Grace and Truth

This website is under construction !

Search in "Tamil":
Home -- Tamil -- 17-Understanding Islam -- 037 (Christ’s Intercession)
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Ukrainian -- Yoruba

Previous Chapter -- Next Chapter

17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
பகுதி மூன்று: முஸ்லீம் கிறிஸ்துவைப் புரிந்துகொள்ளுதல்
அத்தியாயம் 6: இஸ்லாத்தில் கிறிஸ்து

6.9. கிறிஸ்து பரிந்துபேசுகிறார்


குர்ஆன் கூறுகிறது:

"பரிந்து பேசுதல் எல்லாம், அல்லாவுக்கே உரியது." (அல்குர்ஆன் 39:44)

குர்ஆன் கூறுகிறது:

"மலக்குகள் கூறினார்கள்; "மர்யமே! நிச்சயமாக அல்லா தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்;. மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்." (அல்குர்ஆன் 3:45).

முஸ்லீம் அறிஞர் அஸ்-ஸ்யீதி, தனது குர்ஆன் விளக்கவுரையில் தப்ஸீர் அல்-ஜலாலைன் இந்த வசனத்தைப் பற்றி எழுதுகிறார்: "அவர் தீர்க்கதரிசியாய் இருப்பதன் மூலம் இவ்வுலகிலும், அவரது பரிந்துபேசுதலால் மறுமையிலும் கனப்படுத்தப்படுவார்."

குர்ஆனில் இயேசு கிறிஸ்துவுக்கு சில பண்புகள் இருப்பதை குறிப்பிடுகின்றன, மற்ற தீர்க்கதரிசிகளுக்கும் அந்த பண்புகள் இருந்தன. எடுத்துக்காட்டாக, மோசே அற்புதங்கள் செய்ததாக குர்ஆன் குறிப்பிடுகிறது. ஆனால், இயேசு கிறிஸ்து மற்ற தீர்க்கதரிசிகளிடம் இருந்து வேறுபடுகிறார். ஏனென்றால், இந்த அனைத்து பண்புகளையும் அவர் ஒன்றாகக் கொண்டுள்ளார். குர்-ஆன் அவர் ஒரு சாதாரண மனிதர் என்று கூறுகிறது, ஆனால் அதே நேரத்தில் குர்-ஆன் மற்ற இடங்களில் இந்த பண்புகள் மற்றும் செயல்பாடுகள் அல்லாவுக்கு மட்டுமே உரியது என்று கூறுகிறது. இதை விளக்குவது முஸ்லீம்களுக்கு கடினமான காரியம். நிச்சயமாக, குர்ஆனை இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மையை நிரூபிக்கப் பயன்படுத்த இயலாது, அப்படிச் செய்ய வேண்டியதும் இல்லை. ஆனால், உங்கள் இஸ்லாமிய நண்பரை ஒரு சாதாரண மனிதருக்கு ஏன் தெய்வீக பண்புகள் கற்பிக்கப்பட்டுள்ளன என்பதை சிந்தித்துப் பார்க்க ஊக்குவிப்பது உதவியாக இருக்கும்.

www.Grace-and-Truth.net

Page last modified on April 21, 2026, at 06:08 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)