Grace and TruthThis website is under construction ! |
|
Home Afrikaans |
Home -- Tamil -- 11-Presuppositional Apologetics -- 046 (Further examples)
This page in: -- Chinese -- English -- French? -- German -- Indonesian -- Russian -- TAMIL -- Ukrainian
Previous Chapter -- Next Chapter 11. முன்ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரைக்கான விவிலிய அறிமுகம்
கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிரான தாக்குதல்களில் மறைந்திருக்கும் பொய்களையும் அடிப்படைத் தவறுகளையும் எப்படி அம்பலப்படுத்துவது?
பாகம் 4 – செயலில் ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரை
31. வேதாகம் ஓரிறைக் கோட்பாட்டின் போலி வடிவத்திற்கு பதிலுரைத்தல் – இஸ்லாம்
ஊ) மேலதிக உதாரணங்கள்கீழ்க்காணும் குர்ஆன் வசனங்களை ஒப்பிட்டுப் பாருங்கள்:
ஆகவே, மக்கள் நன்றியுள்ளவர்களாக இருந்தால் அல்லாஹ் அவர்களைத் தண்டிக்க வேண்டிய தேவையில்லை. (i) – இந்த கூற்று ஒத்துப்போகிறதா என்பதை நீங்கள் பாருங்கள் – தான் ஒரு தூதரை அனுப்பும்வரை அவர் யாரையும் தண்டிப்பதில்லை (ii), அவர் எல்லா இனங்களுக்கும் தூதரை அனுப்பியிருக்கிறார் (iv). அப்படியானால் அல்லாஹ் மக்களை மீட்க வேண்டுமாயின் அவர் செய்யவேண்டியது ஒன்றுதான்; அவர்களுக்கு அவர் தூதரை ஒருபோதும் அனுப்பக்கூடாது. இவ்வாறு அல்லாஹ்வுக்கு எதிராக தூதரை அனுப்பாமல் எங்களைத் தண்டிக்கிறான் என்று வாதம் செய்யாதபடி ((கு 17:15), கு 4:165)) அல்லாஹ் தூதர்களை அனுப்புகிறான். ஆனால், மனிதர்களில் பெரும்பான்மையானவர்கள் நிச்சயமாக அவநம்பிக்கையாளர்களாகப் போகிறார்கள் என்றால் (கு 12:103), ஏன் அல்லாஹ் தூதர்களை அனுப்பி அவருடைய நேரத்தை வீணாக்கிக்கொண்டிருக்கிறார்? கிறிஸ்தவ உலக நோக்கில் மனிதர்கள் அனைவருமே தண்டனைக்குரியவர்களாக இருப்பதாலும் அவர்கள் மீட்கப்பட அவர்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும் என்ற போதனை மிகவும் சரியாகப் பொருந்தி வருகிறது. ஆனால், இஸ்லாத்தில் தூதரை மக்கள் புறக்கணிக்காதவரை அவர்கள் தண்டனைக்குரியவர்கள் அல்ல என்றால் அவர்களுக்கு ஏன் தூதரை அனுப்ப வேண்டும்? மேலும் குர்ஆன் இவ்வாறும் போதிக்கிறது: “இன்னும் இஸ்லாம் அல்லாத வேறு மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் அது ஒருபோதும் அவர்களிடமிருந்து ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது; மேலும் அவர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில்தான் இருப்பர்.” (கு 3:85). ஆகவே, அல்லாஹ் அனுப்பிய தூதர்களால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. மற்ற தூதர்கள் அனைவருமே முஸ்லிம்கள்தான் என்று முஸ்லிம்கள் வாதிட முடியும்; அது இஸ்லாத்தின் அடித்தளத்தையே அழித்துவிடும் வாதம் ஆகிவிடும். குர்ஆனை நம்புவதற்கு அப்பால் முஸ்லிம்களின் முக்கிய கடமைகளில் ஒன்று (ஸஹதா-வில் உள்ள நம்பிக்கை அறிக்கை, ஐந்து தூண்கள்) முகம்மதுவை நம்புவது. இன்னொன்று உடல் சுகத்துடன் இருப்பவர் முகம்மதுவின் வாழ்வோடு தொடர்புள்ள ஹஜ்-க்கு வாழ்நாளில் ஒரு முறை பயணம் மேற்கொள்வது. இங்கேதான் பிரச்சனைகள் இருக்கின்றன. இந்த காரியங்களை ஒரு முஸ்லிம் கைக்கொள்ள வேண்டியதில்லை என்று ஒரு முஸ்லிம் சொன்னால் நமக்கு முகம்மதுவும் தேவையில்லை குர்ஆனும் தேவையில்லை. அவை நிச்சயமாக தேவை என்று சொல்லிவிட்டால் முகம்மதுவைப் பற்றி கேள்விப்படாத அனைத்து இனங்களும் தண்டிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு அனுப்பப்பட்ட தூதரை அவர்கள் பின்பற்றினால் அவர்கள் தண்டிக்கப்பட முடியாது (கு. 10:47); ஆனால், அவர்கள் முகம்மதுவைத் தவிர வேறு தூதரைப் பின்பற்றினாலும் தண்டனைக்குத் தப்ப முடியாது, ஏனெனில் இஸ்லாம் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட சமயம் (கு. 3:85). அவர்கள் முகம்மதுவின் காலத்திற்கு முன்பே வாழ்ந்தவர்களாக இருப்பதால் முகம்மதுவினால் முன்வைக்கப்பட்ட வழிமுறைகளை அவர்கள் எப்படி பின்பற்ற முடியும்? குழப்பங்கள் தொடர்கின்றன. சுருக்கமாகச் சொன்னால், இஸ்லாத்தின் உலக நோக்கு மிகவும் முரண்பாடுகளும் ஒத்திசைவற்றதுமான ஒன்றாகும். இந்த காரியங்கள் முன்வைக்கப்படும்போது, “உங்களுக்கு அரபி மொழி தெரியாது” என்ற வாதத்தை முஸ்லிம்கள் முன்வைப்பார்கள். சரி, அரபி மொழியை என் தாய் மொழியாகக் கொண்டிருக்கும் நான், முஸ்லிமாக வளர்ந்து, மிகவும் சிறந்த இஸ்லாமிய அறிஞர்களோடு சேர்ந்து இஸ்லாத்தைப் படித்த எனக்கே இஸ்லாத்தையும் அரபி மொழியையும் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால், உலகெங்கிலும் இருக்கும் அரபியில் ஒரு வார்தையும் தெரியாத 120 கோடி முஸ்லிம்கள் எப்படி அதைப் புரிந்துகொள்ள முடியும்? குர்ஆனின் இந்த வாக்கியத்தைப் பற்றி என்ன சொல்லப்படுகிறது: “மேலும் இந்த வேதமானது அகிலத்தாரின் இறைவனால் இறக்கி வைக்கப்பட்டாகும். நம்பிக்கைக்கரிய ஆன்மா இதைக் கொண்டு இறங்கினார். அச்சமூட்டி எச்சரிப்பவராக நீர் இருப்பதற்காக உம் இதயத்தின் மீது தெளிவான அரபி மொழியில்” (கு. 26:192-196). அரபி மொழியின் தெளிவைக் குறித்து இன்னும் பல குர்ஆன் பகுதிகள் பேசுகின்றன (கு. 16:103 -- 41:3 -- 20:13 -- 41:44 -- 13:37 -- 12:2 -- 43:3 -- 42:7 -- 39:28 -- 46:12). உங்களுக்கு அரபி மொழி தெரியாது என்பது இன்னும் ஆர்வமூட்டும் ஒன்றாகும். ஒன்று அல்லாஹ் பொய் சொல்ல வேண்டும். அல்லது குர்ஆனின் அரபி மொழி தெளிவற்றதாக இருக்க வேண்டும். அல்லது அல்லாஹ் சரியாகப் பேசத் தெரியாதவராக இருக்க வேண்டும். ஏனெனில் அவர் தெளிவு என்று சொல்வது தெளிவாக இல்லை என்பதன் பொருள் என்ன? ஒரு தெளிவான அறிவின் அடிப்படையைக் கொடுக்க முடியாததற்கு இஸ்லாத்தில் இன்னும் பல உதாரணங்கள் இருக்கின்றன. அவை இஸ்லாத்தின் ஒத்திசைவற்ற தன்மையையும் முரண்பாட்டையும் காண்பிக்கின்றன. நாம் இஸ்லாத்தின் உலக நோக்கை எவ்வளவு படிக்கிறோமோ அவ்வளவு அதன் மூடத்தனத்தை அறிந்துகொள்வோம். |