Grace and Truth

This website is under construction !

Search in "Tamil":
Home -- Tamil -- 11-Presuppositional Apologetics -- 039 (Answering religious worldviews of immanent moralism -- BUDDHISM)
This page in: -- Chinese -- English -- French? -- German -- Indonesian -- Russian -- TAMIL -- Ukrainian

Previous Chapter -- Next Chapter

11. முன்ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரைக்கான விவிலிய அறிமுகம்
கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிரான தாக்குதல்களில் மறைந்திருக்கும் பொய்களையும் அடிப்படைத் தவறுகளையும் எப்படி அம்பலப்படுத்துவது?
பாகம் 4 – செயலில் ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரை

30. இயற்கை ஒழுக்கவியல் சமய வாழ்வின் (immanent moralism) உலகநோக்குகளுக்கு பதிலுரைத்தல் – பௌத்தம்


சில உலக நோக்குகள் இப்போது, இங்கு இருக்கும் காரியங்களுக்கு அதாவது நம்முடைய அனுபவங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. அவற்றில் பௌத்தமும் கன்பூசியனிசமும் முக்கியமான உதாரணங்கள் ஆகும்.

கௌதம் புத்தரால் போதிக்கப்பட்டபடி பௌத்தம் ஆரம்பத்தில் எந்தக் கடவுளையோ கடவுளரையோ, ஆத்துமாவையோ நம்பாத ஒரு நாத்திகவாத சமயம் ஆகும் (Concise Dictionary of Religion, p. 40). ஆயினும், பௌத்தத்தின் ஒரு பிரிவாகிய மஹாயான பௌத்தம் புத்தரைக் கடவுளாக வழிபடுகிறது. பௌத்தம் ஒழுக்கவியல் கோட்பாடுகளை தீவிரமாக நம்பும் ஒரு மார்க்கம் ஆகும். அது சித்தார்த்த கௌதமர் என்பவரால் உருவாக்கப்பட்டது. அவர் இந்து சூழ்நிலையில் வளர்ந்து வந்த ஒருவர். அவருடைய வாழ்க்கையில் பல்வேறு வாழ்வை மாற்றியமைக்கும் அனுபவங்களைச் சந்தித்த பிறகு அவர் புத்தர் ஆனார். அவர் இன்றுள்ள நேபாளம் என்ற நாட்டில் ஒரு நிலப்பிரபுவின் மைந்தனாக ஒரு செல்வச் செழிப்புள்ள வாழ்க்கை வாழ்ந்து வந்தார். நான்கு காட்சிகளை அவர் கனவில் கண்ட போது அவர் தன்னுடைய செழிப்பின் வாழ்க்கையைத் துறந்தார்: தனது கனவில் அவர் ஒரு முதியவரையும், நோயாளியையும், மரணமடைந்த ஒருவரையும் தலை சிரைக்கப்பட்ட ஒரு துறவியையும் கண்டார். இந்த காட்சிகள் இவ்வுலகில் மனித வாழ்வு ஏன் துன்பத்தில் உழல்கின்றது என்ற தேடலுக்குள் அவரைத் தள்ளிவிட்டன. அவர் ஒரு இந்த துறவிக் கூட்டத்தைச் சேர்ந்து, தன்னைத் தானே அடித்துக் கொண்டு மரணத் தருவாய்க்குச் சென்றார். இந்த தருணத்தில்தான் வாழ்க்கையில் ஒரு நடுவழி இருக்கின்றது என்ற வெளிச்சத்தை அவர் பெற்றுக்கொண்டார். வாழ்க்கையில் இரு தீவிர நிலைப்பாடுகளாகிய கடுந்துறவி வாழ்க்கை மற்றும் அதிக பேரின்ப வாழ்க்கை ஆகிய இரண்டுக்கும் இடையில் ஒரு பாதை இருப்பதை அவர் கண்டுகொண்டார். ஒரு அத்தி மரத்தின் கீழ் தீய சக்தியாகிய மாறா தன்னைச் சோதித்ததாகவும் தான் பாவச் சோதனையை மேற்கொண்டு புத்தராக மாறும் ஒளியைப் பெற்றுக்கொண்டதாகவும் சித்தார்த்தர் கூறினார். ஒளியைப் பெற்றுக்கொண்ட பிறகு 49 நாட்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு, அதன் பிறகு தன்னுடைய அனுபவத்தை ஒவ்வொருவருக்கும் சொல்லி, இவ்வுலகத்தில் பல்வேறு துன்பங்கள் வழியாகச் செல்லும் எண்ணற்ற மனிதர்களுக்கு உதவ வேண்டும் என்று தன்னை ஒப்படைத்தார். துன்பத்திலிருந்து காக்கப்பட்டவராக உலகத்திற்கு புத்தராக தன்னுடைய நற்செய்தியை அறிவிக்க அவர் புறப்பட்டார். அவர் போதித்தபோது அதிகாரம் எதுவும் இல்லாதவராகப் போதித்தார். இந்து சாமியார்கள் சரியாகப் போதிக்கவில்லை என்றும் தான் தன்னுடைய அனுபவத்தில் இருந்து போதிப்பதாகவும் குறிப்பிட்டார். அவருடைய சமயத்தில் சடங்குகளோ, புனைக் கதைகளோ, பாரம்பரியமோ இருக்காது என்று கூறினார். பௌத்தம் என்பது தீவிரமான சுய முயற்சியின் மார்க்கம். ஒருவர் பிறவிச் சுழற்சியாகிய கர்ம சம்சாரத்திலிருந்து விடுதலை பெற கடுமையாக முயற்சித்து தன்னுடைய சொந்த இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும். பௌத்தம் சாதி அமைப்பை முற்றிலும் மறுத்தது. இப்போது நேரடியாக நிர்வாண நிலைக்குச் செல்வது சாத்தியமாகியது. ஒரு மிஞ்சிய சக்தியை மறுதலிக்கும் (தேரவாத வடிவம்) ஒரு சமத்துவத்தைப் போதிக்கும் மார்க்கமாக பௌத்தம் உருவானது. ஒரு மிஞ்சிய சக்தி என்பது வெறும் கற்பனை அதை நாம் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று புத்தர் சொன்னார். இவ்வாறு பௌத்தம் ஒரு இறைமறுப்பு மார்க்கமாகும் (இன்று இது தேரவாத பிரிவுக்க மட்டுமே பொருந்தும்). அது துன்பத்தை ஏற்படும் காரணங்கள் விளைவுகளைப் பற்றி போதிக்கவே அது விளைகிறது.

புத்த மதத்தில் கையாளப்பட வேண்டிய முக்கிய பிரச்சனை துன்பத்தின் தன்மையும் அதை எப்படிக் கையாள்வது என்பதும்தான். மனிதனுடைய ஆசையில் இருந்துதான் துன்பம் பிறக்கின்றது என்று பௌத்தம் போதிக்கின்றது.

பௌத்தம் போதிக்கும் நான்கு உயர்ந்த உண்மைகள்:

1. துக்கா: வாழ்க்கை என்பது உடல்சார்ந்த மற்றும் மனம் சார்ந்த துன்பத்தினால் ஆனது.
2. சமுதாயா: இன்பத்தின் மீதான ஆசையும் அறியாமையுமே துன்பத்தின் அடிப்படைக் காரணங்கள் ஆகும். இந்த இடத்தில் ஆசை என்பது இன்ப நாட்டம், பொருள் சார்ந்த காரியங்கள், ஒழுக்கக்கேடு மற்றும் திருப்தியளிக்காத காரியங்கள் அனைத்தின் மீதுள்ள ஆசையையே பௌத்தர்கள் குறிப்பிடுகிறார்கள்.
3. நிரோதா: இந்த ஆசை இல்லாமல் போகும்போது துன்பமும் இல்லாமல் போய்விடும். ஆகவே நாம் ஆசையை அகற்ற வேண்டும்.
4. மாக்கா: முழுமையாக இவ்வுலகப் பற்றுகளில் இருந்து விடுபடும்போது ஆசைகள் அற்றுப் போகும்.

முழுமையாக உலகப் பற்றுகளில் இருந்து விடுபடுதல் என்பது 8-வழிப் பாதையின் மூலம் சாத்தியமாகும்:

1. நான்கு உயர்ந்த உண்மைகளை ஏற்றுக்கொள்வதன் மூலமாக சரியான சிந்தனைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
2. இச்சை, கெட்ட சித்தம் மற்றும் கொடுஞ் சிந்தை ஆகியவற்றிலிருந்து விடுபட சரியான விருப்பங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
3. வீண் பேச்சுகளில் ஈடுபடாமல் உண்மையுள்ளவர்களாக இருக்க சரியான பேச்சைப் பேச வேண்டும்.
4. உயிர்களைக் கொல்லாமல் அவற்றிற்கு உதவி புரிய சரியான நடத்தை வேண்டும்.
5. நீங்கள் செய்யும் காரியங்களில் வாழ்வை முன்னேற்றும்படி சரியான வாழ்க்கை வேண்டும்.
6. தீமையை வெல்லும்படி சரியான முயற்சி வேண்டும்.
7. உடலை வெறுத்தல், பாவம் அல்ல அறியாமையே உங்கள் பிரச்சனை போன்றவற்றை உணர்ந்துகொள்ள சரியான விழிப்புணர்வு வேண்டும்.
8. மந்திரத்துடன் கூடிய ரச யோகாவைச் செய்வதற்கு நல்ல தியானம் வேண்டும்.

இந்த 8 –வழிப் பாதையில் தவறாமல் செல்வதற்கு 10 சங்கிலிகளைத் தகர்த்தெறிய வேண்டும். தேவை.

1. உண்மையான சுயத்தில் நம்பிக்கை வைத்தல்
2. புத்தர் சொல்வதை சந்தேகித்தல்
3. சடங்குகளில் நம்பிக்கை
4. தவறான இச்சைகள்
5. தீய சித்தம்
6. பொருள் சார்ந்த இருப்பில் இச்சை
7. பொருள் சாராத இருப்பில் இச்சை
8. வஞ்சனை
9. ஓய்வின்மை
10. பௌதீகம் கடந்த மெய்மையின் உண்மைத் தன்மையைக் குறித்த அறியாமை

நான்கு உயர்ந்த உண்மைகள், எட்டு வழிப் பாதை, பத்து சங்கிலிகள் ஆகியவற்றோடு ஒளிபெறுதலின் நான்கு நிலைகள், ஆறு முழுமைகள், சூத்திரங்களின் பத்து நிலைகள் போன்று இன்னும் மற்ற போதனைகளும் பௌத்தத்தின் போதனைகளில் அடக்கம்.

இவ்வளவு உறுதியாக உலக நோக்கைப் பார்க்கும்போது நாம் கேட்க வேண்டிய முதல் கேள்வி, “இவற்றை எல்லாம் யார் சொல்வது?” என்பதுதான். பௌத்தம் அடிப்படையில் இறைமறுப்புக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட காரணத்தினால் இந்த போதனைகள் அனைத்துக்கும் பின்னால் எந்த அதிகாரமும் இல்லை. நாம் ஏன் புத்தருக்கு செவிகொடுக்க வேண்டும்? ஏனெனில், அவர் ஒளி பெற்றவர் என்று நமக்கு பதில் தருவார்கள். அவர் ஒளி பெற்றவர் என்று யார் சொன்னது? என்று கேட்டால். அதை புத்தர்தான் சொன்னார் என்பதுதான் பதிலாகும். சரி அப்படியானால் புத்தர் இன்னொன்றையும் சொல்லியிருக்கிறார். அதையும் கவனிக்க வேண்டும். அதாவது, தான் சொன்ன காரியங்களையும் தான் சொன்னதாக சொல்லப்படும் காரியங்களையும் (கலமா சத்தா) * கேட்கக்கூடாது என்றும் புத்தர் சொல்லியிருக்கிறார். மாறாக, நாம் நம்முடைய சொந்த அனுபவங்களின் அடிப்படையிலேயே எதையும் நம்ப வேண்டும் என்றார். அப்படியானால், நாங்கள் கேட்கிற கேள்வி என்னவென்றால் நாங்கள் ஏன் புத்தருக்கு செவிகொடுக்க வேண்டும்? அவரைப் போலவே இன்னொரு ஒழுக்கவியல் சமயத்தை நமக்கு அறிமுகம் செய்த கன்பூசியûஸ நாம் ஏன் நம்பக்கூடாது? அல்லது அப்படிப்பட்ட வேறு ஒரு சமயத்தை நாம் ஏன் நம்பக்கூடாது? புத்தரை நம்பத் தகுந்த அதிகாரமுள்ளவராக ஆக்கியது யார்? சரி, அவர் தம்மைத் தாமே அதிகாரமாக மாற்றிக் கொண்டார். அப்படி எடுத்துக்கொண்டாலும் அவர் தனக்கே நாம் செவிகொடுக்கக்கூடாது என்றும் சொல்லியிருக்கிறாரே! இதிலுள்ள பிரச்சனை வெளிப்படையானது. நாம் இப்படிக் கேட்கும்போது, கிறிஸ்துவை அதிôகரமுடையவராக்கியது யார் என்று பௌத்தர்கள் நம்மிடத்தில் கேள்வி கேட்பார்கள். அதற்கு அவர்களுக்கு முழு உரிமை இருக்கிறது. ஒரு நம்பிக்கையாளர் இதற்குரிய காரணங்களை எளிமையாகவும் தெளிவாகவும் பார்க்க முடியும். நம்முடைய உலக நோக்கில் கிறிஸ்துவே அனைத்தையும் படைத்தவர். அவரே மீட்பர், இவ்வுலகத்தை நியாயந்தீர்க்கப் போகிறவரும் அவரே. ஆகவே, அவரை இறுதி அதிகாரமாக எடுத்துக்கொள்ளவது நியாயமானது. ஆனால், புத்தர் ஆத்துமா இல்லாத ஒரு மனிதர். அது மட்டுமல்ல எந்த மனிதனுடைய வார்த்தைகளையும் – அவருடைய சொந்த வார்த்தைகள் உட்பட – நாம் நம்பக்கூடாது என்றும் அவற்றிற்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் அவர் சொல்லியிருக்கும்போது அவரை நாம் எப்படி நம்புவது?

* “கலமாஸ் என்பதை அறிக்கைகளினாலோ, வீரதீரக் கதைகளினாலோ, பாரம்பரியத்தினாலோ, வேதங்களினாலோ, தர்க்கரீதியான விவாதங்களினாலோ, பல்வேறு கருத்துக்களை சிந்தித்து ஒரு முடிவுக்கு வருவதினாலோ, சாத்தியப்பாட்டினாலோ அல்லது சிந்தனையினாலோ உருவாவதில்லை. தியானமே நம்முடைய ஒரே ஆசிரியர்.’ (கலமா சத்தா - சக்கரம் 8)

அவ்வாறே நாம் கர்மா என்ற ஊழ் வினை குறித்த கருத்தையும் நாம் எடுத்துக்கொள்ளலாம். அது தீர்ப்பளிக்கும் ஆள்தன்மையற்ற அண்டத்தின் ஒரு விதியாகும். இந்த வாழ்வில் நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்பதுதான் உங்கள் அடுத்த பிறப்பு எப்படியிருக்கும் என்பதைத் தீர்மானிக்கும். அவ்வாறே, “அனத்தா” என்று அழைக்கப்படும் இன்னொரு கொள்கையும் உண்டு. அதன் பொருள் “ஆன்மா இல்லை” என்பதாகும். ஆகவே, மனிதர்களுக்கு ஆத்துமா இல்லை எனில் எது அடுத்த பிறவியில் மறுபிறப்பு பெறுகிறது? சுயத்தை நம்புதல் ஒரு மாயை, அதற்கு யதார்த்தம் இல்லை என்றால், அப்படிப்பட்ட நம்பிக்கை ஒரு சங்கிலியாகக் காணப்பட்டால் எப்படி தனிநபர்களுடைய வாழ்க்கை ஒரு பிறவியில் இருந்து மறுபிறவிக்குத் தொடரும்? ஆகவே, இந்த பிறவியில் நான் என்ன வினைகளைச் செய்கிறேன் என்பதைப் பற்றி நான் கவலைப்படப் போவதில்லை, ஏனெனில் அடுத்த பிறவியின் இந்த ஊழ்வினைப் பயன்களைப் பெற்றுக்கொள்ளப் போவது யார் என்று யாருக்கும் தெரியாது. ஏனென்றால் இந்த வாழ்வில் மனிதர்களுக்கு ஆத்துமா கிடையாது, அடுத்த பிறவியில் இந்த உடல் மறுபிறப்பு அடையப் போவதில்லை.

இவற்றை நான் வெறும் பேச்சு நயத்துக்காகக் குறிப்பிடவில்லை. மற்ற உலக நோக்குகளைப் போலவே பௌத்த உலக நோக்கும் தன்னைத்தான் எதிர்க்கும் ஒன்றாக இருக்கிறது. நமக்கு நன்மையை நாடுவதற்கு நாம் நம்மையே வெறுக்க வேண்டும் என்பது ஒரு சுய முரண்பாடு. விளக்க முடியாத, புரிந்துகொள்ள முடியாத மற்றும் மற்றவர்களுக்கு விளக்க முடியாத ஒரு ஒளியூட்டலை நாம் தேட வேண்டும் என்று நமக்குச் சொல்லப்படுகிறது. பிறவிச் சுழற்சிக் கொள்கையும் ஆத்துமா இல்லை என்ற கொள்கையும் ஒருங்கே போதிக்கப்படுகிறது. மெய்மை என்பது மாயை என்றால் எதையும் நம்புவது பொருளற்றது, ஒரு பௌத்தரோடு உரையாடுவதும் பொருளற்றது. நாம் நம்முடைய மீட்பை நாமே முயன்று பெற வேண்டும் என்று சொல்லப்படும் அதே வேளையில் நாம் தனிப்பட்ட விருப்பங்களைப் பெற்றிருப்பதே துன்பங்களுக்குக் காரணம் என்றும் சொல்லப்படுகின்றது. ஒரு பௌத்தர் புத்தருடைய போதனைகளை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாமல் விடுவதும் அவருடைய சொந்த தேர்வு ஆகும். காப்புரையில் நாம் இதற்கு மேல் போக வேண்டிய தேவையில்லை. கிறிஸ்து என்னும் அத்திவாரமின்றி அனைத்துமே பொருளற்றது என்பதை நாம் காண்பித்துவிட்டோம்.

இப்போது நாம் வேதாகமப் போலிகளைப் பின்பற்றுகிறவர்களோடு எப்படி உரையாடுவது என்பதைப் பற்றி பார்க்கவிருக்கிறோம். இவை மேலோட்டமாகப் பார்க்கும்போது கிறிஸ்தவத்தைப் போல காணப்படும். அவற்றிற்கு ஒரு பரிசுத்த நூல் இருக்கும், ஒரு தீர்க்கதரிசி இருப்பார், கடவுள் நம்பிக்கை இருக்கும். அதே கடவுள்தான் என்றும் அவர்கள் கோருவார்கள். இந்த சமயங்களை நாம் மூன்று வகுப்புகளாகப் பிரிக்க முடியும்: ஒருமைக் கோட்பாடு, பலதெய்வ கோட்பாடு மற்றும் போலி மேசிய கோட்பாடு சமயங்கள். இவை ஒவ்வொன்றையும் நாம் தனித்தனியாகப் பார்ப்போம்.

www.Grace-and-Truth.net

Page last modified on April 13, 2023, at 02:11 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)