Grace and Truth

This website is under construction !

Search in "Tamil":
Home -- Tamil -- 11-Presuppositional Apologetics -- 041 (The impossibility of the revelation of the Quran)
This page in: -- Chinese -- English -- French? -- German -- Indonesian -- Russian -- TAMIL -- Ukrainian

Previous Chapter -- Next Chapter

11. முன்ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரைக்கான விவிலிய அறிமுகம்
கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிரான தாக்குதல்களில் மறைந்திருக்கும் பொய்களையும் அடிப்படைத் தவறுகளையும் எப்படி அம்பலப்படுத்துவது?
பாகம் 4 – செயலில் ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரை
31. வேதாகம் ஓரிறைக் கோட்பாட்டின் போலி வடிவத்திற்கு பதிலுரைத்தல் – இஸ்லாம்

அ) குரானுடைய வெளிப்பாட்டின் சாத்தியமற்ற தன்மை


கடவுளுடைய வெளிப்பாட்டையே சாத்தியமற்றதாக்கும் ஒரு கருத்தை குர்ஆன் முன்வைக்கிறது:

i) “… அல்லாஹ்வைப் போல யாரும் இல்லை. அவன் அனைத்தையும் பார்ப்பவன், அனைத்தையும் கேட்பவன்” (கு. 42:11)
ii) முஸ்லிம்கள் “முக்காலஃபா” ( مخالفة) என்ற கொள்கையை நம்புகிறார்கள். அதன் பொருள் “எதையும் போலல்லாத தன்மை” என்று பொருள். அதாவது இந்த உலகில் உள்ள படைப்புகளைப் பொருத்த காரியங்கள் எதுவும் அல்லாஹ்வுக்கும் அவருடைய குணாதிசயத்திற்கும் இணையாக எடுத்துரைக்க முடியாதவை என்று பொருள்.
iii) குர்ஆன் மனித பேச்சைப் போன்றதல்ல என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள்; அது நித்தியமானது, படைக்கப்படாதது (The Creed of Imam al-Tahawi = al-Aqidah al-Tahawiyyah).
iv) உங்கள் சிந்தைக்கு என்னவெல்லாம் வருகிறதோ அவை அல்லாஹ்வைக் குறிப்பிட முடியாது. அல்லாஹ் வேறுபட்டவன்.

மேற்கண்ட நம்பிக்கைகள் மனித மொழியைப் பயன்படுத்தி நீங்கள் அல்லாஹ்வைப் பற்றி பேச முடியாது என்பதை விளக்கிக் காண்பிக்கிறது. ஏனெனில் மனிதருடைய மொழிகள் மனிதர்களுடைய கருத்துக்களையே விளக்குவதற்குப் பயன்படுகின்றன. குர்ஆன் மனித மொழியில் கொடுக்கப்படாத காரணத்தினாலும் (மனித மொழிகள் படைக்கப்பட்டவை, குர்ஆன் படைக்கப்படவில்லை), நாம் மனித மொழியைப் பயன்படுத்தி எந்த வகையில் அல்லாஹ்வைப் பற்றி சிந்தித்தாலும், அல்லாஹ் அதிலிருந்து வேறுபட்டவராக இருக்கிற காரணத்தினாலும் மனித மொழியைப் பயன்படுத்தி நீங்கள் அல்லாஹ்வைப் பற்றி எதுவும் சொல்ல முடியாது. அதாவது, இதன் பொருள் என்னவென்றால், குர்ஆன் அல்லலஹ்வின் தன்மையையும் குணாதிசயங்களையும் பற்றி பேசும் காரியங்கள் சரியானவையாக இருந்தால் அது அல்லாஹ்விடம் இருந்து வந்த வெளிப்பாடாக இருக்க முடியாது. குர்ஆன் அரபி மொழியில் எழுதப்பட்டது என்றும் அது ஆரம்ப கால செமித்திய மொழிகளில் இருந்து தோன்றிய ஒரு மனித மொழி என்றும் நாம் அறிவோம். ஆகவே, தர்க்கரீதியாக நமக்கு இரண்டு தேர்வுகள் இருக்கின்றன. ஒன்று அது சரி என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லது அது தவறு என்று நம்ப வேண்டும். ஆனால், அது உண்மையாக இருந்தால் மனித மொழியைப் பயன்படுத்தி அல்லாஹ்வைப் பற்றி எதுவுமே சொல்லப்பட முடியாது (மனித மொழியைப் பயன்படுத்தி அல்லாஹ்வைப் பற்றி எதுவுமே சொல்லப்பட முடியாது என்பது உட்பட). ஆகவே, அல்லாஹ்வைப் பற்றிய குர்ஆனுடைய கூற்று அதன் வெளிப்பாட்டின் தன்மையையே மறுதலிப்பதாக இருக்கின்றது. குர்ஆன் படைக்கப்படவில்லை என்றும் அது மனித மொழியில் தரப்படவில்லை என்றும் ஒரு முஸ்லிம் நிச்சயமாக தொடர்ந்து வலியுறுத்த முடியும். அப்படியானால், அதன் பொருள் என்னவென்றால், குர்ஆன் அல்லாஹ்வைப் பற்றியும் அவருடைய பெயர்கள் மற்றும் குணாதிசயங்களைப் பற்றியும் சொல்கிற எந்த காரியத்தையும் உங்களால் புரிந்துகொள்ள முடியாது. காரணம் அவை மனித மொழியில் தரப்படவில்லையே.

ஆகவே, குர்ஆன் மனித மொழியில் எழுதப்பட்டிருக்கிற காரணத்தினால், அது நிச்சயமாக அல்லாஹ்வின் வெளிப்பாடாகவோ அல்லாஹ்வின் வார்த்தையாகவோ இருக்க முடியாது. அதாவது குர்ஆன் சொல்கிறபடி அல்லாஹ் இருப்பாரானால் அல்லாஹ் உண்மையாக இருக்க முடியாது; அல்லாஹ்வின் கூற்றுப்படி குர்ஆன் இருக்குமானால் குர்ஆன் உண்மையாக இருக்க முடியாது.

www.Grace-and-Truth.net

Page last modified on April 13, 2023, at 02:14 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)