Home
Links
Contact
About us
Impressum
Site Map?


Afrikaans
عربي
বাংলা
Dan (Mande)
Bahasa Indones.
Cebuano
Deutsch
English-1
English-2
Español
Français
Hausa/هَوُسَا
עברית
हिन्दी
Igbo
ქართული
Kirundi
Kiswahili
മലയാളം
O‘zbek
Peul
Português
Русский
Soomaaliga
தமிழ்
తెలుగు
Türkçe
Twi
Українська
اردو
Yorùbá
中文



Home (Old)
Content (Old)


Indonesian (Old)
English (Old)
German (Old)
Russian (Old)\\

Home -- Tamil -- 11-Presuppositional Apologetics -- 014 (What is the Christian's Presupposition?)
This page in: -- Chinese -- English -- French? -- German -- Indonesian -- Russian -- TAMIL -- Ukrainian

Previous Chapter -- Next Chapter

11. முன்ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரைக்கான விவிலிய அறிமுகம்
கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிரான தாக்குதல்களில் மறைந்திருக்கும் பொய்களையும் அடிப்படைத் தவறுகளையும் எப்படி அம்பலப்படுத்துவது?
பாகம் 2 – ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரையின் அடிப்படை அணுகுமுறை

12. எது கிறிஸ்தவ முன்ஊகம்?


ஏற்கனவே பார்த்தபடி கிறிஸ்தவர்களாக நாம் செய்கிற, சிந்திக்கிற அல்லது செய்கிற காரியங்கள் அனைத்தும் வேதாகமத்தின் சத்தியத்தின் மீது கட்டப்பட்டிருக்க வேண்டும். நம்முடைய முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும் கடவுளை நேசிக்க வேண்டும் (மத். 22:37). கடவுளுக்கு முன்பாக வேறு தெய்வங்கள் நமக்குக் கூடாது என்று முதல் கட்டளை கூறுகிறது (உபா. 5:7). எபிரெய மூல பாடத்தில் “என்னுடைய முகத்திற்கு முன்பாக அல்லது என்னுடைய பிரசன்னத்திற்கு முன்பாக வேறு தெய்வங்கள் உனக்கு இருக்க வேண்டாம்” என்று சொல்லப்பட்டிருக்கிறது; நாம், முதலில் கடவுளையும் அவருக்கு அடுத்தது, இரண்டாவது மற்றும் மூன்றாவதாக வேறு தெய்வங்களை வைத்திருக்கலாம் என்று சொல்லப்படவில்லை.

நாம் ஏற்கனவே பார்த்தபடி பேதுரு தன்னுடைய சொந்த அனுபவத்தைவிட வேதாகமத்தின் அதிகாரத்தை மேன்மையான இடத்தில் வைக்கிறார். அதைப் பற்றி மீண்டும் சிந்திப்பது பயனுள்ளதாயிருக்கும் (2 பேதுரு 1:16-19). “அதிக உறுதியான” என்ற சொற்றொடரைக் கவனியுங்கள்: “அதிக உறுதியான தீர்க்கதரிசனமும் நமக்கு உண்டு;” இது அவருடைய கண் கண்ட காட்சியையும் சொந்த அனுபவத்தையும்விட மேலானது என்று பேதுரு சொல்கிறார். பேதுருவைப் பொறுத்தவரை தீர்க்கதரிசன வசனம் (வேதாகமம்) இறுதியான அதிகாரம் உடையது. இதுதான் அவருடைய முன்ஊகம். அவர் தன்னுடைய சொந்த அனுபவம் உட்பட அனைத்தையும் அதைக் கொண்டுதான் விளக்கம் செய்கிறார்.

ஒரு கிறிஸ்தவனுக்கு வேதாகமம்தான் இறுதி அதிகாரமாக இருக்கிறபடியால், அதற்கு வெளியே உள்ள எதையும் ஆதாரமாக அதிகாரமாக கொண்டு அதன் மெய்த் தன்மையை நிறுவ முடியாது.

முன்ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்பு வாதத்தில் கடவுளுடைய வார்த்தையாகிய உலக நோக்குதான் மனித அறிவைச் சாத்தியமாக்கும் அடிப்படை. ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட கொள்கைக் காப்புரையில் நம்பிக்கையாளர்களும் அவநம்பிக்கையாளர்களும் நின்று பேசக்கூடிய ஒரு நடுநிலையான தளத்தில் வெறும் மனித அறிவின்படி முன்வைக்கப்படும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு சத்தியத்தின் உண்மைத் தன்மை நிறுவ முயற்சிக்கப்படுகிறது. ஆனால் நாம் வேதாகமத்தைப் பார்க்கும்போது தன்னை பற்றி அது முன்வைக்கும் கருத்துக்கள் அது ஒருவேளை உண்மையாக இருக்கலாம் என்று இல்லாமல் அது முற்றிலும் நிச்சயமான உண்மை என்றே வலியுறுத்துகிறது. அதற்கான சில உதாரணங்களை நாம் இங்கே பார்க்கிறோம்:

“உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்.” (1 யோவான் 5:13).
"... ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்." (யோவான் 17:3).
“உங்களை விரோதிக்கிறவர்கள் ஒருவரும் எதிர்பேசவும் எதிர்நிற்கவும் கூடாத வாக்கையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன்.” (லூக்கா 21:15).
"ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான்." (அப். 2:36).
"சவுல் அதிகமாகத் திடன்கொண்டு, இவரே கிறிஸ்துவென்று திருஷ்டாந்தப்படுத்தி, தமஸ்குவில் குடியிருக்கிற யூதர்களைக் கலங்கப்பண்ணினான்." (அப். 9:22).
“உம்முடைய வசனம் சமூலமும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம்.” (சங். 119:160).
“கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.” (சங். 19:7).
“தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்.” (சங். 18:30).
“உமது சாட்சிகள் மிகவும் உண்மையுள்ளவைகள்; கர்த்தாவே, பரிசுத்தமானது நித்தியநாளாக உமது ஆலயத்தின் அலங்காரமாயிருக்கிறது.” (சங். 93:5).
“அவருடைய கரத்தின் கிரியைகள் சத்தியமும் நியாயமுமானவைகள்; அவருடைய கட்டளைகளெல்லாம் உண்மையானவைகள்.” (சங். 111:7).
“உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.” (யோவான் 17:17).

கிறிஸ்தவர்களாக நாம் வேதாகமம் சொல்வது சரியா தவறா என்பதை நியாயந்தீர்க்க மனித ஞானத்தை நாட முடியாது. அவ்வாறு முயற்சிப்பது ஒருபோதும் வெற்றிகரமாக இருக்காது. கிறிஸ்தவ எழுத்தாளராகிய சி. எஸ். லூயிஸ் இவ்வாறு எழுதுகிறார்: “தன்னுடைய படைப்பாளிக்கு எதிராகக் கலகம் செய்யும் ஒரு படைப்பு தன்னுடைய சொந்த சக்தியின் ஆதாரத்திற்கு – தான் கலகம் செய்வதற்கு வேண்டிய சக்தியின் ஆதாரம் உட்பட – எதிராக கலகம் செய்கிறது … இது ஒரு பூவில் இருந்து எடுக்கபட்ட வாசனைப் பொருள் ஒன்று அந்த பூவினத்தையே அழிக்க நாடுவதைப் போன்றது” (இ.ந. கங்ஜ்ண்ள், அ ஙண்ய்க் அஜ்ஹந்ங்,ல்104). கிறிஸ்தவர்களாக நாம் இன்னொரு இறுதி அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதன் மூலமாக அவநம்பிக்கையாளர்களுடன் சேர்ந்து கடவுளுக்கு எதிராகக் கலகம் செய்யக்கூடாது. இறுதி அதிகாரமாக கடவுளிடம் தான் நாம் அபயமிட வேண்டும். இப்படிச் செய்யும் போது நாம் “முடிவில்லாத வாதத்திற்குள்” நுழைகிறோம் என்று சொல்கிறீர்களா? ஒருபோதும் இல்லை. சற்று சிந்தித்துப் பாருங்கள். ஒரு அவநம்பிக்கையாளர் “மனித அறிவுதான் என்னுடைய இறுதி அதிகாரம்” என்று சொல்வாரானால், நீங்கள் உடனடியாக என்ன கேட்பீர்கள்? “இதை நீங்கள் எப்படி நிரூபிப்பீர்கள்?” என்று கேட்பீர்கள் அல்லவா? அதற்கு அவர் மனித அறிவு அதை நிரூபிக்கிறது என்பாரானால் அதுதான் “முடிவில்லா வாதமாகும்”. அல்லது அவர் “ல அதை நிறுவுகிறது”, என்றும் அதில் “ல” என்பது விஞ்ஞானமாகவோ, பொது அறிவாகவோ அல்லது வேறு எதுவாகவும் இருக்குமானால், இங்கு மனிதனுடைய தீர்மானிக்கும் திறன் இறுதி அதிகாரம் அல்ல. ஆனால் “ல” என்பதே இறுதி அதிகாரமாக இருக்கிறது. ஆகவே நாம் “இறுதி அதிகாரம்” என்று பேசும்போது அது தன்னைத் தானே நிறுவிக்கொள்ளவும் உறுதி செய்துகொள்ளவும் கூடியதாக இருக்க வேண்டும். இறுதி அதிகாரத்திற்கு வெளியே எந்த ஒரு காரியத்தின் அடிப்படையிலும் அந்த இறுதி அதிகாரத்தை நிறுவ வேண்டியிருந்தால் அது இறுதி அதிகாரமாக இருக்க முடியாது.

www.Grace-and-Truth.net

Page last modified on April 12, 2023, at 03:13 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)