Home -- Tamil -- 17-Understanding Islam -- 049 (Nominal Christianity)
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Ukrainian -- Yoruba
Previous Chapter -- Next Chapter
17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
இஸ்லாத்தில் சுவிசேஷத்திற்கு இருக்கும் தடைகளைப் புரிந்துகொள்ளுதல்
அத்தியாயம் 9: முஸ்லீம்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கும்போது கிறிஸ்தவர்கள் கடந்து வர வேண்டிய தடைகள்
9.4. பெயர் கிறிஸ்தவம்
தங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்கிற பலர் பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள கிறிஸ்தவ உபதேசங்களின்படி வாழாதவர்களாக மற்றும் அவற்றின் அவசியத்தை உணராதவர்களாக இருக்கிறார்கள். பெயரளவு கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவ மதம் என்பது அவ்வப்போது தேவாலயத்திற்குச் சென்று கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொள்வதைத் தவிர வேறொன்றுமில்லை என்று கருதுகிறார்கள். வேறு சிலர் பைபிளின் தெளிவான சத்தியத்தை ஏற்றுக்கொள்வதை விட, அதைத் தனிநபருக்குரிய ஒரு ஆழ்ந்த அனுபவமாகக் கருதுகிறார்கள். கடவுளுடைய வார்த்தையை மற்றவர்களுக்கு போதிக்க இத்தகையோர் தகுதியற்றவர்கள் என்பது தெளிவு, ஏனெனில் அவர்களே பைபிளின் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. கிறிஸ்து இவ்வாறு கூறுகிறார்,
“நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது..” (மத்தேயு 5:13)