ஆழமாக வேரூன்றியுள்ளன. அவை மாற காலமாகும். பொதுவாக, இஸ்லாமிய மதத்திலிருந்து மாறியவர் – பொதுவாகச் சொல்லப்போனால் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் - சுயநலம் கொண்டவராக இருப்பார், தனக்கு என்ன நடக்கும், நடக்காமல் போகலாம் என்று எப்போதும் சிந்திப்பார். கடவுள் மீது எந்தச் சூழ்நிலையிலும் நம்பிக்கை வைக்க முடியும் அளவுக்கு முதிர்ச்சியடைய காலம் எடுக்கும் - சில சமயங்களில் அதற்கு பல ஆண்டுகள் கூட ஆகலாம். பழைய பழக்க வழக்கங்களை மாற்றுவது கடினம்; முஸ்லீம்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் தங்களுக்கு என்ன நடக்கும் என்பதைப் பற்றி சிந்தித்திருக்கலாம், ஏனென்றால் அல்லாவுடனான அவர்களின் உறவு - எனக்கு என்ன நடக்கப் போகிறது? என்பதை மையமாகக் கொண்டே இருக்கிறது. குர்ஆன் கூறுகிறது: “நம் வசனங்களின் மேல் நம்பிக்கை கொண்டோர் யாரென்றால் அவர்கள், அவற்றின் மூலம் நினைவூட்டப்பட்டால், அவர்கள் விழுந்து ஸுஜூது செய்தவர்களாய்த் தம் இறைவனைப் புகழ்ந்து, துதிப்பார்கள்; அவர்கள் பெருமை அடிக்கவும் மாட்டார்கள். அவர்களுடைய விலாக்களைப் படுக்கைகளிலிருந்து (தூக்கத்தைத் துறந்து) உயர்த்தி அவர்கள் தங்களுடைய இறைவனை அச்சத்தோடும் நம்பிக்கை ஆர்வத்தோடும் பிரார்த்தனை செய்வார்கள்; மேலும் நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து (தானதர்மங்களில்) செலவும் செய்வார்கள்.” (குர்ஆன் 32:15-16)
புதிய மதம் தழுவியவருக்கு, அல்லாவுடனான அவரது முந்தைய உறவு தண்டனையின் பயமும், வெகுமதியின் நம்பிக்கையும் சார்ந்தே இருந்திருக்கும். இது, செயல்களின் அடிப்படையில் அமைந்த பிற மதங்களையும் போன்றதே. சில இறையியல் அறிஞர்கள் அப்போஸ்தலர் 9:16 (“அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன்”) போன்ற வசனங்கள் அனைத்து நம்பிக்கையாளர்களுக்கான வாக்குறுதிகளாக இருக்கின்றன என்று நம்புகிறார்கள். ஆகவே, இஸ்லாத்திலிருந்து புதிதாக மதம் மாறியவர், துன்பம் எப்போது வரும் என்பதை எதிர்பார்க்காமல், அது வருமா இல்லையா என்பது பற்றி எண்ணாமல் இருப்பார். இது புரிந்துகொள்ளக்கூடிய உணர்வு தான் என்றாலும், இதனால் கிட்டத்தட்ட அனைத்தையும் எதிர்மறையான பார்வையில் பார்க்க வேண்டியிருக்கும். இதுபோன்ற உணர்வு காலப்போக்கில் மங்கிவிடக்கூடும் என்றாலும், அது அதிகரித்து அளவுகடந்த சந்தேக உணர்வாக மாறவும் வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக, அந்த நபர் தனிமைப்படுத்தப்படவும், புதிய உறவுகளை உருவாக்குவதில் சிரமப்படவும் கூடும். கிறிஸ்தவர்களின் சில அணுகுமுறைகள் சில சமயங்களில் அவ்வளவு உதவிகரமாக இல்லை. புதிய கிறிஸ்தவ வாழ்க்கையின் தொடக்க காலத்தில், சில முதிர்ந்த விசுவாசிகளின் வழிகாட்டுதல் அவருக்கு தேவை. |