Previous Chapter -- Next Chapter
14.4. ஏற்கனவே திருமணமாகியிருக்கும் இஸ்லாமியர்
ஏற்கனவே திருமணமானவர்கள் மதம் மாறும்போது, அவர்கள் முற்றிலும் வேறுபட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பலதார மணம் செய்துகொண்டிருக்கும் ஒருவர், தனது மனைவிகளில் ஒருவரையோ அனைவரையோ அழைத்துக்கொண்டோ அல்லது இல்லாமலோ மதம் மாறலாம், அவருக்கு குழந்தைகள் இருக்கலாம். அல்லது திருமணமான ஒரு பெண் தனது கணவர் மதம்மாறாமல், தான் மட்டும் மதம் மாறியிருக்கலாம். இதுபோன்ற பிரச்சனைகள் உள்ளூர் சபையிலும் முழு சபையின் சூழலிலும் கலந்துரையாடப்பட வேண்டும் (இது நமது சினாடுகளிலும் இறையியல் கல்லூரிகளிலும் செய்ய வேண்டிய விவாத வகையைச் சார்ந்தது). இதனால் ஏற்படும் சிரமங்களைப் பற்றி உள்ளூர் சபையானது மிகுந்த உணர்வுடன் இருக்க வேண்டும். மேலும், நடைமுறையிலான, உணர்வுபூர்வ மற்றும் ஆவிக்குரிய ஆதரவை வழங்க தயாராக இருக்க வேண்டும்.