Home
Links
Contact
About us
Impressum
Site Map?


Afrikaans
عربي
বাংলা
Dan (Mande)
Bahasa Indones.
Cebuano
Deutsch
English-1
English-2
Español
Français
Hausa/هَوُسَا
עברית
हिन्दी
Igbo
ქართული
Kirundi
Kiswahili
മലയാളം
O‘zbek
Peul
Português
Русский
Soomaaliga
தமிழ்
తెలుగు
Türkçe
Twi
Українська
اردو
Yorùbá
中文



Home (Old)
Content (Old)


Indonesian (Old)
English (Old)
German (Old)
Russian (Old)\\

Home -- Tamil -- 11-Presuppositional Apologetics -- 015 (Worldviews in collision)
This page in: -- Chinese -- English -- French? -- German -- Indonesian -- Russian -- TAMIL -- Ukrainian

Previous Chapter -- Next Chapter

11. முன்ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரைக்கான விவிலிய அறிமுகம்
கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிரான தாக்குதல்களில் மறைந்திருக்கும் பொய்களையும் அடிப்படைத் தவறுகளையும் எப்படி அம்பலப்படுத்துவது?
பாகம் 3 – ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரையின் செயல்முறைகள்

13. மோதலில் உலக நோக்குகள்


நாம் அவநம்பிக்கையாளர்களுடன் விவாதத்தில் ஈடுபடும்போது நாம் வெறுமனே சில நம்பிக்கைக் கூற்றுக்களைப் பற்றி மட்டும் கலந்துரையாடுவதில்லை. இயேசு மரணத்திலிருந்து உயிரோடு எழுந்தாரா அல்லது வேதாகமம் கடவுளுடைய வார்த்தையா அல்லது வேறு ஏதாவது ஒரு கிறிஸ்தவ கொள்கையை மட்டும் தனியாக எடுத்து அதைப் பற்றிப் பேசுவதில்லை. நாம் முழு உலக நோக்கைப் பற்றியும் பேசுகிறோம். மெய்மையை பொருளுள்ளதாக்குகிறதும் மனித அறிவை சாத்தியமாக்கிறதுமான இறுதி அதிகாரத்தைப் பற்றிப் பேசுகிறோம். நம்மோடு பேசும் நபர் நாத்திகராகவோ, இஸ்லாமியராகவோ, பௌத்தராகவோ, இந்துவாகவோ அல்லது வேறு ஏதாவது ஒரு உலக நோக்கைக் கொண்டிருப்பவராகவோ யாராக இருந்தாலும் இதுதான் உண்மை. நாம் உலக நோக்குகளைப் பற்றிப் பேசுகிறோம்.

நாம் சில காரியங்களை மட்டும் நிரூபித்துவிட்டால் போதும் என்று கருதினால் நமக்கு பெரிய ஆச்சரியங்கள் காத்திருக்கும். உதாரணமாக நீங்கள் இயற்கையை நம்பும் ஒரு நாத்திகரோடு உயிர்தெழுதலைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்று கருதிக்கொள்ளுங்கள். நீங்கள் உயிர்த்தெழுதலை நிரூபித்துவிட்டால் உங்கள் பணி முடிந்துவிட்டது என்று நீங்கள் கருதலாம். ஆகவே, நீங்கள் வரலாற்று ரீதியாகவும் தர்க்க ரீதியாகவும் முயற்சித்து உயிர்தெழுதலுக்கு எதிராக வைக்கப்படும் கருத்துக்களுக்கு நீங்கள் மறுப்புத் தெரிவிக்கலாம் (வேறு கல்லறை எனும் கருத்து, களவாடப்பட்ட உடல் என்ற கருத்து, மூர்ச்சûயாதல் கருத்து, இரட்டையர் கருத்து போன்ற இன்னும் பல கருத்துக்கள் உயிர்த்தெழுதலுக்கு எதிராக முன்வைக்கப்படுகின்றன). நீங்கள் உங்கள் வாதங்களை முன்வைத்து உங்கள் கருத்தை நிறுவலாம். இப்போது உங்கள் முன் இருக்கும் எதிர்வாதி உங்கள் வாதங்களை ஏற்றுக்கொள்வார் என்றும் அவரோடு சேர்ந்து விண்ணபத்தை ஏறெடுப்பதுதான் மீதி என்றும் நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். நீங்கள் பேசிக்கொண்டிருப்பது இயற்கை மீது நம்பிக்கையுள்ள இறை மறுப்பாளர் என்பதை நினைத்துக்கொள்ளுங்கள். கீழ்க் காண்பவையே அவருடைய முன்னணுமானங்கள்: இவ்வுலகில் இருப்பதெல்லாம் இயற்கையாகத் தோன்றியவையே (பொருள் சார்ந்தவையே). பொருள் சாராத காரியங்கள் எதுவும் இந்த உலகத்தில் இல்லை (பண்பு சார்ந்த அல்லது ஆன்மீக காரியங்கள் என்று எதுவும் இல்லை. எல்லாவற்றிற்கும் இயற்கை சார்ந்த ஒரு விளக்கம் இருக்கிறது. இந்த அண்டத்தில் நடைபெறும் நிகழ்வுகள் அனைத்துக்கும் ஒரு பௌதீக காரணம் இருக்கிறது. இப்படி இன்னும் பல முன்ஊகங்கள். அதனால் இப்போது உங்கள் நண்பர் நீங்கள் முன்வைத்த ஆதாரங்களுக்கு எதிராக இரண்டு பதில்களைக் கொண்டு வருவார். அவை இரண்டுமே அவருடைய உலக நோக்கு என்னும் சட்டகத்திற்குள் சிறப்பாகச் செயல்படக் கூடியவை:

அ) உங்கள் கருத்துடன் நான் உடன்படுகிறேன். இயேசுவின் உடல் மரணமடைந்தது. பிறகு மீண்டும் உயிரோடு எழுந்தது. அது ஏன் இயற்கையாக நடைபெற்றது என்பதை நாங்கள் கண்டு பிடிக்க எங்களுக்கு சற்று அவகாசம் கொடுங்கள். உண்மையில் சில வருடங்களுக்கு முன்பு வரை மனிதனுடைய மரபணு குறித்து நமக்கு அதிகம் தெரியாது. இப்போது நாம் அதைப் பற்றி அறிந்திருக்கிறோம். ஆகவே, எனக்கு நேரம் கொடுப்பீர்களானால் அவருடைய உயிர்த்தெழுதலை நாங்கள் ஒரு இயற்கையான நிகழ்வுதான் என்று விளக்க முடியும் எனலாம். அல்லது:
ஆ) ஆஹ! இது மிகவும் வித்தியாசமான காரியம். நாம் வாழ்கின்றது தற்செயலாக எதுவும் நடைபெறுகிற உலகம் என்பதைக் கவனித்தீர்களா? மரணமடைந்தவர்கள் கூட மீண்டும உயிரோடு எழுகிறார்களே! எனலாம்.

பார்த்தீர்களா? அவநம்பிக்கையாளர்களுக்கு நீங்கள் ஆதாரங்களைக் கொடுக்க வேண்டியதில்லை. அப்படி நீங்கள் ஆதாரங்களைக் கொடுக்கும்போது அவர்கள் தங்கள் முன்ஊகங்களின் அடிப்படையில் தங்களுடைய உலகப் பார்வையைச் சார்ந்து நீங்கள் கொடுத்த ஆதாரங்களை அவர்கள் மறு விளக்கம் செய்வார்கள்.

இஸ்லாமிய நண்பர்களும் இதே காரியத்தைச் செய்வார்கள். வேதாகமம் உண்மையானது என்றும் தவறற்றது என்றும் அதனால் அவர்கள் அதை நம்ப வேண்டும் என்றும் நிரூபித்துக் காட்டுங்கள். அவர்கள் உங்களிடம் இப்படிச் சொல்வார்கள்: நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், வேதாகமத்திற்குப் பிறகு வந்த குர்ஆன் வேதாகமத்தைத் தேவையற்றதாக்கி விட்டது. ஆகவே, அது முஸ்லிம்களுக்குப் பொருத்தமானது அல்ல என்பார்கள் (இப்படிப்பட்ட வாதங்களைப் பற்றி இன்னும் விவரமாக பிறகு பார்ப்போம்).

www.Grace-and-Truth.net

Page last modified on April 12, 2023, at 03:17 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)