Previous Chapter -- Next Chapter
அ) முன்ஊகக் கொள்கைக் காப்புவாதம் நம்பிக்கையற்றவர்களை முற்றும் அறியாத முடிவுகளுக்கு வழிநடத்திச் செல்கிறது
இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. முன்ஊகக் காப்புரையாளர் அவநம்பிக்கையாளர்கள் பல காரியங்களை அறிந்திருக்கிறார்கள் என்று வலியுறுத்துகிறார். சில நேரங்களில் நம்பிக்கையாளர்கள் அறிந்திருப்பதிலும் அதிகமான காரியங்களை அவர்கள் அறிந்திருப்பார்கள். அவநம்பிக்கையாளர்கள் காரியங்களை அறிந்திருக்கிறார்களா இல்லையா என்பதல்ல இங்கு பிரச்சனை, அவர்களுடைய முன்ஊகங்கள் அவர்கள் அறிந்திருப்பதாகக் கோரும் காரியங்களை விளக்கக்கூடியவையாக இருக்கின்றனவா இல்லையா என்பதே பிரச்சனை.
கிரெக் பான்சன் (Greg Bahnsen) என்பவர் இதை இவ்வாறு குறிப்பிடுகிறார்: “பாவத்தில் விழுந்த மனிதன் கடவுளைப் பற்றிய அறிவிலிருந்து தப்பிக்க முடியாதவனாக இருப்பதால், அவர் உலகத்தில் இருக்கும் பொதுவான வெளிப்பாட்டிலிருந்து அறிவைப் பெற்றுக்கொள்ளக்கூடியவராக இருக்கிறார்; கடவுளின் படைப்பாக இருக்கும் அவர் இன்னும் தனது படைப்பாளியைக் குறித்து அழிக்க முடியாத அறிவைத் தன்னில் கொண்டிருக்கிறார், தன்னைக் குறித்த அறிவும் கடவுளைக் குறித்த அறிவை அவருக்குக் கொடுக்கிறது… அவநம்பிக்கையாளர் காரியங்களை அறிந்துகொள்ளும்படி தன்னுடைய அறிவைப் பயன்படுத்தக்கூடியவராகவும் பயன்படுத்துகிறவராகவும் இருக்கிறார்; தன்னுடைய அறிவு சார்ந்த நிலையைக் குறித்து அவர் எப்படிப்பட்ட புரிதல் உள்ளவராக இருந்தாலும் (ங்ல்ண்ள்ற்ங்ம்ர்ப்ர்ஞ்ண்ஸ்ரீஹப் ள்ண்ற்ன்ஹற்ண்ர்ய்) அவர் அறிவைப் பயன்படுத்தக்கூடியவராக இருக்கிறார்” (Presuppositional Apologetics, Greg Bahnsen, pp. 16-17).
உண்மையில் அவநம்பிக்கையாளரின் அறிவு அவருடைய முரண்பாட்டைக் காண்பிக்கிறது. அவநம்பிக்கையாளர்கள் எதையும் அறிந்திருப்பதில்லை என்று நாங்கள் வலியுறுத்துவதில்லை. மாறாக, அவர்கள் பல காரியங்களை அறிந்திருக்கிறார்கள் என்றும் அவர்களுடைய அறிவு அவர்களுடைய சொந்த முன்ஊகங்களுக்கோ அல்லது கிறிஸ்தவ முன்ஊகங்களுக்கோ முரண்பட்டவையாக இருப்பதில்லை என்றும் வலியுறுத்துகிறோம். அவர்களுடைய அறிவு அவர்களுடைய முன்ஊகங்களுடன் முரண்பட்டவையாக இருக்காவிட்டால் அவர்கள் கோழிக் குஞ்சுகளைப் பற்றி பேசினாலும் மறுவாழ்வைப் பற்றிப் பேசினாலும் எந்த அறிவையும் அவர்கள் நியாயப்படுத்த முடியாதவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கிருக்கும் அறிவு தாங்கள் மறுத்துரைக்கும் கடவுளை அவர்கள் ஏற்கனவே அறிந்திருக்கிறார்கள் என்பதற்குரிய ஆதாரமாக இருக்கிறது, ஏனெனில் அறிவு என்பது கிறிஸ்தவ உலக நோக்கில் மட்டுமே சாத்தியமாக இருக்கிறது. அவநம்பிக்கையாளர்கள் அறிந்திருக்கும் காரியங்கள் அவர்களுடைய முன்ஊகங்களில் நிமித்தமாக அவர்களுக்குக் கிடைத்த அறிவு அல்ல, அவர்கள் அப்படிப்பட்ட முன்ஊகங்களை வைத்திருந்தபோதிலும் அவர்கள் ஆச்சரியமாக பெற்றிருக்கும் அறிவு ஆகும்.
உதாரணமாக, ஒரு அவநம்பிக்கையாளர் “பருப்பொருள் சாராத காரியங்கள் என்று எதுவுமே கிடையாது” என்று அறிவிக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்படி அறிவித்தாலும் அவர்கள் நியாயவிதிகள் போன்ற பருப்பொருளற்ற காரியங்களைப் பயன்படுத்துகிறார்கள். அல்லது எல்லாமே அகவயமானது, புறவயப்பட்ட ஒழுக்கம் என்று ஒன்று இல்லை என்று அவர்கள் கூறுலாம். அப்படியானால் அவர்கள் ஹிட்லர் அல்லது அவர் யூதர்களைக் கொன்றதை (the Holocaust) எப்படி அவர்கள் தவறு என்று தீர்க்கிறார்கள்? புறவயப்பட்ட ஒழுக்கம் என்று எதுவும் இல்லை என்றால் ஹிட்லர் செய்த காரியம் சரி என்றோ அல்லது தவறு என்றோ யாரும் கண்டிக்கவோ பாராட்டவோ முடியாதே? அது சாதாரணமாக ஒரு வியாபாரி தன்னுடைய வியாபாரப் பொருட்களை ஒரு பொதியில் இருந்து வியாபாரத்துக்காக பைக்கு மாற்றுவதைப் போன்றதாகவே இருக்கும்.Hitler did”.