Grace and Truth

This website is under construction !

Search in "Tamil":
Home -- Tamil -- 17-Understanding Islam -- 038 (CHAPTER SEVEN: CHRIST'S MIRACLES IN THE QUR'AN)
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Ukrainian -- Yoruba

Previous Chapter -- Next Chapter

17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
பகுதி மூன்று: முஸ்லீம் கிறிஸ்துவைப் புரிந்துகொள்ளுதல்

அத்தியாயம் 7: குர்ஆனில் கிறிஸ்துவின் அற்புதங்கள்


அற்புதங்களைச் செய்த ஒரே இஸ்லாமிய தீர்க்கதரிசி கிறிஸ்து மாத்திரமல்ல என்றாலும், அவரது அற்புதங்களைப் பற்றிய குர்ஆனிய கதைகளைப் பார்ப்பது குறிப்பிடத்தக்கதாகும், ஏனெனில் அவை முஸ்லீம்கள் அவரைப் பார்க்கும் விதத்தைப் பற்றிய நமது புரிதலை அதிகரிக்கின்றன. குர்ஆனில் கிறிஸ்து செய்ததாக சொல்லப்படும் சில அற்புதங்கள் நற்செய்தியிலும் (குருடர்களைக் குணப்படுத்துதல், இறந்தவர்களை உயிர்த்தெழச் செய்தல்) காணப்படுகின்றன, ஆனால் மற்றவை காணப்படவில்லை; களிமண்ணிலிருந்து பறவைகளை உருவாக்குவது போன்ற சில அற்புதங்கள் அர்த்தமற்றவையாகவும் தோன்றுகின்றன. முகமது வாய்மொழி பாரம்பரியம் மற்றும் நம்பமுடியாத தகவல் ஆதாரங்களை நம்பியிருந்ததே இதற்குக் காரணமாக இருக்கலாம். நற்செய்தி நூல்களில் காணப்படாத பல அற்புதங்கள் 2 முதல் 4ஆம் நூற்றாண்டு வரையிலான கிறிஸ்தவ அபோக்ரிபல் மற்றும் போலியாக எழுதப்பட்ட படைப்புகளில் காணப்படுகின்றன. அவை தோமாவின் குழந்தைப் பருவ நற்செய்தி, எகிப்தியர்களின் காப்டிக் நற்செய்தி, மரியாளின் பிறப்பின் நற்செய்தி, தச்சர் ஜோசப்பின் வரலாறு, சிரியாவின் குழந்தைப் பருவ நற்செய்தி முதலியன.

இந்தக் கதைகளைப் பற்றி முகமது எப்படித் தெரிந்துகொண்டார்? அவரது வாழ்க்கையின் ஆரம்பத்தில் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுடன் (முக்கியமாக விசுவாச துரோக கிறிஸ்தவர்களுடன்) அவருக்கிருந்த சில தொடர்புகளை நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம், அந்த நேரத்தில் முகமதுவுடன் இணைக்கப்பட்ட நபர்களில் ஒருவர் கதிஜாவின் உறவினர் வரக்கா ஆவார், அவர் எபிரேய நற்செய்தியை மொழிபெயர்த்தார் (இது எபியோனியர்களின் சுவிசேஷம் என்று நம்பப்படுகிறது). முகமதுவின் காலத்தில், அவர் மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதாகக் மக்கள் குற்றம் சாட்டினர், உண்மையில் குர்ஆன் இதை உறுதிப்படுத்துகிறது: குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

"நிச்சயமாக அவருக்கு கற்றுக் கொடுப்பவன் ஒரு மனிதனே, (இறைவனல்லன்)" என்று அவர்கள் கூறுவதை திடமாக நாம் அறிவோம்; எவனைச் சார்ந்து அவர்கள் கூறுகிறார்களோ, அவனுடைய மொழி (அரபியல்லது) அன்னிய மொழியாகும்; ஆனால், இதுவோ தெளிவான அரபி மொழியாகும். (அல்குர்ஆன் 16:103)

முகமதுவுக்கு போதித்தவர் அந்நியர் என்று குர்ஆன் கூறுவதைக் கவனியுங்கள், ஏனெனில் மக்காவாசிகள் முகமதுவை ஒரு ரோமானிய அடிமையிடமிருந்து கற்றுக்கொண்டதாக குற்றம் சாட்டியதாக அது தெரிவிக்கிறது. இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்கள் நமக்குத் தெரிவிப்பது என்னவென்றால், முகமது நபி அவர்கள் தன்னை ஒரு தீர்க்கதரிசி என்று அறிவிப்பதற்கு முன்பே, காபாவை குறைஷிகள் மறுசீரமைப்பு செய்தனர், மேலும் கட்டுமான பணிகளுக்கு பக்ஹூம் என்ற காப்டிக் தச்சரை (கிறிஸ்தவத்துக்கு மாறியவரை) ஈடுபடுத்திக் கொண்டார்கள் (புதிய இஸ்லாமிய கலைக்களஞ்சியம்). எனவே, முகமது தன்னை தீர்க்கதரிசி என்று கோருவதற்கு முன்பு தனது வாழ்க்கையின் முதல் 40 ஆண்டுகளில் வாழ்ந்த யூதர்கள் அல்லது கிறிஸ்தவர்கள், பயணிகள் அல்லது அடிமைகள் கூறிய கதைகளை கேட்டிருக்க முடியும்.

இஸ்லாமில் கிறிஸ்து செய்ததாகக் கூறப்படும் முக்கிய அற்புதங்களைப் பற்றிய ஒரு சுருக்கமான விவாதம் இங்கே உள்ளது (கீழே குறிப்பிடப்படாத பிற சிறிய அற்புதங்களும் இருக்கின்றன):

www.Grace-and-Truth.net

Page last modified on April 22, 2026, at 03:48 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)