Grace and Truth

This website is under construction !

Search in "Tamil":
Home -- Tamil -- 11-Presuppositional Apologetics -- 027 (Arbitrariness)
This page in: -- Chinese? -- English -- French? -- German -- Indonesian -- Russian -- TAMIL -- Ukrainian

Previous Chapter -- Next Chapter

11. முன்ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரைக்கான விவிலிய அறிமுகம்
கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிரான தாக்குதல்களில் மறைந்திருக்கும் பொய்களையும் அடிப்படைத் தவறுகளையும் எப்படி அம்பலப்படுத்துவது?
பாகம் 3 – ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரையின் செயல்முறைகள்
20. அறிவுசார் பாவங்கள்

a) தாறுமாறான சிந்தனை அல்லது பேச்சு


தாறுமாறான சிந்தனை அல்லது பேச்சு: எந்த ஆதாரமும் இல்லாமல் ஒரு காரியத்தை உண்மை என்று கோருவது.

“தாறுமாறான” என்பதற்கான ஆங்கிலச் சொல்லை (arbitrariness) ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி விளக்கும்போது, “எந்த அறிவின் மீதோ சிந்தனை முறையின் மீதோ கட்டப்படாமல் தன்னிச்சையான தேர்வை அல்லது தனிப்பட்ட விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டது” என்று கூறுகிறது. இது ஏன் கூடாது?ஏனெனில், இது கோரப்படும் கூற்றுக்கு ஆதாரத்தை முன்வைக்க வேண்டும் என்பதைக் காணத் தவறும் செயலாகும். ஆகவே, ஒருவர் ஒரு தாறுமாறாக கூற்றை முன்வைத்தால், அதற்கு பதிலாக இன்னொருவர் இன்னொரு தாறுமாறான வாதத்தை முன்வைக்கலாம். உதாரணமாக, புத்தர் “ஒளி பெற்றவராக” கோரப்படுகிறார். இந்த கூற்றுக்கு எந்த ஆதாரமும் முன்வைக்கப்படுவதில்லை, ஆகவே கான்பூசியúஸô அல்லது வேறு யாரோ இதற்கு நேரெதிரான ஒரு கூற்றை உரிமைகோரலாம்.

தாறுமாறான வாதம் என்பதற்கு கீழ்வரும் இன்னும் சில இணைவகைகள்:

(i) வெறும் கருத்து: Oகருத்து என்பது அதைச் சொல்லும் நபரைப் பற்றி நமக்குச் சொல்கிறதே தவிர பேசப்படும் காரியத்தைப் பற்றி எதுவும் சொல்வதில்லை. உதாரணமாக, “நான் ஏன் கிறிஸ்தவன் அல்ல?” என்னும் தன்னுடைய ஆக்கத்தில் பெர்ட்ரன்ட் ரசல் என்பவர் கிறிஸ்துவைப் பற்றிய தன்னுடைய கருத்தை முன்வைக்கிறார்: “கிறிஸ்து உலகத்தில் வாழ்ந்த மனிதர்களில் சிறந்த, ஞானமுள்ள மனிதன் என்று நான் கருதவில்லை” என்கிறார். நல்லது. ஆனால், கிறிஸ்துவின் ஞானத்தையோ அல்லது குணாதிசயத்தையோ அளப்பதற்கு அவர் என்ன அளவுகோலைப் பயன்படுத்தினார். அவர் சுழிய மதிப்புள்ள (முற்றிலும் மதிப்பற்ற) தன்னுடைய கருத்தை முன்வைக்கிறார்.
(ii) சார்பியல் வாதம் (Relativism): எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் உண்மை என்று கோரப்படுகிறவைகள் உண்மைகளும் அல்ல, பொய்களும் அல்ல, அவை ஒரு கலாச்சார விழுமியங்களையும், தனிப்பட்ட அளவுகோல்களையும் தெரிவுகளையும் சார்ந்து வேறுபடும் என்னும் நிலைப்பாடு. பொதுவாகச் சொல்லும்போது, “அது உங்களுக்கு வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம், எனக்கு அது உண்மையில்லை” என்று சொல்வதைப் போன்றது. மிகச் சமீப காலத்தில் இந்நிலைப்பாட்டைக் குறிக்க, “என்னுடைய உண்மை” என்ற தொடர் பயன்படுத்தப்படுகின்றது. சார்பியல் வாதம் என்பது தன்னைத் தானே மறுதலிக்கிறது. அதாவது, உண்மை என்று ஒன்றில்லை எனில் சார்பியல் வாதம் என்பது மட்டும் எப்படி உண்மையாக இருக்க முடியும்? இது, “இறுதியான நிலை என்று ஒன்று இல்லை என்று எனக்கு இறுதியாகத் தெரியும்” என்று சொல்வதைப் போன்றது.
(iii) தீர்ப்புக்கு முந்திய அனுமானம் (Prejudicial conjecture): இது முழுமை பெறாத தகவல்களின் அடிப்படையில் எட்டப்படும் கருத்து அல்லது முடிவு ஆகும். மக்கள் “இப்படி இருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது” என்று சொல்லும்போது அவர்களுடைய அனுமானத்திற்கு அவர்களிடம் போதிய ஆதாரம் இல்லாத நிலையில் வாதம் முன்வைக்கப்படுகிறது என்று பொருள்.
(iv) அறிவற்ற அனுமானம் (Ignorant conjecture): இது சற்று மேம்பட்ட முறையில் கருத்தைச் சொல்லும் ஒரு முறையாகும். முதலில் இதைப் பார்க்கும்போது உண்மை போலத் தோன்றும், ஆனால் அது வெறும் கருத்துதான் என்பது விரைவில் வெளிப்படும். இது விரும்பியோ, விரும்பாமலோ தன்னுடைய கருத்துக்கு எதிராக முன்வைக்கப்படும் ஆதாரங்களை கவனத்தில் எடுத்துக்கொள்ள தவறும் நிலையாகும். உதாரணமாக, கிறிஸ்தவத்தை மறுத்துரைக்கும் ஒரு புத்தகத்தில் அதன் ஆசிரியர் எழுதுகிறார், “பரந்து விரிந்த புராதன உலகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த மற்ற தெய்வங்களின் கதைகளில் இருந்து எடுக்கப்பட்ட அம்சங்கள் இயேசுவின் கதையில் சேர்க்கப்பட்டுள்ளன.”(பார்க்க: S. Achayra: The Christ conspiracy). கிறிஸ்தவத்தில் சேர்க்கப்பட்டதாகக் கருதப்படும் இப்படிப்பட்ட அம்சங்களில் சில புத்தகம் முழுவதும் நமக்கு அறிமுகம் செய்யப்படுகின்றன: அ) “மித்ரா என்ற தெய்வம் டிசம்பர் 25-ம் தேதி ஒரு கன்னியிடம் ஒரு குகையில் பிறந்தது”; ஆ) “ஹோரஸ் என்ற தெய்வம் டிசம்பர் 25-ம் தேதி ஐசிஸ்-மெரி என்ற கன்னியிடத்தில் பிறந்தது”; இன்னும் இப்படி சில. இதைப் பற்றி படித்தறியாத ஒருவர் இந்த புத்தகத்தை வாசிக்கும்போது ஆசிரியர் இந்த காரியத்தைப் பற்றி ஏதோ உண்மையைச் சொல்கிறார் என்று கருதக்கூடும். ஆனால், ஆசிரியர் தான் இந்த விவரங்களை எந்த ஆதாரத்தில் எடுத்தேன் என்று குறிப்பிட்டிருப்பதைப் பார்க்கும்போது, நாம் வேறு கதையை வாசிக்கிறோம். மித்ரா ஒரு பாறையில் இருந்து பிறந்த தெய்வம்; (பார்க்க: https://en.wikipedia.org/wiki/Mithraism#Birth_from_a_rock). ஒருவேளை அந்த பாறை கன்னியாக இருந்திருக்குமோ என்று நான் யோசிக்கிறேன். ஹோரஸின் பிறப்பு இன்னும் சுவாரஸ்யமானது. “சேத் தன்னுடைய சகோதரனாகிய ஆரிசிஸ்-ன் உடலைத் துண்டுகளாக வெட்டி தூரமாகவும் பரவலாகவும் எறிந்துவிட்டது. இவ்வாறு இறந்த தெய்வத்தின் உடலின் பாகங்களை கண்டுபிடிக்க ஐசிஸின் சகோதரியான ஹிப்சிஸ் உதவியது. ஆனால் ஆசிரிஸின் ஆணுறுப்பை மட்டும் காணாமல், அதற்கு தங்கத்தினால் ஒரு ஆணுறுப்பைக் கொடுத்தது. சுற்றிக் கட்டப்பட்ட ஆரிசிஸ், உயிரோடும் இன்றி இறப்பும் இன்றி மம்மியாகிவிட்டது. ஒன்பது மாதங்கள் சென்று ஐசிஸ் அதற்கு ஒரு மகனைப் பெற்றது (பார்க்க: https://www.britannica.com/topic/Isis-Egyptian-goddess). சோம்பி என்று அறியப்படும் இறந்தும் நடக்கும் ஒன்றிலிருந்து ஹோரஸ் பிறந்தது என்பதைக் கவனியுங்கள். இவ்வளவு மூடத்தனமாக அவநம்பிக்கையாளர்கள் கிறிஸ்தவத்திற்கு எதிராக தங்கள் கருத்தை வைப்பதில்லை. உதாரணமாக, இயேசு கருத்தரங்கம் மற்றும் பார்ட் எர்மேன் போன்றவற்றைக் குறிப்பிடலாம் (the Jesus seminar or Bart Ehrman).
(v) ஆய்வு செய்யப்படாத தத்துவப் பிழைகள்: அவநம்பிக்கையாளர்கள் பெரும்பாலும் தாங்கள் பேசுகின்ற காரியத்தில் வாதம் செய்யப்படாத ஒரு பகுதியை வைத்திருப்பார்கள். உதாரணமாக, ஒரு இறைமறுப்பாளர் இவ்வாறு கூறுகிறார்: “கடவுளின் இருப்பை நாம் எந்த ஆதாரத்தையும் கொண்டு நிரூபிக்க முடியாது. ஏனெனில் அது நவீன விஞ்ஞானத்தின் ஆய்வுக்கு அப்பாற்பட்டது”. மேற்கண்ட கூற்றில் அவர் பல்வேறு ஆய்வு செய்யப்படாத தத்துவப் பிழைகள் இருக்கின்றன. முதலாவது, ஆதாரத்தைக் கொண்டு நிரூபிக்கும் தன்மை. இரண்டாவது, விஞ்ஞானத்தின் இறுதி அதிகாரம். இறுதியாக, இருத்தல் என்பதற்கான பொருள். இந்த காரியங்களைக் குறித்து அவர் தான் விரும்பியபடி சிந்திக்கிறார். இவ்வாறே ஒரு இஸ்லாமியரும்: “நான் கடவுள். எனக்கு ஆராதனை செய்யுங்கள்” என்று வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள இடத்தை எனக்குக் காண்பியுங்கள் என்று கேட்கக்கூடும். இந்த கூற்றை முன்வைக்கும் ஒரு முஸ்லிம் இயேசு குர்ஆனைப் போன்ற ஒரு வெளிப்பாட்டைப் பெற்றுக்கொள்ள வந்தவர் என்று கருதிக் கொள்கிறார். ஒருவர் சரியென்று எடுத்துக்கொண்டு வாதிடும் ஒன்றை அவர் நியாயப்படுத்த வேண்டும் என்று உணருவதில்லை.

www.Grace-and-Truth.net

Page last modified on April 13, 2023, at 02:05 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)