4.11 - ஒன்பதாவது கட்டளை: பிறனுக்கு விரோதமாக பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக
யாத்திராகமம் 20:16
“பிறனுக்கு விரோதமாக பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக (யாத்திராகமம் 20:16).
4.11.1 - நாவின் வல்லமை.
நாவு ஒரு சிறிய உறுப்பு இருப்பினும் அதிக வல்லமை உடையது. சில சமயங்களில் பணம் மற்றும் சரியான மருந்தை விட வலிமையுள்ளதாக இருக்கிறது. காய்ந்துபோன காட்டில் தீயைப் பற்ற வைப்பது போல நமது நாவின் வார்த்தை இருக்கக்கூடும். ஆனால் கப்பலை பாதுகாப்பாக துறைமுகத்திற்கு திருப்ப உதவும் சிறிய சுக்கானைப் போல ஒரு பயனுள்ள வார்த்தை இருக்கக் கூடும். நாவைக் கொண்டு மனிதன் பொய் பேசுகிறான், இறைவனை நிந்திக்கிறான். மேலும் உண்மை பேசுகிறான், இறைவனை துதிக்கிறான், சோர்ந்து போன ஒருவனை ஆறுதல்படுத்துகிறான். ஏன்? நாம் மனந்திரும்புவதற்கு ஏதுவான மூன்று உபயோகமுள்ள உதாரணங்களை யாக்கோபு தனது நிரூபத்தில் மூன்றாவது அதிகாரத்தில் தருகிறார். இறைவனுடைய வார்த்தையின் வெளிச்சத்தில் நமது நாவு பேசும் வார்த்தைகளை நாம் சோதித்துப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு தீய வார்த்தையும் மனந்திரும்பாத கறைபடிந்த இருதயத்தைக் காண்பிக்கிறது. ஆனால் நல் வார்த்தை இருதயத்தில் உள்ள இயேசுவின் ஆவியைக் காண்பிக்கிறது.
4.11.2 - நம்முடைய பரிசுத்தத்தின் மாறாத தன்மை.
நம்முடைய நாவுகள் தூய்மையாக்கப்படவும், நம்முடைய மனங்கள் புதுப்பிக்கப்படவும்,நமக்கு இரட்சகர் இயேசு தேவை. அப்போது நாம் அவருடைய சத்தியத்தை புரிந்துகொள்வோம், பேசுவோம். சேனைகளின் கர்த்தராகிய திரியேக இறைவனுடன் தன்னுடைய மக்களை ஒப்புரவாக்குகின்ற போது கனத்திற்குரிய இறைவாக்கினர் ஏசாயா பரிசுத்த இறைவன் முன்பு நடுக்கத்துடன் நின்றான். அவன் கர்த்தருடைய வஸ்திரத் தொங்கலைக் கண்ட போது நடுக்கத்துடன் இருந்தான். ஏசாயா சத்தமிட்டுக் கதறினான். அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன். அப்பொழுது சேராபீன்களில் ஒருவன் பலிபீடத்திலிருந்து, தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத் தழலை எடுத்து, என்னிடத்தில் பறந்துவந்து, அதினால் என் வாயைத் தொட்டு: இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியானது என்றான்.(ஏசாயா 6:5-7).
மனிதன் பரிசுத்தமுள்ள இறைவனை, சந்திக்கும் போது அவனது துன்மார்க்கத்தையும், அவனது இருதயத்தின் வஞ்சகத்தையும் உணர்ந்து கொள்கிறான். அந்த தருணத்தில் நம்முடைய அதி உன்னத ஒப்பீட்டாளர் சர்வவல்லமையுள்ளவர் மட்டுமே என்பதை அவன் அறிகிறான். மனிதன் உயிருள்ள, பரிசுத்தமுள்ள இறைவனை தனிப்பட்ட விதத்தில் சந்திக்காமல் ஒரு இயந்திரமான வாழ்க்கை வாழுகிறான். பாவி, அவனுடைய ஆண்டவரிடம் நெருங்கிச் சேராத பட்சத்தில் இந்நிலை தொடரும். அவரை நெருங்கிச் சேரும்போது, எல்லாம் மாறும். அப்போஸ்தலனாகிய பேதுரு, அவனுடைய ஆண்டவரின் சர்வ வல்லமையை அனுபவித்தபோது, முகங்குப்புற விழுந்து, சத்தமிட்டுக் கூறினான். “ஆண்டவரே என்னை விட்டு அகன்றுபோம். நான் ஒரு பாவியான மனுஷன்”. (லூக்கா 5:8). இயேசுவானவர் அவனது இருதயத்தை ஊடுறுவிப் பார்த்து, அவனது பாவநிலையை வெளிப்படுத்தினதை அவன் அறிந்தான். அவன்தான் தன்னை மறுதலிக்கப் போகிறவன் என்பதை ஆண்டவர் அறிந்திருந்தும், அவனை மனிதர்களைப் பிடிக்கிறவர்களுக்கு அடையாளமாக வைத்தார்.
இயேசு சத்தியத்தை வெளிப்படுத்த அவதரித்தவர். அவருடைய ஆவி சத்திய ஆவியாக இருக்கிறது. (யோவான் 14:17) நாம் ஒவ்வொரு முறையும் பொய் பேசும்போது, புறங்கூறும் போது, சத்திய ஆவியானவர் நமக்கு உணர்த்துகிறார், இறைவனை யாருக்கும் முகஸ்துதி செய்வது கிடையாது. அவர் தூய்மையானவர், அவருடைய வார்த்தை மெய்யானது. அது நிச்சயமாக நிறைவேறும். அவர் நம்மை புதுப்பிக்க விரும்புகிறார். நாம் நேர்மையுடன் வாழ பயிற்றுவிக்கிறார். அன்புடன் சத்தியத்தைப் பேசும்படி நம்மை ஊக்கப்படுத்துகிறார். ஆனால் நீங்கள் சத்தியத்தை மறைக்கும் போது, பொய் பேசுகிறீர்கள். நீங்கள் எப்படி நேசிக்கிறீர்கள் என்பது பொருட்டல்ல. பொய்யான துதி மற்றும் முகஸ்துதி சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற் போல் மாறும். எனவே சத்தியம் இல்லாத அன்பு பொய்யாய் இருக்கிறது. அன்பு இல்லாத சத்தியம் செத்ததாய் இருக்கின்றது.
4.11.3 - பொய் மற்றும் அதன் ஆதாரங்கள்.
திரியேக இறைவன் தன்னில் தானே சத்தியம் உள்ளவர். ஆனால் சாத்தான் பொய்யனும், பொய்களுக்கும் பிதாவுமாக இருக்கிறான். அவன் ஆதிமுதற்கொண்டு கொலை பாதகனாய் இருக்கிறான். இயேசு அவனை தீயவன் என்றும், இந்த உலகத்தின் அதிபதி என்றும் அழைக்கிறார். அவனிடத்தில் வருகின்ற ஒவ்வொன்றும், அது உண்மையைப் போலத் தோன்றினாலும், பொய்யாய் இருக்கிறது.
அந்தத் தீயவன் ஏவாளை வஞ்சித்தான். அவனது நயவஞ்சகமுள்ள கேள்வி சத்தியத்தை கேள்விக்குள்ளாக்கி, இறைவனை சந்தேகிக்கும்படி செய்தது. இறைவன் மீதான ஏவாளின் நம்பிக்கையை அவன் அசைத்தான். ஏவாள் பெருமை, இச்சை மற்றும் இறைவனுக்கு எதிராக கலகம் கொண்டு, முரட்டாட்ட நிலைக்கு சென்று விட்டாள்.
இயேசு திருமுழுக்கு எடுத்த பின்பு, பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவரால் வனாந்தரத்திற்கு கொண்டு போகப்பட்டார். இயேசு 40 பகல்கள் மற்றும் இரவுகள் உபவாசம் இருந்து விண்ணப்பம் செய்தார். அவர் சத்தியத்தை தனது கேள்விகளால் சீர்குலைக்க முயற்சிக்கும் சோதனைக்காரனுக்கு எதிர்த்து நின்றார். சாத்தான் அவரிடம் கூறினான். “நீர் இறைவனுடைய குமாரனேயானால்” ஒருவேளை அவன் “நீர் இறைவனுடைய குமாரன்” என்று கூறினால் சத்தியம் உறுதி செய்யப்பட்டிருக்கும். ஆனால் அவன் உண்மை நிலையை கேள்விக்குள்ளாக்கினான். இயேசு தன்னுடைய பரலோக பிதாவோடு தமக்கிருக்கும் குமாரன் என்ற உரிமையை, அவருடைய இருதயத்தில் சந்தேகிக்கும்படி முயற்சித்தான். அவருடைய பிதாவை விட்டு அவரைத் தனியாக பிரிக்க அந்தத் தீயவன் விரும்பினான். அவருடைய விருப்பத்தின்படி அவர் பணி செய்வதை தடைசெய்ய விரும்பினான். இயேசு தன்னுடைய சொந்த வார்த்தைகளினால் அவனுக்கு பதிலளிக்கவில்லை. அந்தத் தீயவனுடன் அவர் கலந்துரையாட ஆரம்பிக்கவில்லை. அல்லது தனது உன்னத அனுபவங்களைக் குறித்து பேச முற்படவில்லை. மாறாக அவர் இவ்விதம் பதிலளித்தார். “எழுதியிருக்கிறதே” வெளிப்படுத்தப்பட்ட இறைவனின் வார்த்தையை இயேசு உறுதிப்படுத்தினார். அது சாத்தானின் தந்திரங்களுக்கு எதிரானதாக இருந்தது. பொய்களின் பிதாவை மேற்கொள்வதற்கு வேதாகமம் என்ற இறைவனுடைய வார்த்தையை சார்ந்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.
சாத்தான் வேதத்தை அறிந்திருப்பதும், அதை தந்திரமாகப் பயன்படுத்துவதும் நாம் பார்க்கமுடிகிறது. அவன் இயேசுவுக்கு உடனடியாக பதில் கேள்வி கேட்டான். அவன் உடனடியாக வேதாகமத்தில் இருந்து ஒரு வசனபகுதியை எடுத்து காண்பித்தான். அவன் அதை வசனப் பின்னணியில் இருந்து எடுத்துவிட்டு, இயேசுவை பெருமைக்கு நேராகவும், அவருடைய பிதாவின் உண்மையை இயேசு சோதித்துப் பார்க்கும்படியாகவும் வழிநடத்தினான். மறுபடியாக இயேசு பதிலளித்தார். “உன் இறைவனாகிய கர்த்தரை நீ பரீட்சை பாராதிருப்பாயாக என்று எழுதியிருக்கிறதே”, தெய்வீக உண்மையின் வெளிச்சத்தில் சாத்தானின் தந்திரமான நோக்கங்கள் இவ்விதமாக தெளிவாக வெளிப்படுத்தப்பட்டது. இறைவனுடைய குமாரனுக்கும், பிசாசுக்கும் இடையில் நடைபெற்ற இச்சம்பத்தின் மூலம் சில சமயங்களில் உண்மையைப் போலத் தோன்றினாலும் சாத்தான் பொய்களை மட்டுமே சொல்கிறான் என்பது தெளிவாகிறது. அவனுடைய வார்த்தைகள் வஞ்சனை நிறைந்தது. இறைவனுக்கும், அவருடைய குமாரனுக்கும் எதிரானது. கிறிஸ்துவிற்குப் பின் ஏற்பட்ட தத்துவங்கள், மதங்கள் ஆகியவற்றில் உண்மையின் ஒரு பகுதி காணப்பட்டாலும், அவைகள் எவ்வளவு வஞ்சனை நிறைந்தவையாக உள்ளன என்பதைப் பாருங்கள். இன்றும் பிசாசு அதே காரியத்தையே செய்கிறான். அவன் விசுவாசிகளை ஏமாற்றுகிறான். வேதாகமம் குறையுள்ளது, தவறுள்ளது, மனிதர்களால் எழுதப்பட்டது என்று ஆயிரக்கணக்கில் விவாதங்களை எழுப்பி சத்தியத்தை தேடுபவர்களை ஏமாற்றுகிறான். உங்கள் இருதயத்தில் சாத்தான் முணுமுணுக்க அனுமதிக்காதீர்கள். இயேசுவைப் போல “எழுதியிருக்கிறதே” என்று கூறி அவனுக்கு எதிர்த்து போரிடுங்கள்.
4.11.4 - மிகப்பெரிய பொய்
பல்வேறுப்பட்ட உலக கண்ணோட்டங்கள் மற்றும் கொள்கைகளில் பொய்கள் மட்டுமல்ல, மாறாக பிரகாசிக்கின்ற மற்றும் சுடர்விடுகின்ற உண்மையின் தன்மைகள், சமூக கட்டமைப்பிற்கு அவசியமான சட்டதிட்டங்கள் காணப்படுகின்றன. ஆனாலும் இந்த உலக கண்ணோட்டங்களின் பொதுவான இலக்கு தவறாகவே இருக்கிறது. இந்த பகுதி உண்மைகள் மிகப்பெரிய வஞ்சனையைக் கொண்டு வருகிறது. “அல்லாஹ்வின் மதம்” என்று தான் பொதுவாக இஸ்லாமைப் பார்ப்பவர்களுக்கு தோன்றும். அதில் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டில் இருந்து எடுத்து கையாளப்பட்ட அநேக வேதாகம வசனங்கள் காணப்படுகின்றன. இருப்பினும் எல்லா முஸ்லீம்களும் இறைவனின் குமாரனுடைய சிலுவை மரணத்தை மறுதலிக்கின்றன. அவர்கள் இழந்து போன நிலையை உணராமல் இருக்கிறார்கள். சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவை அல்லாமல் வேறொருவராலும் இறைவனுடைய நியாயத்தீர்ப்பில் இருந்து காப்பாற்ற இயலாது. மேலும் கம்யூனிசம் மற்றும் சில கொள்கை அமைப்புகள் திரித்துச் சொல்லப்பட்ட உண்மைகளுடன், கவர்ச்சிகரமான பொய்கள் கலந்து காணப்படுகின்றன. அவைகள் அழிவுக்கு நேரான நாத்திகத்திற்கு வழிநடத்திச் செல்கிறது.'''
சில சுதந்திர இறையியலாளர்கள் வேத வசனங்களை அதன் பின்னணியிலிருந்து எடுத்து, தங்களுடைய புத்தகங்கள் மற்றும் கருத்துகளை மக்களை நம்பும்படியாக செய்கிறார்கள். இயேசுவே, சிந்தனை மற்றும் வாழ்வின் ஆதாரமாக இருப்பதை மறுக்கிறார்கள். அவர் மூலமாக மட்டுமே ஒருவன் பிதாவிடம் வர முடியும். இயேசு சிலுவையிலறையப்பட்டார். தனது வாக்குத்தங்களாகிய நித்திய சத்தியங்களை, அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து நிறைவேற்றினார். நாம் மகிமை நிறைந்தவருக்கு முன்பாக பொய்யர்களாக நிற்போம். ஆனால் அவரில் நம்பிக்கை வைப்பவன் மறுரூபப்படுத்தப்படுகிறான். அவன் நேர்மையுடனும், உண்மையுடனும் வாழ்கிறான். அவன் பொய்களின் காடுகளில் இருந்து தப்பிச்செல்வான்.
ரேடியோ, தொலைக்காட்சி, செய்தித்தாள்கள், பத்திரிக்கைகள், பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள் என வெகுஜன ஊடகங்களில் வரும் பெரிய, சிறிய, தந்திரமுள்ள பொய்களை நாம் தடுத்து நிறுத்த முடியாது. இந்த வஞ்சகங்கள் பெருந்திரளான மக்களை ஈர்க்க பயன்படுத்தப்படுகிறது. அவர்களுடைய பதில் செயல்கள் முன்பே தீர்மானிக்கப்படுகிறது. அரசியலில் எதிர்க்கட்சிகளை சாடிப் பேசுகிறார்கள். தங்கள் கட்சி மட்டுமே உண்மையானது, ஒரே தீர்வைக் கொண்டு வருவது என்று பறைசாற்றுகிறார்கள். சிறிய விளைவுகள் அதன் மூலம் ஏற்படும் மிகப்பெரிய தவறுகள் மூடி மறைக்கப்படும். திரித்து சொல்லப்பட்ட உண்மை எதிராளியை அதிர்ச்சியுற வைக்கிறது. பரபரப்பு செய்திகள் பகைமையை உருவாக்குகிறது.
4.11.5 - தினசரி பொய்கள்
பொய் என்பது அநேக அரசியல்வாதிகளின் வார்த்தைகளை மட்டுமல்ல, நம்முடைய அனுதின வாழ்வையும் ஆக்கிரமித்துள்ளது. உண்மை வெகுவிரைவில் மறக்கப்படுகிறது. ஒரு குவளை காபிக்காக மக்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொள்கிறார்கள். நாம் உண்மையாக மனந்திரும்ப வேண்டும். மக்கள் இல்லாத தருணத்திலும், அவர்கள் இருப்பதைப் போல எண்ணிப் பேசவேண்டும். பச்சைப் பொய்கள் வேண்டாம். பாதி உண்மைகள் வேண்டாம். இவைகள் அனைத்தும் சாவுக்கேதுவானவைகள். புறங்கூறுதலுக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அந்த நபரிடம் நேரிடையாகச் சென்று கேள்விகள் கேட்டு, முழுக் கதையையும் அறிந்து கொண்டு தெளிவைப் பெற்றுக் கொள்ள வேண்டும். கூட்டத்துடன் சேர்வதற்குப் பதிலாக இப்படிப்பட்ட நபருக்காக நாம் நிற்க வேண்டியது அவசியம். பொய்கள் நிறைந்த வெள்ளத்தில் மீன் நீந்துவதைப் போல நாம் எவ்விதம் வாழவேண்டும் என்று ஒன்பதாவது கட்டளை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. சில சமயம் நாம் கடினமான சூழ்நிலைகள் மத்தியில் காணப்படுகிறோம். அதிகம் பிரபலமில்லாத ஒரு பொருளைக் குறித்துப் பேச தேவை ஏற்படுகிறது. ஆனால் நாம் நமது பெயரைக் கெடுத்துக்கொள்ள விரும்புவதில்லை. அங்கு இல்லாத நண்பர்கள் மற்றும் உறவினர்களைக் குறித்து நாம் பேசும் சந்தர்ப்பம் ஏற்படுகிறது. அப்படிப்பட்ட தருணத்தில் நாம் பாதி உண்மையைப் பேசுகிறோம். அநேக வார்த்தைகளைப் பேசி காரியங்களை மூடி மறைக்கிறோம். தந்திரமுள்ள விளக்கங்களைக் கூறுகிறோம். எலி தனது வலையைக் கண்டுபிடிப்பதை விட அதி வேகமாக மக்கள் சாக்குபோக்குகளை கண்டுபிடித்து சொல்கிறார்கள்.
பொய் நம்முடைய சமுதாயத்தை நச்சுப்படுத்தியுள்ளது. ஒருவரும் மற்றவரை நம்புவதில்லை. சிலர் எப்போதும் மற்றவர்கள் பேசுவதற்கு எதிராகவே பேசுகிறார்கள். தவறாகப் புரிந்துகொள்ளுதல் மக்களைப் பிரிக்கின்றது. அவர்களுக்கிடையே கண்ணாடி இருப்பது போல அவர்களைத் தனிமைப்படுத்துகிறது. பொய்கள் மனிதர்களை தனிமைப்படுத்துகிறது. இருதயவலி ஏற்படுகிறது. நாம் இயேசுவின் பெலத்தைப் பெற்றுக்கொண்டவர்களாக, தைரியமாக நம்முடைய பொய்கள், சண்டைகளை அறிக்கையிடுவோம். நாம் வெளிப்படையாக மன்னிப்பை கேட்க வேண்டும். அப்போது பெருமை சிதறடிக்கப்பட்டு, நம்பிக்கை கட்டப்படும்.
4.11.6 - தன்னுடைய சகோதரனை உண்மையாக புரிந்துகொண்டவன் யார்?
நம்முடைய சகோதரர் அல்லது சகோதரியை இறைவன் பாராட்டிப் பேசுவதைப் போல நாம் புரிந்து வைத்திருக்கிறோமா என்று நாம் நம்மையே சோதித்துப் பார்ப்பது நலமாயிருக்கும். நம்முடைய நியாயந்தீர்க்குதலை இயேசுவானவர் கண்டிக்கிறார். அவர் நம்மை எச்சரிக்கிறார். நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.(மத் 7:1-5).
மலைப் பிரசங்கத்தில் இயேசு கூறிய இந்தக் கட்டளையை ஓரளவேனும் புரிந்திருப்பவன் அமைதியாக இருப்பான். மற்றவர்களை நியாயம் தீர்க்கும் முன்பு நிச்சயம் தன்னையே ஆராய்ந்து பார்ப்பான். ஒருவேளை நம்முடைய சகோதரன் உண்மையாகவே தவறு செய்திருக்கலாம். அது கண்ணில் உள்ள சிறு துரும்பைப் போல இருக்கும். ஒரு அறுவை மில் திறக்கும் அளவிற்கு இப்படிப்பட்ட அநேக துரும்புகளை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. இயேசு நம் ஒவ்வொருவருக்கும் பகை, அசுத்தமான சிந்தனைகள், அசுத்தமான செயல்கள், பொறாமை, பணஆசை, ஏமாற்றுத்தனம், மாய்மாலம், பெற்றோரை அவமதித்தல் ஆகியவற்றை காண்பிக்கிறார். கர்த்தருடைய நாளில் பரிசுத்த ஆவியின் உணர்த்துதலினால் சுயத்தை வெறுக்கிறவன் எவனும் புறக்கணிக்கப்படுவதில்லை. அவன் மற்றவர்களை பெருமையான எண்ணத்தினால் புறக்கணிப்பதில்லை. இறைவன் உதவுவது போல அவர்களுக்கு எப்படி உதவலாம் என்று யோசிக்க ஆரம்பிக்கிறான்.
நாம் மற்றவர்களின் பிரச்சினைகளை முழுமையாக உள்ளும்,புறமும் அறியாதிருப்பதினால் யாரையும் நாம் நீதியாய் நியாயந்தீர்க்க முடியாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் இருந்திருந்தால், நாம் என்ன செய்திருப்போம்? நமக்கு இருக்கக் கூடிய தெய்வீக வழிநடத்துதலின் வழிகள் மற்றும் ஆசீர்வாதங்களை அவர்கள் அனுபவித்திருந்தால் எப்படி இருந்திருப்பார்கள்? “உன்னை நேசிப்பது போல் உன் அயலானையும் நேசிப்பாயாக” என்று கூறுவதன் மூலம், நம்முடைய சகோதரனை நாம் நியாயந்தீர்க்கும் போது, அதில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை இறைவன் காண்பிக்கிறார். நாம் அவனை நேசிக்க வேண்டும்.
சாட்சி கூற நேரிடும் போது இது பிரச்சினையைக் கொண்டு வருகிறது. அவன் உண்மையிலேயே காரியங்களை பார்த்தானா என்பது யாருக்குத் தெரியும்? உண்மையில் இறைவன் காரியங்களைப் பார்ப்பது போல, நாம் முழுமையாகப் பார்க்க முடிகிறதில்லை. நம்முடைய சகோதரனை நாம் நியாயம் தீர்க்கும் பட்சத்தில், நமது நியாயத்தீர்ப்பு குறைவுள்ளதாகவே இருக்கிறது. இதை நாம் உணர்ந்து மற்றவர்களைக் குறித்து எந்த முடிவுகளுக்கும் நாம் உடனடியாக வரக்கூடாது. முழுமையாக சிந்தித்து, விண்ணப்பம்பண்ணி, அவர்களை புரிந்துகொள்வதற்கு முயற்சிக்க வேண்டும். இறைவன் நமக்கு தாயின் கண்களைத் தருவாராக காவற்காரனில் கண்களை அல்ல.
4.11.7 - நாம் எவ்விதம் உண்மையைச் சொல்ல வேண்டும்?
நம்முடைய குறைவான திறமைகளை வைத்து நாம் எவ்விதம் உண்மையை அறியமுடியும்? பொய் என்பது அவசியமானது உண்மை தீமையானது என்று நாம் கருதுகிறோமா? ஒருபோதும் அப்படி இல்லை. கண்கண்ட சாட்சியாக நாம் நமது எல்லைகளுக்குட்பட்டு உண்மையைக் கூற வேண்டும். நாம் இறைவனிடம் ஞானத்தை கேட்க வேண்டும். நம்முடைய சகோதரர்கள் அல்லது சகோதரிகளிடம் நாம் ஒருதலை பட்சமாய் நடக்கக் கூடாது. உபத்திரவ நேரங்களில் விசுவாசிகளுக்கு சிறப்பான கிருபை தேவை. அப்போது தான் உண்மைகளை திரித்துப் பேசாமல் சரியான வழியில் சத்தியத்தைக் கூற முடியும். நமக்கு பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதல் தேவை. மற்ற விசுவாசிகளிடம் நாம் எப்போதும் உண்மையை கூற வேண்டும். ஆனால் மற்றவர்களின் நன்மைக்காக சில சமயங்களில் முழு உண்மையை கூற வேண்டிய தேவையில்லை. இயேசுவைப் பின்பற்றாதவர்கள், நாம் அவர்களிடம் பொய் கூறுகிறோம் என்று நினைப்பார்கள். ஏனெனில் அவர்கள் சத்திய ஆவியானவரை அறியவில்லை. பரிசுத்த ஆவியானவர் நம்மை எப்போதும் சத்தியத்தைப் பேசும்படி வழிநடத்துகிறார் என்பதை அவர்களால் கற்பனை செய்ய முடியவில்லை.
நம்முடைய அனுதின வாழ்வில் பள்ளி, சமுதாயம், நம்முடைய குடும்பங்களில் நமது சகோதர, சகோதரிகளின் வாழ்வில் உள்ள நல்ல காரியங்களை எடுத்துப் பேசும்படியாகவும், அவர்களது தவறுகளை விமர்சித்து பேசாதிருக்கவும் வேதாகமம் பயிற்றுவிக்கப்படும்படி நமக்கு உதவி செய்கிறது. நாம் பொய் இல்லாமல் நம்முடைய நண்பர்கள் மற்றும் நம்முடைய எதிரிகளைக் குறித்து நேர்மறையாக எண்ணவேண்டும். பவுல் கொரிந்தியர்களுக்கு இவ்விதம் விவரித்துக் கூறுகிறார். அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது,அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது,அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோகும், அறிவானாலும் ஒழிந்துபோம்.(1 கொரிந்தியர் 13:4-8) .
நாம் அன்பின் ஆவியுடன் வாழும்போது, ஒரு போதும் பாவிகளை நாம் நியாயம்தீர்க்க மாடடோம். மாறாக தாழ்மை மற்றும் அன்பின் ஆவியுடன் அந்த நபரை புரிந்துகொள்ள, உதவ அல்லது அவரை சரிப்படுத்த நம்மால் இயன்றதை செய்வோம். கிறிஸ்தவ ஊழியங்களை செய்யும்படியான முதிர்ச்சியைப் பெற்றிருந்த எபேசிய விசுவாசிகளுக்கு பவுல் எழுதுகிறார். “அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்.(எபேசியர் 4:25) நாம் உண்மையை கற்றுக்கொள்ள வேண்டும், உண்மையைப் பேச வேண்டும். பரிசுத்த ஆவியில் முதிர்ந்த நிலையில் இருந்தாலும், சாத்தான் எப்போதுமே விசுவாசிகளை பொய் பேசும்படி தூண்டுகிறான். மற்றவர்களை கடினமாய் நியாயந்தீர்க்கவும், மக்களை குறித்து வேறுபட்ட கருத்துகளை பரப்பவும் செய்கிறான். இயேசுவானவர் சோதிக்கப்பட்டது போல, நாமும் சோதிக்கப்படுகிறோம். எனவே தான் பவுல் எபேசியர்களுக்கு எழுதுகிறார். “அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன். (எபேசியர் 6:10-12)
மனிதனுடைய வாழ்வில் உள்ள பொய்யின் வேர்களை அன்பின் அப்போஸ்தலனாகிய யோவான் குறிப்பிட்டுக் காண்பிக்கிறான். இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து. குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவையுடைவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாயிருக்கிறான். ( 1யோவான் 2:22-23). தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான்; தேவனை விசுவாசியாதவனோ, தேவன் தம்முடைய குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சியை விசுவாசியாததினால், அவரைப் பொய்யராக்குகிறான். ( 1யோவான் 5:10). உங்கள் வாழ்வின் மையமாக திரியேக இறைவனைக் குறித்த சத்தியம் காணப்படுவதின் அர்த்தம், உங்கள் தனிப்பட்ட வாழ்வில் நீங்கள் தொடர்ந்து உண்மையுடன் காணப்படுவது ஆகும்.
4.11.8 - குரானின் இறைவனின் தந்திரம்.
இஸ்லாம் உண்மையை வேற்று ஆவி என்று குறிப்பிடுகிறது. சுரா அல் இம்ரானில் நாம் வாசிக்கிறோம். “அவர்கள் தந்திரமிக்கவர்கள், அல்லாஹ் தந்திரமிக்கவன், தந்திரமுள்ளவர்களில் அல்லாஹ்வே சிறந்தவன். இங்கே தந்திரம் என்பது யூதர்களைப் பொறுத்த மட்டில் இயேசுவைக் கொலை செய்வதற்கு உதவியது. ஆனால் இஸ்லாமிய கருத்தின்படி, அல்லாஹ் அவர்களை முட்டாள்களாக்கினான். இயேசுவை சிலுவைப் பாடுகளில் இருந்து காப்பாற்றி, அவரை உயிருடன் உயர்த்தினான் இயேசு சிலுவையிலறையப்படுவதற்கு அல்லாஹ் அனுமதிக்கவில்லை. தன்னுடைய உயர்வான தந்திரத்தால் தன்னிடம் அவரை உயர்த்திக் கொண்டான். காலம் மற்றும் இடத்தில் நிகழ்ந்த ஒரு சரித்திர நிகழ்ச்சியின் திரிபு தான் இது. சிலுவையின் முன்பு அல்லா தனது உண்மையான சுபாவத்தை வெளிப்படுத்துகிறான். அவன் உண்மையுள்ள நபர் அல்ல என்பதைக் காண்பிக்கிறான். அவன் உண்மையான இறைவன் அல்ல. சத்தியத்தின் எதிரி மற்றும் தந்திரம் நிறைந்தவர்களில் சிறந்தவன் அவன். எல்லா சத்தியத்திற்கும் முடிவான சிலுவை இஸ்லாமில் அல்லாஹ் உண்மையில் யார் என்பதை வெளிப்படுத்துகிறது. மக்கள் இரட்சிக்கப்படாமல் இருக்கவும், நித்திய வாழ்வை பெற்றுக் கொள்ளாமல் இருக்கவும் சிலுவையின் உண்மையை பிசாசு மட்டுமே மறுதலிக்க விரும்புகிறான்.
குரானில் அல்லாஹ்வை “மிகுந்த தந்திரமிக்கவன்” என்று இஸ்லாம் கூறுகின்றது. ஹைருல் மாக்கிரின். தந்திரத்தை ஒரு நற்பண்பாக அவரைப் பின்பற்றுவோர்கள் பார்ப்பதில் வியப்பேதுமில்லை. அவர்கள் என்னவெல்லாம் விரும்பினார்களோ அதை அடையவும், இஸ்லாமிய மதத்தை பரப்பவும் உதவிடும் வழியாக இது இருந்தது. முகம்மது பொய் மற்றும் ஏமாற்றுதல் நான்கு தருணங்களில் அனுமதிக்கிறார். இஸ்லாமை பரப்புவதற்கான புனிதப்போர், இரண்டு எதிரிகளை ஒப்புரவாக்குதல், ஒரு மனிதன் மற்றும் அவளது மனைவி, ஒரு மனைவி மற்றும் அவளது கணவன். இஸ்லாமில் நீங்கள் உங்களது நண்பன் அல்லது உங்களது எதிரியை நம்ப முடியாது. ஒவ்வொருவரும் மற்றவரை நம்பாமல் இருப்பார்கள். ஏனெனில் முஸ்லீம்கள் மத்தியில் நம்பிக்கையானது குறைந்து காணப்படுகிறது.
4.11.9 - வாழ்வின் பொய் அல்லது இறைவனின் உண்மை.
சிலுவையில் அறையப்பட்டு, மரித்தோரில் இருந்து எழுந்த ஒருவரை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென்றால், உங்களுக்குள் சத்திய ஆவியானவர் இல்லை. உங்கள் முழு வாழ்வும் பொய்யாகவும், சுயத்தை காட்டிக்கொடுப்பதாகவும் இருக்கும். ஏனெனில் நீங்கள் இயேசுவின் சிலுவை மரணத்தை புறக்கணிக்கிறீர்கள். இயேசு பிரதான ஆசாரியராக செயல்பட்டு பாவிகள் மற்றும் மனந்திரும்பிய பொய்யர்களின் பாவங்களுக்கு பரிகார பலியாக சிலுவையில் தனது இரத்தத்தை சிந்தினார். பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேற விண்ணபத்துடன் காத்திருந்தோர் மீது, அவர் உயிர்பெற்று எழுந்தபிறகு சத்திய ஆவியை ஊற்றினார். பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு அக்கினி மயமான நாவுகள் போலத் தோன்றினார். இயேசு தனது சீஷர்கள் என்ன செய்ய வேண்டும் என்று விரும்பினார் என்பதை இது விளக்குகின்றது. அவர்களது பொய்யான நாவுகள் எரிக்கப்பட வேண்டும், புதிய, ஆவிக்குரிய நாவுகளை அவர்கள் பெற வேண்டும். அதன் மூலம் நித்திய உண்மையை அவர்கள் அறிவிக்க முடியும். நித்திய உண்மை என்றால் என்ன? இறைவன் நம்முடைய பிதா, கிறிஸ்து நம்முடைய ஆண்டவர் இரட்சகர், பரிசுத்த ஆவியானவர் அவர். நமக்குள் அவர் வாசம்பண்ணுகிறார். திரியேக இறைவன் என்பது நித்திய எதார்த்தமாய் இருக்கிறது. சத்திய ஆவியானவர் கிறிஸ்துவைப் பின்பற்றுவோர் மூலம் இதை அறிவிக்கிறார். அவருடைய சத்தியத்தை அன்புடன் பேசுவதும், ஒவ்வொருவருக்குமான அவரது சிலுவையின் பரிகாரப்பலியை அறிவிப்பதும் நமக்கு கிடைத்த பாக்கியம்.
அன்புடன் சத்தியத்தைப் பேசுகிற, விண்ணப்பம் செய்யும் ஒரு நண்பனைப் பெற்றிருப்பது எவ்வளவு அற்புதமான காரியம். உங்களை எப்போதுமே துதித்துக் கொண்டிருக்கும் ஆயிரம் பேரை விட அவன் சிறந்தவன். எனவே நாம் அன்புடன் உண்மையைப் பேசும்படியாகவும், நம்முடைய நண்பர்களுக்காக விண்ணப்பம் செய்யும்படியாகவும், இயேசுவிடம் உதவி கேட்க வேண்டும். இதைத் தான் இயேசு நமக்கு கட்டளையாகக் கூறுகிறார். உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லையென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும். (மத்தேயு 5:37) அவருக்குள் நாம் உண்மையுள்ளவர்களாக இருக்கவும், அன்புடன் அவருடைய சத்தியத்தைப் பேசும்படி நம்மை வழிநடத்தவும் நாம் இயேசுவிடம் கேட்க வேண்டும்.