Grace and Truth

This website is under construction !

Search in "Tamil":
Home -- Tamil -- 11-Presuppositional Apologetics -- 019 (Presuppositional apologetics commits the informal fallacy of begging the question, for it advocates presupposing the truth of Christian theism in order to prove Christian theism” (William Lane Craig))
This page in: -- Chinese -- English -- French? -- German -- Indonesian -- Russian -- TAMIL -- Ukrainian

Previous Chapter -- Next Chapter

11. முன்ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரைக்கான விவிலிய அறிமுகம்
கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிரான தாக்குதல்களில் மறைந்திருக்கும் பொய்களையும் அடிப்படைத் தவறுகளையும் எப்படி அம்பலப்படுத்துவது?
பாகம் 3 – ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரையின் செயல்முறைகள்
15. முன்ஊகக் கொள்கைக் காப்புவாதத்தைக் குறித்த பொதுவான தப்பெண்ணங்கள்

ஆ) “முன்ஊகக் காப்புரை முடிவை ஆதாரங்கள் மூலம் நிறுவுவதற்குப் பதிலாக முடிவை முன்ஊகித்தலாகிய முறைசாரா தவறைச் செய்கிறது. ஏனெனில் அது கிறிஸ்தவ தெய்வ நம்பிக்கையை நிறுவுவதற்குப் பதிலாக கிறிஸ்தவ தெய்வ நம்பிக்கையை முன்அனுமானித்து வாதிடுகிறது”(William Lane Craig)


இதுவும் உண்மையில்லை. ஒரு முன்ஊகவாதி இவ்வாறு சொல்கிறார்: “கடவுள்தான் நம்முடைய இறுதி அதிகாரம். கடவுள் தம்மைப் பற்றி என்ன வெளிப்படுத்தியிருக்கிறாரோ அதையே நாம் அவரைப் பற்றி பேசுகிறோம். ஆகவே, நம்முடைய இறுதி அதிகாரத்திற்கு வெளியே சென்று நாம் அதை நிறுவ முடியாது. கடவுள் ஆபிரகாமுக்கு வாக்குறுதி அளித்தபோது தம்மைவிட உயர்ந்த ஒருவர் இல்லாத காரணத்தினால் அவர் தம்முடைய பெயரிலேயே ஆணையிட்டார் என்று வாசிக்கிறோம் (எபி. 6:13). கடவுள்தான் இறுதி அதிகாரம் உடையவராக இருக்கின்ற காரணத்தினால் அவரைவிட மேலான அதிகாரத்தினிடத்தில் அவர் நீதி கேட்கச் செல்ல முடியாது. வேதாகமம் அவருடைய வார்த்தையாக இருப்பதால் வேதாகமத்திற்கு மேலான அதிகாரமாக வேறு எதுவும் இருக்க முடியாது. அதாவது, முழு கிறிஸ்தவ உலக நோக்கும் நம்முடைய முன்ஊகமாக இருக்கிறது. முன்ஊகித்தலாகி முறைசாரா தவறு என்பதை நாம் எளிமையாக இப்படிக் குறிப்பிடலாம்: ஒன்று உண்மை என்பதால் அதை உண்மை என்கிறீர்கள். நேரியல் வாதமுறையில் (ள்ஹ்ப்ப்ர்ஞ்ண்ள்ம்) குறிப்பிட்டால் இவ்வாறு வரும்.

(வாதக் கூற்று 1) கடவுள் இருக்கிறார்.
(வாதக் கூற்று 2) …
(முடிவு) ஆகவே, கடவுள் இருக்கிறார்.

இது ஒருபோதும் முன்ஊக வாதம் ஆகாது. மாறாக நாம் அனைத்தையும் தாண்டி கடவுளின் இருப்பின் அவசியம் என்ற நிலையில் இருந்து வாதிடுகிறோம். இதை நேரியல் வாதமுறையில் குறிப்பிடும்போது (syllogism):

(வாதக் கூற்று 1) கடவுள் இல்லை என்றால் பகுத்தறிவுச் சிந்தனை என்பது சாத்தியமாகாது.
(வாதக் கூற்று 2) இப்போது பகுத்தறிவுச் சிந்தனை சாத்தியமாக உள்ளது.
(முடிவு) ஆகவே கடவுள் இருக்கிறார்.

வேறு சொற்களில் குறிப்பிடுவதானால், முன்ஊகவாதம் “எதிர்மறை ஆதாரம்” என்று அழைக்கப்படும் ஒரு வாத முறையைப் பயன்படுத்தி வாதிடுகிறது (இது reductio ad impossibilem என்றும் சில வேளைகளில் அழைக்கப்படுகின்றது). இது ஒருவகை எதிர்மறை ஆதாரம். இதன்படி எதிர்க்கூற்று உண்மை என்று அனுமானிக்கப்படுகிறது, அதன் பிறகு அந்த அனுமானம் முரண்பாட்டிற்கு அல்லது பொருளற்ற நிலைக்கு வழிநடத்துகிறது என்பதைக் காண்பிக்கிறது.

நாம் அவநம்பிக்கையாளர்களுடன் பேசும்போது, கிறிஸ்தவ உலக நோக்கு உண்மையில்லை என்று அவர்கள் நினைத்துக்கொள்ளுமாறு கேட்கப்படுவார்கள். அதன் பிறகு அந்த அனுமானம் அவர்களை எங்கு இட்டுச் செல்லும் என்பதை அவர்களே காணும்படி அழைக்கப்படுவார்கள். அவநம்பிக்கையாளர்கள் முதல் வாதமே நிரூபிக்கப்படாதது என்று எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என்பதை நாம் எதிர்பார்க்க வேண்டும். அதனால்தான் நாம் அவர்களுடன் கிறிஸ்தவ கொள்கைக் காப்பு வாதத்தில் ஈடுபடுகிறோம், அதாவது அவநம்பிக்கையாளர்கள் கடவுள் இல்லாமல் பகுத்தறிவு சிந்தனையை அவர்களால் நியாப்படுத்த முடியுமா என்பதைப் பார்க்கவே. நாம் இதை மீண்டும் மீண்டும் தொடர்ந்து செய்ய வேண்டும். நம்முடைய வாதம் சரியானதல்ல அல்லது உறுதியானது அல்ல என்பதற்காக அல்ல. மாறாக நீங்கள் யாருடன் பேசினாலும் அவர்கள் மனந்திரும்ப வேண்டும் அல்லது மூடத்தனத்தைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக. அவர்கள் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டிருப்பதால் மூடத்தனத்தை ஏற்றுக்கொள்வது கிட்டத்தட்ட சாத்தியமற்ற ஒன்று. அவர்கள் கடவுளைத் தேடாதவர்களாக இருப்பதால் அவர்களுடைய நிலைப்பாட்டுக்கு ஒரு நியாயத்தைக் கண்டுபிடிக்க அவர்கள் தொடர்ந்து முயற்சிப்பார்கள்.

ஜெர்மன் தத்துவஞானியான நிட்சே (Nietzsche) “கடவுள் இறந்துவிட்டார்” என்ற தன்னுடைய அறிவிப்பின் விளைவு என்ன என்பதைப் புரிந்துகொண்டார். அவர் சொன்னார்: “இந்த செயலின் பிரமாண்டம் நமக்கு அளவுக்கு அதிகமான பிரமாண்டம் அல்லவா? அதற்குத் தகுதியுள்ளவர்களாக வேண்டும் என்ற எளிய காரணத்திற்காக நாமே கடவுள்கள் ஆக வேண்டாமா?”. கடவுளைப் புறக்கணித்த மனிதனுக்கு இன்னொரு அடித்தளம் தேவை என்பதை அவர் அறிந்திருந்தார்: மனிதன் கடவுளாக வேண்டும் என்பதே அந்த அடித்தளம். பிற்காலத்தில் அவருடைய எழுத்துக்களில் அவர் இப்படிச் சொன்னார்: “நமக்கு இலக்கணத்தில் இன்றும் நம்பிக்கை இருப்பதால் இன்னும் நாம் கடவுளை நம்மைவிட்டு அகற்றிவிடவில்லை என்றே அஞ்சுகிறேன்” (Freidrich Nietzsche, Twilight of the Idols, p. 5). தங்களுடைய உலக நோக்கின் மூடத்தனத்தை அணைத்துக்கொள்ள நினைத்து அது இயலாது என்று கண்டுகொண்ட வெகு சிலரில் நீட்சேயும் ஒருவர்; கடவுளில் இருக்கும் நம்பிக்கையை முற்றிலும் விட்டு விலக வேண்டுமானால் நீங்கள் வேறு எதிலும் நம்பிக்கை கொள்ள முடியாது – இலக்கணத்தைக் கூட நம்ப முடியாது என்று நீட்சே கண்டுகொண்டார்.

www.Grace-and-Truth.net

Page last modified on April 12, 2023, at 07:22 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)