Home -- Tamil -- 17-Understanding Islam -- 050 (Spiritual forces of evil)
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Ukrainian -- Yoruba
Previous Chapter -- Next Chapter
17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
இஸ்லாத்தில் சுவிசேஷத்திற்கு இருக்கும் தடைகளைப் புரிந்துகொள்ளுதல்
அத்தியாயம் 9: முஸ்லீம்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கும்போது கிறிஸ்தவர்கள் கடந்து வர வேண்டிய தடைகள்
9.5. பொல்லாத ஆவிகளின் சேனை
அந்தகாரப் பிரபு உலக மக்கள் தொகையில் 20%ஐ எளிதில் தனது கட்டுப்பாடிலிருந்து விட்டுவிடுவான் என்று ஒரு நிமிடமாவது நினைத்துப்பார்க்க முடியுமா? கிறிஸ்தவர்களாகிய நாம் அடிக்கடி மனதில் வைத்திருக்கத் தவறிவிடும் விஷயங்களில் ஒன்று அந்தகாரத்தின் வல்லமை. இறுதி அதிகாரம் கடவுளுக்கே இருக்கிறது என்பது நமக்குத் தெரிந்தாலும், மிக அதிகமான மக்களை வஞ்சிக்க முயற்சிசெய்து, சுவிசேஷம் அறிவிப்பதை நிறுத்துவதற்காகவும் சாத்தான் தனது முழு முயற்சியையும் செய்கிறான் - தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் கூட வழிதவற தூண்டுவதற்கு முயற்சிக்கிறான் (மத்தேயு 24:24). பவுல் இந்த போராட்டத்தின் யதார்த்தத்தை ஒப்புக்கொள்கிறார்:
“ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.” (எபேசியர் 6:12)