Previous Chapter -- Next Chapter
2. பொதுவான சொல்லாடல்கள்
காப்புரையில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில பதங்களை வரையறை செய்வது அவசியம். ஏனெனில் இதே சொற்கள் பிற துறைகளில் வேறு பொருளில் பயன்படுத்தப்படுவதால் அவை குழப்பத்தை உண்டாக்கக்கூடியவை. காப்புரைத் துறையில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வரையறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
தர்க்க முறை (Logic): ஒரு நியாயமான முடிவை வந்தடையும்படி குறிப்பிட்ட விதிமுறைகளையும் சட்டங்களையும் அடிப்படையாகக் கொண்டு தர்க்கத்தில் ஈடுபடுதல். இது இறுதி அதிகாரமாக அல்ல, புரிந்துகொள்ளுதலுக்கான கருவியாக இங்கு பயன்படுத்தப்படுகிறது.
பகுத்தறிவு வாதம் (Reason): ஒரு உண்மையை ஒருவருக்கு விளக்கி, ஏற்றுக்கொள்ள வைக்க முயற்சிக்கும் முறை. இதுவும் கிறிஸ்தவ வட்டாரத்தில் ஒரு தொடர்பாடல் கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றது.
உலகநோக்கு (Worldview): மனித அனுபவத்தின் ஒவ்வொரு பகுதியோடு தொடர்புடையதும் அதை விளக்குவதுமாகிய உண்மையை (metaphysics) அறிதல் (epistemology) மற்றும் அதற்குரிய நடத்தையைக் குறித்தும் (ethics) முன்அனுமானங்களின் (இவை இயற்கை விஞ்ஞான செயல்முறைகளால் நிரூபிக்கப்படாதவை) தொகுப்பு.