4.08 - ஆறாவது கட்டளை: கொலை செய்யாதே
யாத்திரகாமம் 20:13
“கொலை செய்யாதிருப்பாயாக” (யாத்திரகாமம் 20:13)
4.08.1 - மறுக்க இயலா உண்மை
பெண்ணிடத்தில் பிறந்தவனும், அவனது தகப்பனால் நேசிக்கப்பட்டவனுமாய் இருந்த முதல் மனிதன் தனது சகோதரனை கொன்ற கொலைகாரன் ஆவான். வேதாகமம் இந்த குற்றத்தை வெளிப்படுத்திக் காண்பிக்கிறது. மனித இருதயத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள தீமையாக இருக்கிறது. எல்லா மனிதர்களும் கொலைகாரனுக்குரிய குணங்களை தங்களில் சுமந்து கொண்டுதான் உள்ளார்கள். ஆதாம் இறைவனைவிட்டு முற்றிலும் பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்தான். அவனது சொந்த விருப்பங்கள் மற்றும் நம்பிக்கைகள் தான் அவனை வழிநடத்தியது. தானே எல்லாவற்றிற்கும் மையமானவன் என்றும் மற்றவர்களை விட மேலானவன் என்றும் அவன் உள் மனதில் எண்ணிக் கொண்டிருந்தான். யாரேனும் ஒருவர் பலம், ஞானம், இறைபக்தி அல்லது அதிக அழகுடன் தோன்றினால் அவன் பொறாமை கொள்கிறான், அவனை வெறுக்கிறான். ஒவ்வொருவனும் ஒரு குட்டிக் கடவுளாக விரும்புகிறான், மற்றவர்களால் ஆராதிக்கப்பட விரும்புகிறான். ஆனால் பெருமையும், சுய நீதியும் அழிவுக்குரிய தன்மைகளைக் கொண்டுள்ளது.
சாத்தானை “ஆதியிலிருந்து கொலை பாதகன்” என்று இயேசு அழைக்கிறார். மனிதனுக்கு இறைவனுடன் உள்ள மெய்யான ஐக்கியத்தை சாத்தான் அகற்றினான். எனவே பாவம் மனுக்குலத்தை ஆளுகை செய்கின்றது; “பாவத்தின் சம்பளம் மரணம்” ஆனால் இறைவன் நமக்கு ஒரு வழியை தந்திருக்கின்றார். அவரது அன்பு மற்றும் நீதியினால் அவரிடம் திரும்பும்படி செய்கின்றார். இந்த தருணத்தை பயன்படுத்திக் கொள்ளும் ஒவ்வொருவரும் இரட்சிக்கப்படுகிறார்கள். அவரது மனதில் புதுப்பிக்கப்படுகிறார். அவரது வாழ்வின் இலக்காக இறைவனை பெறுகின்றார். இன்றும் நித்திய வாழ்வை பெற்றுக் கொள்கிறார். இது அவரது வாழ்விற்கு நோக்கத்தையும், அர்த்தத்தையும் தருகின்றது.
மனிதன் கொல்வதற்கான அநேக நோக்கங்கள் மற்றும் காரணங்களைக் கொண்டுள்ளான். மனிதனின் இருதயத்திலிருக்கும் அனைத்து தீய சிந்தனைகளும் கொலை என்று இயேசு வெளிப்படுத்துகிறார். (மத்தேயு 15:19) மனிதனுடைய தீய நோக்கத்தை இறைவன் தமது பரிசுத்தத்தில் எதிர்க்கின்றார். அவனது தீய நோக்கங்களை அவர் தடை செய்கின்றார். “கொலை செய்யாதிருப்பாயாக” என்று அவர் கட்டளை இடுகின்றார். அனைத்து விதமான கொலைகளும், தற்கொலையும் இறைவனுடைய சித்தத்திற்கு எதிராக உள்ளது. இறைவனுக்கு எதிரான கலகத்திற்கு சற்றும் குறையாத பாவமாக இருக்கின்றது. மற்றவர்களை அலட்சியமாக நடத்துபவர்களும், பசியுடன் இருப்பவர்களைக் குறித்து அக்கறையற்றிருப்பவர்களும், கொலைக்காரர்களின் பட்டியலில் இடம் பெறுகிறார்கள். பிறரை காயப்படுத்துகிறவர்கள், உணவில் விஷம் கலப்பவர்கள் அல்லது அதை ஆதரிப்பவர்கள், ஒருவன் கொல்லப்படும்போது அவர்களுடன் இணைந்திருப்பவர்கள் அனைவரும் நித்திய நியாயத்தீர்ப்பில் நிற்பார்கள். பிறரை துன்பப்படுத்துவதன் மூலம் அவர்களது வாழ்நாளை குறைக்கின்றவர்களும் வேதாகமத்தின்படி கொலைக்காரர்கள் ஆவார்கள். (ரோமர் 13:1-18) நமது உடன் மனிதனுக்கு நம்மை உக்கிராணக்காரர்களாக இறைவன் வைத்திருக்கிறார். எனவே நாம் காயீனைப் போல கூறமுடியாது. “ நான் என் சகோதரனுக்கு காவலாளியோ?”
4.08.2 - தண்டனை & பழிவாங்குதல்
பழைய ஏற்பாட்டில் மரணதண்டனை தீர்ப்பு என்பது ஒவ்வொரு கொலை மற்றும் தாக்குதலுக்கு எதிரான நீதியின் முழுமையடைதல் உள்ளது. (யாத்திராகமம் 21:12,14,18). கோத்திரங்களுக்கிடையில் வாழ்ந்த அநேக மக்களுக்கு இது ஓர் ஆயுள் காப்பீட்டைப் போல் இருந்தது. இதன் நிமித்தமாக ஏற்படும் பயம் ஒவ்வொரு தனிநபருக்கும் பாதுகாப்பு ஏற்படுவதற்கு காரணமாக இருந்தது. ஒவ்வொரு தாக்குதலின் அளவுக்கு ஏற்ப தண்டனையின் தன்மையை” கண்ணுக்கு கண்; பல்லுக்குப் பல்” என்ற சட்டம் வலியுறுத்துகின்றது. ஆனால் கோத்திரத் தலைவன் கொல்லப்படுகிற காரியத்தில் தண்டனை பலமடங்கு அதிகரிக்கப்படுகிறது. லாமேக்கை கொன்றால் 77 மக்கள் கொல்லப்பட வேண்டும் என்று கோரிக்கை விடப்படுகிறது (ஆதியாகமம் 4:23,24) சில கோத்திரத்தார் தங்களுடைய தலைவர்கள் யாரேனும் கொல்லப்படும் தருணத்தில் இன்றும் இதை நடைமுறைப்படுத்துகிறார்கள்.
பல்வேறு கலாச்சாரங்கள் கலந்து வாழும் மக்கள் மத்தியில் கொலை என்பது மன்னிக்க முடியாத குற்றமாக உள்ளது. ஒரு மனிதனின் இரத்தம் சிந்தப்பட்டாலொழிய, அது சரிசெய்யப்பட முடியாது. மன்னிப்பது என்பது அநீதியாக இருக்கும். மற்றவர்கள் குற்ற உணர்வுகளை மக்கள் தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொள்கிறார்கள். பகைவனின் வன்மம் என்பது தலைமுறை தோறும் பாதுகாக்கப்பட்டு தொடர்கின்றது. சில சந்தர்ப்பங்களில் நாடு முழுவதும் கூட இதில் பங்கேற்கிறது. இப்படிப்பட்ட சிந்தனை ஒரு கிறிஸ்தவனுக்கு, கிழக்கில் இருந்தாலும் சரி அல்லது மேற்கில் இருந்தாலும் சரி, அந்நியப்பட்ட ஒன்றாக உள்ளது. ஒவ்வொரு கொலைக்காரனின் குற்ற உணர்வையும் கிறிஸ்து தமது இரத்தத்தை சிந்தியதின் மூலமாக அகற்றி விடுவதால் நாம் வேறுபட்ட ஒரு மார்க்கத்தை பெற்றிருக்கிறோம்.
கொலைகாரன் தன்னுடைய குற்ற உணர்வினால் பரிதாபமுள்ளவனாக இருக்கிறான். அவனால் கொல்லப்பட்டவர்களின் ஆவிகள் அவனது சிந்தனைகள் மற்றும் கனவுகளில் பயமுறுத்துகின்றது. இரண்டாம் உலகப்போரில் ஒரு இரவு ஒரு மனிதன் தன்னால் சுடப்பட்டவர்களின் மண்டை ஓடுகள் அவனை நோக்கி உருண்டு வருவதைப் பார்த்தான். அவர்களது வெறுமையான கண்கள் அவனை பயமுறுத்தியது. ஒரு கொலைகாரன் தன்னுடைய இஸ்லாமிய கிராமத்திற்கு ஒரு தலைமுறை தாண்டி மீண்டும் சென்றால், கொல்லப்பட்டவனின் மகன் மூலமாக அவனும் கொல்லப்படுவதை எதிர் நோக்கியிருக்க வேண்டும். கொலைகாரன் எதுவும் செலுத்துவதில்லை. கொல்வதை நிறுத்துவதற்கு மக்களைப் பயமுறுத்துவது மாத்திரம் போதுமானது அல்ல. எல்லா தீய சிந்தனைகளும் மக்களது இருதயங்களில் இருந்து அகற்றப்பட்டு, புதிய சிந்தனைகள் கொடுக்கப்படுகிறது. மனிதனுடைய இருதயத்தின் நோக்கங்களை இயேசு அறிந்துள்ளார். “இறைவனைத் தவிர ஒருவனும் நல்லவன் இல்லை” என்று இயேசு கூறுவதன் மூலம், ஒவ்வொருவரையும் அவர் மரணத்திற்கு நேராக நியாயத்தீர்க்கிறார். “தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே;”(மத்தேயு 19:17, மாற்கு 10:18, லூக்கா 18:19) அதே சமயத்தில் கொலைகாரர்களாகிய நம்முடைய பாவத்தை அவர் சுமந்துகொண்டு, நம்முடைய இருதயங்களில் அவரது சாந்தமுள்ள ஆவியை வைக்கின்றார். நம்முடைய மனங்கள் இதனால் புதிதாக்கப்படுகின்றது. கொலைகாரனின் தீய சிந்தனைகள் அகற்றப்படுகின்றது. இயேசுவானவர் நமக்கு புதிய இருதயத்தையும் உத்தமமான ஆவியையும் தருகின்றார். நம் மத்தியில் அவரது கட்டளைகளுக்கு கீழ்ப்படிகின்ற மற்றும் பகைவர்களை நேசிக்கக் கூடிய விசுவாசிகளையும் உருவாக்குகின்றார்.
4.08.3 - கொல்லுதல் மற்றும் ஒப்புரவாகுதலைக் குறித்த கிறிஸ்தவக் கண்ணோட்டம்
இயேசு தமது மலைப்பிரசங்கத்தில் நமக்கு போதிக்கின்ற போது, சரீரத்தைக் கொல்வது மட்டும் பாவம் அல்ல, திட்டுதல் கூட ஆத்துமாவை கொலை செய்தல் என்று கூறினார். அது விஷத்தைப் போல மிக நீண்ட கால விளைவை ஏற்படுத்தக்கூடியது. கோபம், வெறுப்புமிக்க பொய்கள், துணிகர மிரட்டல்கள், கசப்புணர்வு, மனதிற்குள் சபித்தல், நம்பியவர்களை காட்டிக் கொடுத்தல் மற்றும் பரியாசம் பண்ணுதல் அனைத்தும் மரணத்திற்கு ஏதுவானவைகள். முதலாவது இப்படிப்பட்ட வார்த்தைகளை பேசுகிறவனை அவைகள் விஷம் நிறைந்ததாக பாதிக்கின்றது. அதன்பிறகு பிறரின் மனதையும் பாதிக்கின்றது. இயேசு கூறினார். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான்.(மத்தேயு 5:22) இந்தக் கூற்றின் மூலம் இயேசு நம் அனைவரையும் குற்றவாளிகளாகத் தீர்க்கின்றார். நரகத்திற்கு ஏதுவான கொலையின் ஆவியை உடைய மக்களுடன், நாமும் தீமையான இருதயத்தை உடைய மக்கள் என்று நியாயம் தீர்க்கின்றார்.
நாம் மனந்திரும்ப வேண்டும். நாம் அனைவரும் கொலை பாதக சிந்தனைகளை நம்முடைய இருதயங்களில் பெற்றிருக்கிறோம் என்பதை ஒத்துக் கொள்ளவேண்டும். கோபம், பொறாமை, பகைமை நிறைந்த விவாதங்கள், பழிவாங்கும் எண்ணம், கொடூரம் மற்றும் துணிகரம் அனைத்தும் பாவமான உணர்வுகள் மற்றும் செயல்கள் ஆகும். இது பெரியவர்களுக்கு மட்டுமல்ல சிறுவர்களுக்கும் பொருந்தும். “தன் சகோதரûப் பகைக்கிற எவனும் கொலைபாதகன்” (1யோவான் 3:15) என்று யோவான் கூறுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. நாம் நேர்மையுடன் நம்மை ஆராய்ந்து பார்க்க வேண்டும். யார் மீதாவது நமக்கு வெறுப்புணர்வு இருக்கிறதா? என்று பார்த்து, அதை முழுமையாக மேற்கொள்ள இறைவனிடம் உதவி கேட்க வேண்டும். இல்லையெனில் இந்த தீய எண்ணங்கள் நம்மில் வேரூன்றி நம்மை முற்றிலும் அழித்துவிடும். கர்த்தருடைய விண்ணப்பத்தைக் கூறும் ஒவ்வொருவரும். இறைவன் நம்முடைய எல்லாப் பாவங்களையும் மன்னித்தது போல, நாமும் ஒவ்வொருவரையும் மன்னிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். மன்னிப்பதற்காக நாம் விரும்பும்போது, நாம் வெற்றி பெற அது உதவுகின்றது. நாம் மன்னிக்க முடிவெடுக்கும் போது, நம்முடைய எதிரிகள் அழிந்து போக வேண்டும் என்ற நம்முடைய ஆசை மேற்கொள்ளப்படுகிறது. ஒருவேளை உங்களுடைய எதிரியை மன்னிக்க நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள். ஆனால் அவனுடைய குற்றத்தை நீங்கள் மறக்கமாட்டீர்கள். கவனமாக இருங்கள். இதைப் பொறுத்தமட்டில் நம்முடைய பாவங்களை இறைவன் மன்னிக்க வேண்டும் என்று கேட்கிறோம். நம்முடைய பாவங்களை மறக்க வேண்டாம் என்று கூறுகிறோம். அல்லது நாம் இவ்விதமாகக் கூறுகிறோமா? “நான் என்னுடைய நண்பனின் பாவங்களை மன்னிக்க விரும்புகிறேன், அவன் எனக்கு எதிராக செய்த குற்றத்தை மறக்கிறேன். ஆனால் ஒருபோதும் அவனை மீண்டும் சந்திக்க விரும்பவில்லை”. நீங்கள் இறைவனிடம் வர விரும்புகிறீர்கள், ஆனால் ஒருபோதும் அவரை சந்திக்க விரும்பவில்லை? உங்களுடைய எதிரியை நடத்தும் விதமாக நீங்கள் இறைவனை நடத்த விரும்புகிறீர்களா?
சமாதானத்தை அடைவதற்கு ஒரே வழியை மட்டுமே இயேசு வைத்திருக்கிறார். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்; (மத்தேயு 5:44-45) விசுவாசிகளின் உடைக்கப்பட்ட இருதயத்தில் உள்ள இறைவனின் அன்பின் பிரசன்னத்தினுடைய வல்லமையினால் அன்றி, நாம் வெறுப்புணர்வை மேற்கொள்ள முடியாது. எனவே இயேசு நம்மை எச்சரிக்கின்றார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.(மத்தேயு 6:15)
ஒவ்வொரு பாவியும் தண்டிக்கப்படும்போது, ஏன் கிறிஸ்தவர்கள் அவர்களுடைய எதிரிகளின் மீறுதல்களை மன்னிக்க வேண்டும்? இந்த அநீதியின் குரல் பரலோகத்தில் ஒலிக்காதா? அது உண்மைதான். எந்தவொரு பாவத்தையும் இறைவன் தண்டிக்காமல் விடுவதில்லை. “இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு உண்டாகாது” என்று எழுதியிருக்கிறது. இக் காரணத்தினால் தான் இயேசு நம்முடைய பாவங்களைச் சுமந்தார். நமது ஆக்கினையை அவர் மீது ஏற்றுக்கொண்டார். இறைவனுடைய வார்த்தை கூறுகிறது, “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.”(ஏசாயா 53:5) இறைவனின் குமாரனாகிய இயேசு நமது பாவங்களை சுமந்தார், பரியாசக்காரர் மற்றும் கொலைகாரர்களின் பாவங்களைச் சுமந்தார். எனவே தான் எந்தவொரு விதிவிலக்குமின்றி நாம் ஒவ்வொருவருடைய பாவங்களையும் மன்னிக்கும் சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். பழிவாங்குதல் மூலம் நீதியை நிலைநாட்டும் உரிமையோ அல்லது கடமையோ நமக்கு இல்லை. இயேசு தமது பாடுகள் மற்றும் பதிலாள் மரணம் மூலம் இறை நீதியின் வேண்டுகோளை நிறைவேற்றினார். அவரே நம்முடைய சமாதானமாக இருக்கிறார். தனது உரிமைகளுக்காக போராடுகிறவன் மற்றும் தனக்கான நீதியைத் தேடுகிறவன் தன்னையே நியாயம் தீர்க்கிறான். அன்பு மட்டுமே நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாய் இருக்கிறது. அன்பை விட்டு தூரமாய் இருப்பதன் பொருள் மீண்டும் நியாயத்தீர்ப்பிற்குள் பிரவேசிப்பதாகும். தம்மைப் பின்பற்றுபவர்களிடம் புதிய மனம் மற்றும் புதிய சித்தத்தை இயேசு மட்டுமே உருவாக்குகிறார். இறைவன் மன்னிக்கிறது போல அவர்களும் மன்னிக்க உதவுகிறார்.
4.08.4 - பட்டயத்தின் மதம்
இஸ்லாமில் மக்கள் இரத்தம் சிந்தி பழிவாங்க முற்படும் போது இயேசு அருளும் மன்னிப்பின் கிருபையை பார்க்கின்ற ஒவ்வொருவருக்கும் அது அதிர்ச்சியைத் தருகின்றது. கொலை செய்தல் என்பது இறை இஸ்லாமின் கட்டளையாக உள்ளது. மதத்தைக் காப்பாற்றுவதற்காக கொலை செய்வதை இஸ்லாம் அனுமதிக்கிறது. அதை ஒரு முஸ்லீமின் கடமையாக சித்திரிக்கின்றது. முகம்மது குரானில் இவ்விதம் எழுதினார். “அவர்களைப் பிடியுங்கள், அவர்களை நீங்கள் எங்கு கண்டுபிடித்தாலும் கொன்று போடுங்கள், “மேலும், “அவர்கள் மத்தியில் இருந்து நண்பனையோ அல்லது உதவி செய்பவனையோ தெரிவு செய்யாதீர்கள்” (சூரஸ் அன்னிஸôவு 4:89,91 அல்லது அல்-பகரா 2:191) இந்த வார்த்தைகளின் மூலம் “ஆதிமுதல் கொலைபாதகனாயிருக்கிறவனின் ஆவி” தான் பேசுகிறது. கிறிஸ்துவின் ஆவியானவர் இந்த வார்த்தைகளின் மூலம் பேசவில்லை.
தனது சொந்த எதிரிகளை ஒருவர் பின் ஒருவராக முகம்மது கொன்றார். மேலும் 27 தாக்குதல்களில் தனிப்பட்ட விதத்தில் கலந்து கொண்டார். கந்தாக் போரின் மீது மெதினாவில் யூதர்களுக்கு மிகப் பெரிய அளவில் பிரேதக் குழிகள் தோண்டும்படியாகவும் செய்தார்.
பத்ரு போரில் தங்களுடைய எதிரிகளை கொல்லும் முஸ்லீம்கள் அனைவரும் முகம்மதுவின் வார்த்தைகளால் புனிதப் போரில் நீதியுள்ளவர்களாக்கப்படுகிறார்கள். “நீ அவர்களைக் கொல்லவில்லை, அல்லாஹ் அவர்களைக் கொன்றார். நீ சுடும்போது, அவர்களை சுடவில்லை அல்லாஹ் அவர்களைச் சுட்டான். (சுரா-அல்-அன்ஃபால் 8:17). நவீன முஸ்லீம்கள் இந்த வசனங்களின் விளக்கங்களை அங்கிகரிப்பது இல்லை. ஆனால் தீவிரவாதிகள் நீதிமன்றங்கள் முன்பு தங்களை நியாயப்படுத்த இந்த வசனங்களைப் பயன்படுத்துகிறார்கள். புனிதப் போரின் போது செய்யப்படும் ஒவ்வொரு கொலையையும், முகம்மதுவின் வெளிப்பாடு நியாயப்படுத்தி நீதியை வழங்குகின்றது. மேலும் இந்த இஸ்லாமிய போரின் போது எதிராக போரிட்டு சாகின்ற ஒவ்வொருவரும் நேரடியாக பரதீசுக்குப் போகிறார்கள். அங்கே வார்த்தையால் விவரிக்க முடியாத, அனுபவிக்கக்கூடிய இன்பங்கள், அவனுக்காக காத்திருக்கும். இன்னொருபுறம் ஒரு முஸ்லீம் இன்னொரு முஸ்லீமைக் கொல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. அப்படிப்பட்ட கொலை இஸ்லாமிய சட்டத்தின்படி மன்னிக்க முடியாத பாவமாக இருக்கிறது. விக்கிரக ஆராதனைக்காரர்கள் மற்றும் முஸ்லீமாக இல்லாதோருக்கு எந்தவொரு பாதுகாப்பையும் அது வழங்கவில்லை. கொல்வது நற்செயலாக கருதப்படுகிறது. கொலை செய்பவனுக்கு பரலோக பரிசுகள் கொடுக்கப்படுகிறது.
இஸ்லாமில் காணப்படும் நீதி என்ற தாற்பரியம் நமக்கு அந்நியமாக உள்ளது. செய்த செயலுக்கு பழிவாங்கக் கூடிய அல்-டியா என்பது இரத்தம் சிந்துதலாகிய உயர்ந்த விலைக்கிரயம் ஆகும். இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நாடுகளில் சட்டப்பூர்வமாகவோ அல்லது சட்டப்பூர்வமாக இன்றியோ போக்குவரத்து விபத்துகள் மற்றும் கார் விபத்துகளில் கூட கண்ணுக்குக் கண், பல்லுக்குப்பல் என்ற சட்டம் கடைபிடிக்கப்படுகிறது. மிகவும் அபூர்வமாக இதைத் தவிர்ப்பது காணப்படும். ஏனெனில் இஸ்லாமிய நீதி அதற்குரிய பலியை எதிர்பார்க்கிறது. அது இரக்கமின்றி சத்தியத்தையும், நீதியையும் நிலைநிறுத்த முயல்கிறது. முஸ்லீம்கள் நித்திய மீட்பை உண்டுபண்ணக் கூடிய பதிலாள் அல்லது இறைவனின் ஆட்டுக்குட்டியை பெற்றிருக்கவில்லை. சத்தியம் கோரக்கூடிய நிபந்தனைகளை மேற்கொள்ளக் கூடிய இறைவனுடைய கிருபையை அவர்கள் அறியவில்லை. எனவே அவர்கள் கிருபையின்றி சட்டத்தை நடைமுறைப்படுத்துகிறார்கள்.
4.08.5 - ஜிகாத்திற்கு எதிராக மலைப்பிரசங்கம்
நீதியின் அடிப்படையில் பழையஏற்பாட்டில் வாழ்வு காணப்பட்டது. வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் மோசேயின் சட்டம் உள்ளடக்கியிருந்தது. சிவில் சட்டங்கள் மட்டுமல்ல, மத ஒழுங்குகளையும் அது கொண்டிருந்தது. சட்டத்திற்கு எதிரான மீறுதலுக்கு தண்டனை கொடுக்கும்படி நாட்டில் மதரீதியான அதிகாரம் அவசியமாய் இருந்தது. பழைய ஏற்பாடு மற்றும் இஸ்லாமியத்தின் சட்டம் மற்றும் அரசாங்கம் இவற்றின் புரிந்துகொள்ளுதலின் விளைவாக மதயுத்தம் என்பது தவிர்க்க முடியாததாக இருந்தது. ஆனால் இயேசுகிறிஸ்து, ஒவ்வொருவனும் தன்னுடைய எதிரிகளை நேசிக்க வேண்டும் என்று பிரசங்கித்தார். இதை நடைமுறைக்கு கொண்டு வருவதினால் எல்லா மதப் போர்களும் தங்களது இறை மார்க்கத்தை இழந்து விடுகின்றன. சிலுவைப்போர்கள் என்பது பாவச்செயல். அது மதத்தை அரசியல் அதிகாரத்துடன் தொடர்புபடுத்துவதில் பின்னோக்கிச் செல்லும் ஒரு நிலையாகும். உலகிற்கு நற்செய்தியை அறிவிக்கும் படி பட்டயங்களுடன் அப்போஸ்தலர்களை இயேசு அனுப்பவில்லை. இதற்கு மாறாக அவர் பேதுருவிடம் கூறினார். உன் பட்டயத்தை உறையில் போடு, பட்டயத்தை எடுக்கிற எவனும் பட்டயத்தால் மடிவான்”. (மத்தேயு 26:52) இயேசு மனப்பூர்வமாக சிலுவைக்கு சென்றார்; மரித்தார். அவர் குற்றமற்றவராக இருந்தும், தூதர் சேனைகளைக் கொண்டு தனது எதிரிகளை அழிப்பதற்கு மறுத்தார். கிறிஸ்துவின் ஆவி என்பது முகம்மதுவின் ஆவியோடு முற்றிலும் மாறுபட்டுக் காணப்படுகிறது. இயேசு தனது மலைப் பிரசங்கத்தில் கூறினார். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று, உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக்கொடு. (மத்தேயு 5:38,39) சுய பாதுகாப்பின் உரிமையை நிலைநாட்டும் பழைய வழியை இயேசு மேற்கொண்டார். சிலுவையில் காணப்பட்ட கிறிஸ்துவின் சரீர பலவீனமும், ஆவிக்குரிய பலமாகிய அன்பு, விசுவாசம், நம்பிக்கையும் தான் சாத்தானை வெற்றிக்கொள்ளும் ஒரே வழியாக இருக்கின்றது. அது இறைவனின் சட்டத்தின் எல்லா நிபந்தனைகளையும் நிறைவேற்றுகிறது.
ஒரு கிறிஸ்தவன் இவ்விதமான கேள்வியை எதிர்கொள்கிறான். நான் ஒரு இராணுவத்தில் இருந்தால், நவீன ஆயுதங்களை பயன்படுத்த தேவையிருக்கும் போது அல்லது யுத்தத்தில் சண்டையிடும் போது என்ன செய்ய வேண்டும்? கிறிஸ்தவம் இல்லாத நாட்டில் கிறிஸ்தவத்தை சேர்ந்த ஒருவன் அல்லது மிகப்பெரிய நாட்டில் விசுவாசியான ஒரு குடிமகனுக்கு இது என்ன பொருள் தருகிறது? வரலாற்றின் பல்வேறு காலங்களில் வாழ்ந்த வெவ்வேறு விசுவாசிகள் இந்தக் கடினமான வித்தியாசமான பதில்களை தந்துள்ளார்கள். தங்களது சமாதான முயற்சிக்காக சில சகோதரர்கள் சிறைச்சாலையில் அடைக்கப்பட ஆயத்தமாய் இருந்தார்கள். கிறிஸ்துவிற்காக இரத்த சாட்சியாக மரித்தார்கள். மற்றவர்கள் இறைவனால் தங்களுக்கு நியமிக்கப்பட்ட அதிகாரங்களுக்கு கீழ்ப்படிய விரும்பினார்கள். அவர்கள் கொலைக்கு எதிரான சட்டத்தை ஒரு தனிப்பட்ட காரியமாக கருதினார்கள். அவர்களை தனிப்பட்ட வாழ்விற்கு மட்டுமே அது பொருந்தும் என்று நினைத்தார்கள். அவர்கள் யாரையும் வெறுக்கவில்லை என்று சொல்லிக் கொண்டாலும், தங்களது தேசத்தை பாதுகாக்க அவர்கள் விருப்பத்துடன் இருந்தார்கள். அவர்கள் தங்களது அரசாங்கங்களுக்கு உண்மையாயிருக்கவும் அதேநேரத்தில் எதிரிகளை நேசிக்கவும் கடினமாக முயற்சிக்கிறார்கள். வரவிருக்கும் இறைவனின் ராஜ்யம் நித்தியமான ஆவிக்குரிய ராஜ்யம் என்று கருதினார்கள். ஆனால் இந்த தற்கால உலகத்தின் ராஜ்யங்கள். இந்த கேள்வியுடன் உள்ள கடினமான காரியங்களைக் காண விரும்பும் ஒவ்வொருவரும் இறைவனின் வழிநடத்துதலை ஆர்வத்துடன் தேட வேண்டும். அவன் சரியான பதிலைப் பெறுவான். அப்படிப்பட்ட விசுவாசி தன்னுடைய தவறான முடிவை கைவிட வேண்டியதாக இருக்கும். தேசம் மற்றும் வீட்டைக் குறித்த பொறுப்பில் இந்த இறைவனின் கட்டளை எதிரிகளை நேசிப்பதையே குறிக்கிறது.
4.08.6 - நவீன கொலையாளிகள்
புதிய உடன்படிக்கைக்கு கீழ் ராஜ்யத்தைக் குறித்து விவரித்துப் பேசுவதின் காரியங்கள் தான் மலைப் பிரசங்கத்தில் அடங்கியுள்ளது. அது தனிப்பட்ட நிலையில் மட்டுமே நடைமுறைப்படுத்த வேண்டும். அதை அரசியல் ரீதியாக பார்க்கக் கூடாது என்பது போல காணப்படுகிறது. ஒருவர் வன்முறையைக் கொண்டு சமாதானத்தை உருவாக்க முயற்சித்தால், அவர் மலைப்பிரசங்கத்தை தவறாகப் புரிந்து கொண்டுள்ளார் என்பதைக் காண்பிக்கிறது. உலக அளவில் கருத்தடையை நியாயப்படுத்த காரணங்களைக் கூறுபவர்களும் இப்படித்தான் உள்ளார்கள். உலக வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட மிகக் கொடூரச் செயல் இது தான். மில்லியன் கணக்கான உயிர்கள் கருவறையில் கொல்லப்பட்டன. அநேக தாய்கள் மற்றும் தகப்பன்மார் தங்களது மனச்சாட்சியில் கொலைக்கான குற்ற உணர்வை சுமந்து கொண்டிருக்கிறார்கள். நாம் ஒரு கொலைகார சந்ததியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் அப்படிப்பட்ட சந்ததியின் ஒரு பகுதியாக, நம்மை அறியாமலேயே இருக்கிறோம்.
ஆயிரக் கணக்கான மக்கள் போக்குவரத்து விபத்துகளில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அதை வேண்டுமென்றே செய்வதில்லை. நவீன தொழில்நுட்பம், குடிபோதை, அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல் மற்றும் உடல்களைப்பு போன்ற காரணங்களல் இது நேரிடுகிறது. நாம் ஆறாவது கட்டளையைக் கைக்கொள்ள விரும்பினால் போக்குவரத்து விபத்துகளைக் குறித்தும் கருத்துள்ளவர்களாக இருக்க வேண்டும். நம்முடைய கார்களை இயக்குவதில் நாம் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். தாழ்மையுடன், சுயகட்டுப்பாட்டுடன் நம்முடைய கார்களை நாம் இயக்க வேண்டும். இறைவன் தரும் பாதுகாப்பைத் தேட வேண்டும். அவரிடம் பொறுமையைத் தரும்படி கேட்க வேண்டும்.
சுற்றுப்புற சூழல் மாசு அடைந்துள்ள காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காற்று நீர், மற்றும் உணவுப்பொருட்கள் மாசு அடைந்துள்ளது. நம்மைச் சுற்றியுள்ள சுற்றுப்புற சூழலைப் பார்க்கும்போது, இறைவனின் வாதைகள் நமக்கு பாடங்களை கற்றுக் கொடுக்கிறது. இறைவனை நோக்கி நம்முடைய கண்களை ஏறெடுத்து, எப்படி சரியான வாழ்க்கை வாழ்வது என்று அவரிடம் உதவி கேட்க வேண்டும். இவ்விதமாக நம்முடைய உலகத்தை நாம் பாதுகாக்க வேண்டும். நாம் அது அழிவதற்கு காரணமாக இருக்கக் கூடாது.
இன்றைய ஆடம்பர உலகில் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வில் உணவு உட்கொள்ளும் முறை மறைவான வடிவில் தற்கொலையாக இருக்கின்றது. சமூகமானது இதில் மூழ்கி, கொஞ்சம் கொஞ்சமாக தங்களையே கொன்று கொண்டிருக்கிறார்கள். மற்றவர்கள் பாலியல் வல்லுறவுகளில் ஈடுபட்டு தங்களது சரீரம், ஆத்துமா மற்றும் ஆவியைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பொறாமை மற்றும் சுயநலம் உள்ளவர்கள் சோர்வு மற்றும் தனிமையினால் வாடுகிறார்கள். அவர்களது வாழ்வை அது சுருக்கி விடுகிறது. மேலும் கூடுதல்பணி, ஓய்வற்ற நிலை தன்னையே அழிப்பதாக உள்ளது. ஒழுங்கற்ற தூக்கம் மற்றும் சோம்பேறித்தனமாக வாழ்வது பாவமாக உள்ளது. ஏனெனில் நமது சரீரம் நமக்கு சொந்தமானது அல்ல, நாம் இறைவனுக்கு சொந்தமானவர்கள்.
சுய மறுப்பைத் தான் இயேசு போதித்தார். சுயத்தை அறிந்து உணர்வதைக் குறித்து போதிக்கவில்லை. அவர் இவ்விதமாகக் கூறினார். தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான்.(மத்தேயு 16:25) பவுல் வலியுறுத்திக் கூறியதாவது. தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.(ரோமர் 14:17) ஒழுங்கான ஆவிக்குரிய வாழ்வு ஒழுங்கான சரீர வாழ்வைக் கொண்டு வருகிறது. அது இருதயம் மற்றும் மனதின் சமாதானத்துடன் இணைந்துள்ளது.
கொலையின் எல்லா வகைகளையும் ஆறாவது கட்டளை தடைசெய்கிறது. அதே சமயத்தில் அன்பின் கிரியைகளை தொடர்ந்து செய்யும்படி நம்மை உற்சாகப்படுத்துகிறது. பரிதாப நிலையில் உள்ள மக்களுக்காக இரக்கம் பாராட்டும் படி அது நம்மைத் தூண்டுகிறது. தேவையுள்ள மனிதனைப் பார்க்கும்போது, காணாதவர்கள் போல நாம் கடந்து போகக் கூடாது. நேரம் எடுத்து அவர்களுக்கு எந்த அளவில் உதவி செய்ய முடியுமோ அதைச் செய்ய வேண்டும். இறைவனுடைய அன்பின் மனுவுருவான இயேசு இந்தக் கட்டளையை நடைமுறைப்படுத்துவது எப்படி? என்பதை நமக்குக் காண்பித்தார். நாம் அவரிடம் ஞானத்தைக் கேட்கும்போது, அவருடைய ஆவியானவர் நம்மை வழிநடத்துவார். கொலைக்காரர்களை அவருடைய அன்பின் பிள்ளைகளாக மாற்றுபவர் இயேசு. அவர்கள் இழந்து போன ஆவிக்குரிய சுகத்தை மீண்டும் அவர்களுக்கு தந்து உதவுகிறார். மருத்துவர்களுக்கெல்லாம் மருத்துவராகிய அவரை நோக்கி நாம் மக்கள் நடத்தும்போது இது நிகழ்கின்றது. இயேசு அவர்களைப் புதுப்பிக்கின்றார். அவர்களை உள்ளான நிலையில் பரிசுத்தப்படுத்துகிறார். கொலைகார ஆத்துமாவை சேவை செய்யும் அன்புள்ள ஆத்துமாவாக மறுரூபப்படுத்துகிறார்.