Grace and Truth

This website is under construction !

Search in "Tamil":

Home -- Tamil -- 08. Good News -- 8 How was Abraham's son redeemed?

This page in: -- Chinese -- English -- French -- German? -- Indonesian -- TAMIL -- Turkish

Previous lesson -- Next lesson

08. இஸ்லாமியருடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளுதல்

8 - ஆபிரகாமுடைய குமாரன் எவ்வாறு மீட்கப்பட்டான்?



சவால்: நற்செயல்களினால் மட்டுமே மனிதன் நரகத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, பரதீûஸச் சென்றடைய முடியும் என்ற குரானுடைய போதனையை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். இதனால்தான் அவர்கள் பாவ நிவாரண பலியின் மூலமாகவோ கிறிஸ்து சிலுவையில் செய்து முடித்த பதிலாள் மரணத்தின் மூலமாகவோ மீட்பு கிடைக்கும் என்ற போதனையை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இந்த விசுவாசத்தின் அடிப்படையில் மனிதன் தன்னுடைய நற்செயல்களினால் தன்னைத்தான் இரட்சித்துக்கொள்ள முடியாது. மாறாக ஒரு மூன்றாவது நபர் நம் பாவங்களுக்கான பதிலாளாக நம்முடைய பாவங்களுக்கான தண்டனையை தம்மீது ஏற்றுக்கொண்டால் மட்டுமே நாம் இரட்சிக்கப்பட முடியும். பதிலாள் மரணத்தின் மூலமான மீட்பைக் குறித்த போதனை எதையும் நாம் குரானில் பார்க்க முடியாது என்பது உண்மைதானா? அதனால் ஒரு முஸ்லிம், குரானுடைய போதனைகளின் அடிப்படையில், சிலுவையில் கிறிஸ்துவின் பதிலாள் மரணத்தின் மூலமாக கிடைக்கும் மீட்பை நிராகரிக்கத்தான் வேண்டுமா?

பதில்: முதலில் பார்க்கும்போது அப்படித்தான் தோன்றும். ஏனென்றால் சுரா 4:157-ல் கிறிஸ்து சிலுவையில் அறையப்படவோ, கொலை செய்யப்படவோ இல்லை என்றும் அவர் மற்றவர்களுக்காக மரித்திருக்க முடியாது, ஏனெனில் அவர் மரிக்கவே இல்லை என்றும் குரான் போதிக்கிறது. மாறாக அவரைக் கொலைசெய்ய வந்த எதிரிகளிடமிருந்து அல்லாஹ்தான் ஈஸôவைக் காப்பாற்றினார். அவர் மரித்து, மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருப்பதற்குப் பதிலாக அவர் மரிக்காமலே நேரடியாகப் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் (சுரா அன்னிஸôவு 4:158). இஸ்லாமியப் பாரம்பரியத்தின்படி (ஹதிஸ்) அவர் திரும்ப பூமிக்கு வரும்வரை வாழ்ந்துகொண்டிருக்கிறார். மேலும் குரானுடைய போதனையின்படி, ஒருவேளை கிறிஸ்து மரித்திருந்தால்கூட, அவருடைய மரணம் மற்றவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டிய தண்டனைக்கான பதிலாள் மரணமாக இருக்க முடியாது. ஏனென்றால் குரான் குற்றத்தினால் பாரஞ்சுமந்த ஒரு ஆத்துமாவின் பாரத்தை இன்னொரு ஆத்துமா சுமக்க முடியாது என்று போதிக்கிறது (சுரா அல் அன்ஆம் 6:164; பனி இஸ்ராயீல் 17:15; ஃபாத்திர் 35:18; அல் ஜுமர் 39:7; அந் நஜ்ம் 53:38).

ஆயினும் குரானை ஆழ்ந்து படிக்கும்போது இதற்கு விதிவிலக்குகள் இருப்பதைக் காணலாம். மூன்றாவது நபரினால் உண்டாகும் மீட்பைக் குறித்துப் பேசும் ஒரு முக்கியமான குரான் பகுதி, இப்ராஹீமுடைய மகன் பலிசெலுத்தப்படும் சந்தர்ப்பத்தில் காணப்படுகிறது.

அந்தச் சம்பவம் சுரா அல் ஸஃப்ஃபாத் 37:99-111 வரை காணப்படுகிறது: 99. “மேலும் அவர் (இப்ராஹீம்) கூறினார்: “நிச்சயமாக நான் என் இறைவனிடத்தில் செல்பவன்; திட்டமாக அவன் எனக்கு நேர்வழியைக் காண்பிப்பான். 100. “என்னுடைய இறைவா! நீ எனக்கு நல்லோர்களிலிருந்து (ஒரு சந்ததியை) அளிப்பாயாக!” (என்று பிரார்த்தித்தார்.) 101. எனவே, நாம் அவருக்குப் பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயம் கூறினோம். 102. பின், (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய வயதை அடைந்தபோது, அவர் கூறினார்: “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவுகண்டேன்; இதைப் பற்றி உம் கருத்து என்ன, என்பதைச் சிந்திப்பீராக!” (அதற்கு மகன்) கூறினார்: “எனதருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள்; அல்லாஹ் நாடினால் - நீங்கள் என்னை பொறுமையாளர்களில் உள்ளவராகவே காண்பீர்கள்.” 103. ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிபட்டு, அவர் (இப்ராஹீம்) அவரைப் பலியிட முகங்குப்புற கிடத்தியபோது- 104. நாம் அவரை “இப்ராஹீமே!” 105. “திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர்; நிச்சயம் நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுக்கிறோம். 106. “நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்.” 107. ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம் (மீட்டுக்கொண்டோம்). 108. இன்னும், அவருக்காக பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டுவைத்தோம். 109. இப்ராஹீம் மீது சாந்தி உண்டாவதாக! 110. இவ்வாறே நாம் நன்மை செய்வோருக்கு, கூலிகொடுக்கிறோம். 111. நிச்சயமாக அவர் விசுவாசிகளான நம் அடியார்களில் உள்ளவர்.”

இவற்றில் முடிவான வசனம் 107 ஆகும். அராபிய மூலத்திலிருந்து அதை எழுத்தின்படி மொழிபெயர்க்கும்போது, “கொலைசெய்யப்பட்ட மாபெரும் (வல்லமையுள்ள) பலியின் மூலம் நாம் அவரை மீட்டுக்கொண்டோம்” என்று பொருள் வருகிறது. அராபிய மொழியில் வா ஃபடே நாஹு பை தாபின் ஆதிம் (wa-faday-naa-hu bi-dhabhin 'adhim). இந்தக் குரான் வசனத்தில் முழுமையான வல்லமையை அறிந்துகொள்ளும்படி அல்லாஹ்வின் வெளிப்பாட்டின் ஒவ்வொரு பகுதியையும் துல்லியமாகத் தியானிக்க வேண்டும். வசனத்திலிருந்தும் அது அமைந்துள்ள சூழமைவிலிருந்தும் கேள்விகளைக் கேட்பதன் மூலமாக நாம் அவ்வாறு தியானிக்கலாம்.

1. “வா-ஃபடாய்” (wa-faday) - “விடுவித்து” – இங்கு மீட்பு (ஃபித்யா அல்லது ஃபைதா) கொல்லப்பட்ட பலியின் மூலமாக பெறப்படுகிறது என்று குரான் தெளிவாகப் போதிக்கிறது. குரானுடைய பெரும்பான்மையான மற்ற போதனைகளின் அடிப்படையில் முஸ்லிம் தன்னிடத்திலேயே கேட்கக்கூடிய கேள்விகள்: அல்லாஹ் இந்த இடத்தில் ஏதோ ஒன்றைச் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன? (மீட்கவோ, கொல்லப்படுவதற்கான பலியைக் கொண்டுவரவோ, அதைக் கொல்லவோ, பலிசெலுத்தவோ வேண்டிய அவசியம் என்ன?). இப்ராஹீமை அவருடைய மகனைக் கூட்டிக்கொண்டு சென்றுவிடும்படி மட்டும் கூறிவிட்டு ஏன் அல்லாஹ் நிறுத்தவில்லை? தொடர்ந்து பலியைப் பற்றி ஏன் அவர் பேசினார்? ஒரு மீட்பு ஏன் அவசியமாயிருந்தது?

2. “…நா…” (naa) – “நாம்” – இந்த இடத்தில் மீட்பு நடைபெற்றது என்பதை மட்டும் குரான் சொல்லவில்லை. இறைவனே மீட்பராயிருக்கிறார் என்பதையும் குரான் சொல்லுகிறது. இங்கு நாம் என்ற உயர்வுப் பன்மை தேவ தூதர்களையோ மக்கûளோ குறிப்பிடாமல், இறைவனையே குறிக்கக்கூடிய வார்த்தையாக இருக்கிறது. இங்கு ஒரு முஸ்லிம் கட்டாயம் கேட்கவேண்டிய கேள்விகள்: இப்ராஹீமே தன்னுடைய மகனை ஏன் விடுவிக்கவில்லை? அல்லாஹ் ஏன் அதைச் செய்யவேண்டியிருந்தது? இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பலி பலத்தது அல்லது பெரியது என்று சொல்லப்பட்டிருக்கிறபடியால், அது உலகத்திலிருந்து வருகிற பலியாக இராமல், பரலோகத்திலிருந்து வருகிற பலியாக இருக்க வேண்டும். இப்போது ஒரு முஸ்லிமிற்கு இன்னொரு கேள்வி எழ வேண்டும். ஏன் இப்ராஹீம் கொல்லப்படுவதற்கான பலியைத் தானே கொடுக்கவில்லை? அல்லது குறைந்தபட்சம் அந்த பலிக்கான கூலியையாவது ஏன் அவர் கொடுக்கவில்லை? ஏன் அந்த பலி பூமியிலிருந்து வராமல் பரத்திலிருந்து வர வேண்டும்?

3. “…ஹு…” (hu) – “அவரை” – இந்த வார்த்தை இப்ராஹீமிடம் இறைவன் கேட்ட அனைத்தையும் தன்னுடைய தகப்பன் தனக்குச் செய்யும்படி அனுமதித்த மாபெரும் கீழ்ப்படிதலுள்ள இப்ராஹீமுடைய மகனைக் குறிக்கிறது. இங்கு ஒரு முஸ்லிம் கேட்க வேண்டிய கேள்வி: இப்ராஹீமுடைய மகன் விடுவிக்கப்படும் அளவுக்கு குற்றமுள்ளவராக இருந்தாரா? நிச்சயமாக இல்லை. அவர் கீழ்ப்படிதலுக்கான முழுமையான உதாரணமாகக் காணப்பட்டார். இப்ராஹீம் தன்னுடைய மகனைப் பலியிட விரும்பியதால் பாவம் செய்து மீட்கப்பட வேண்டியவராக மாறினாரா? மீண்டும் இதற்கான பதில் “இல்லை” என்பதுதான். ஏனெனில் இறைவன் இப்ராஹீமுடைய மகனைப் பலியிடும்படி வெளிப்படையாகக் கட்டளை கொடுத்திருந்தாரே. இதிலிருந்து நாம் அறிந்துகொள்கிற உண்மை இதுதான்: நான் செய்யும் நற்செயல்கள் என்னிலுள்ள பாவத்திலிருந்து என்னை மீட்டு இரட்சிக்காது.

4. “பை தாபின்” (bi-dhabhin) - “…கொலைசெய்யப்பட்ட பலியின் மூலம்…” - விடுவிக்கும் பலியானது கொல்லப்பட்டது என்று குரான் சாட்சியிடுகிறது. ஏனெனில் அது கொலைசெய்யப்படும் பலி, அது மரிப்பதற்காகக் கொலைசெய்யப்படுகிறது. இங்கு ஒரு முஸ்லிம் கேட்க வேண்டிய கேள்வி: மகனை விடுவிப்பதற்காக ஒரு பலியைக் கொண்டு அதன் இரத்தத்தைச் சிந்த வேண்டிய அவசியம் என்ன?

5. “…மாபெரும் (வல்லமையான)…” ('adhim) – “ஆதிம்” – இந்த வசனத்திலுள்ள மிகவும் தனித்தன்மை வாய்ந்த வார்த்தை இதுவாகும். இந்த வார்த்தை ஒரு முஸ்லிமிடம் கீழ்க்கண்ட கேள்விகளைக் கட்டாயமாக எழுப்புகிறது. கொல்லப்பட்ட பலி வலுவானதாக (மாபெரியதாக) இருக்க வேண்டிய அவசியம் என்ன? அது அல்லாஹ்விடமிருந்து வருவதால் மாபெரியதாக (வலுவானதாக) இருக்கிறதா? அல்லது அது தன்னில்தானே மாபெரியதாக (வலுவானதாக) இருக்கிறதா? அல்லாஹ்வின் 99 நாமங்களில் ஒன்று அல் ஆதிம் (மாபெரிய வல்லமையுள்ளவர்). ஆகவே இந்த மாபெரும் வல்லமையுள்ள பலி அல்லாஹ்வின் நாமத்தைச் சுமந்து வருவதால் அது தெய்வீகப் பலியாகத்தானே இருக்க வேண்டும்?

குரானுடைய போதனைகளே இந்தக் கடுமையான கேள்விகளை எழுப்புவதால் இவற்றுக்கான பதிலைப் பெற்றுக்கொள்வதற்கு ஒரே ஒரு வழி மட்டுமே இருக்கிறது: அது நீங்கள் நற்செய்தியை விசுவாசித்து முழு உலகத்தின் பாவத்திற்காக தன்னையே பலியாக சிலுவையில் ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவின் நற்செய்தியை விசுவாசிப்பதே ஆகும். அல்லாஹ்வின் இந்த மாபெரும் (வலுவான) பலி இப்ராஹீமுடைய மகனையும் உங்களையும் விடுவித்திருக்கிறது.

துக்க செய்தி: பொதுவாக முஸ்லிம்கள் நினைப்பதற்கு மாறாக, குரான் இன்னொரு நபருடைய பதிலாள் மரணத்தினால் உண்டாகும் மீட்பைக் குறித்துப் பேசுகிறது. இப்ராஹீமுடைய மகன் எவ்விதமாக மீட்கப்பட்டான் என்பதே அந்தக் குரான் பகுதியாகும்.

நல்ல செய்தி: இதனால், குரானுடைய போதனைகளின் அடிப்படையில், சிலுவையில் பதிலாள் பலியாக மரித்த கிறிஸ்துவின் மூலமாக உண்டாகும் மீட்பின் மீது நம்பிக்கை கொள்ள முடியும். ஆம். அப்படிச் செய்வதன் மூலமாகவே ஒரு முஸ்லிம் இந்தக் குரானுடைய பகுதியைப் புரிந்துகொள்ள முடியும். மற்றப்படி இது புரிந்துகொள்வதற்கு முடியாத ஒரு பகுதியாகவே காணப்படும்.

சாட்சி: என்னுடைய பெயர் பாராக்கத்துல்லா, நான் எகிப்தைச் சேர்ந்தவன். நான் ஒரு அதிகாரியாகவும் முஸ்லிம் தலைவனாகவும் இருந்தேன். ஒரு நாளில் ஒரு துண்டுக் காகிதம் என்னுடைய கவனத்தைக் கவர்ந்தது. அதில் “ஆனால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று எழுதியிருந்தது. அதை நான் எடுத்து முழுவதும் வாசித்தேன். அதில் கிறிஸ்து பேசியிருந்தார். அவர் சொன்னது: உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்;.. (மத்தேயு 5:43-44). நற்செய்தியிலிருந்து வரும் இந்த வாசகம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஒரு முஸ்லிமாக எனக்கு கிறிஸ்துவைப் பற்றி தெரியும். இறைவனுடைய கட்டளையை மாற்றுவதற்கு இவருக்கு உரிமை உண்டா? அதற்கான அதிகாரம் அவருக்கு உண்டா? இந்தக் கேள்விக்கு தெளிவான பதிலைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கு, கெய்ரோவில் உள்ள அல்-அஸôர் பல்கலைக்கழகத்திலுள்ள மாலை வகுப்பில் சேர்ந்தேன். நான்கு வருடங்கள் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் பிற மதங்களைக் குறித்த பாடத்தை நான் படித்துப் பட்டம் பெற்றேன். இந்து மதம், புத்த மதம், கன்பூசிய மதம், யூத மதம், கிறிஸ்தவம் ஆகியவற்றையும் அவர்களுடைய வேத நூல்களையும் படித்தேன். நான் குரானை நன்கு படித்து அதை மற்ற வேத நூல்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தேன். இந்தப் படிப்பின் மூலமாக நான் கிறிஸ்தவனாகி விட்டேன். கிறிஸ்து இறைவனுடைய சட்டத்தை மாற்றுவதற்கு உரிமையுள்ளவர். ஏனெனில் அல்லாஹ்வைப் போல அவரும் மக்களுடைய கீழ்ப்படிதலைக் கோருவதற்கு அதிகாரம் படைத்தவர் என்று குரான் குறிப்பிடுகிறது (சுரா ஆல இம்ரான் 3:50; அஜ் ஜுக்ருஃப் 43:63). அப்போது நான் கற்றுக்கொண்ட காரியங்களை நான் முஸ்லிம்களுக்குச் சொல்லுகிறேன். இந்த துண்டுப் பிரதியில் எவ்வாறு இப்ராஹீமின் மகன் விடுவிக்கப்பட்டார் என்பதைப் பற்றி நீங்கள் வாசிப்பவைகள் அந்தப் படிப்பில் நான் கண்டுபிடித்தவைகளே. இவைதான் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து இறைவனுடைய மகன் என்ற விசுவாசத்திற்குள் என்னை நடத்தியது. என்னுடைய இந்த புதிய விசுவாசத்திற்காக நானும் என்னுடைய குடும்பத்தாரும் அப்போதிருந்து உபத்திரவங்களைச் சந்தித்து வருகிறோம். ஆனால் இன்றுவரை கிறிஸ்துவுக்கு உண்மையுள்ளவனாக நான் நிலைத்திருக்கிறேன்.

விண்ணப்பம்: இப்ராஹீமுடைய மகனை விடுவித்த இரக்கமுள்ள இறைவனே உமக்கு என் உள்ளத்திலிருந்து நன்றி செலுத்துகிறேன். எங்களுடைய பாவத்திற்காக நீர் எங்களை நரகத்திற்கு அனுப்ப உமக்கு உரிமையுண்டு. ஆனால் நாங்கள் மீட்கப்படுவதற்கான ஒரு வழியை நீர் ஆயத்தப்படுத்தினீர். நாங்கள் நரகத்திற்குப் போகக்கூடாது என்பதற்காக நீர் ஏற்படுத்தின வழியை நாங்கள் விசுவாசிக்கிறோம்.

கேள்விகள: குரானுடைய போதனையின்படி இப்ராஹீமின் மகனை விடுவித்தவர் யார்? முதலில் அவர் ஏன் விடுவிக்கப்பட வேண்டும்? நரக தண்டனையிலிருந்து உங்களை யார் விடுவிக்கிறார்?

மனப்பாடம்: தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். (யோவான் 3:16 – நற்செய்தியிலுள்ள கிறிஸ்துவின் வார்தைகள்)

www.Grace-and-Truth.net

Page last modified on June 07, 2013, at 11:18 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)