Grace and Truth

This website is under construction !

Search in "Tamil":
Home -- Tamil -- 11-Presuppositional Apologetics -- 043 (Allah sent whom, to whom, with what?)
This page in: -- Chinese -- English -- French? -- German -- Indonesian -- Russian -- TAMIL -- Ukrainian

Previous Chapter -- Next Chapter

11. முன்ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரைக்கான விவிலிய அறிமுகம்
கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிரான தாக்குதல்களில் மறைந்திருக்கும் பொய்களையும் அடிப்படைத் தவறுகளையும் எப்படி அம்பலப்படுத்துவது?
பாகம் 4 – செயலில் ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரை
31. வேதாகம் ஓரிறைக் கோட்பாட்டின் போலி வடிவத்திற்கு பதிலுரைத்தல் – இஸ்லாம்

இ) அல்லாஹ் யாரை யாரிடத்தில் எதனுடன் அனுப்பினார்?


கீழ்க்காணும் குர்ஆனுடைய கூற்றுக்களை ஒப்பிட்டுப் பாருங்கள்:

(i) “எந்தத் தூதரையும் அவருடைய சமுதாயத்தின் மொழியைக் கொண்டே தவிர நாம் அனுப்பவில்லை, அவர்களுக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக…” (கு 14:4)
(ii) “இஸ்ராயீலின் சந்ததியினருக்குத் துதராகவும், நான் உங்கள் இறைவனிடமிருந்து ஒர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்…” (கு 3:49)
(iii) “இன்னும் அவர்களுடைய அடிச்சுவடுகளிலே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன்னிருந்த தவ்றாத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்;…” (கு 5:46)

குர்ஆன் சொல்வதை நாம் அப்படியே எடுத்துக்கொண்டால் இஸ்ரவேல் மக்களிடத்தில் இயேசு நற்செய்தியுடன் எப்படி அனுப்பப்பட முடியும் என்று நாம் கேட்க வேண்டும். நற்செய்தி என்பதற்கு குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ள இன்ஜீல் என்பது அரபிச் சொல் அல்ல, அது “இவான்ஜலியோன்” (“εὐαγγέλιον”) என்ற கிரேக்கச் சொலிருந்து வரும் ஒன்றாகும். எப்படி ஒரு யூத செய்தியாளர் யூத மக்களிடத்தில் கிரேக்க புத்தகத்துடன் (நற்செய்தி) அனுப்பப்பட முடியும்? நாங்கள் கிறிஸ்தவர்கள் பயன்படுத்துவதைப் போல இந்த பெயரை நூலைக் குறிக்கும்படி பயன்படுத்துகிறோம் என்று முஸ்லிம்கள் சொல்ல முடியாது. ஏனெனில் இயேசு எந்த புத்தகத்தையும் பெற்றுக்கொள்ளவோ எழுதவோ வந்தார் என்று எந்த கிறிஸ்தவரும் சொல்வதில்லை. மேலும் ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் யூதர்களாக இருந்தபடியால் அந்த புத்தகம் அவர்களுடைய மொழியாகிய எபிரெயத்தில் பஸôரத் (“בְּשׂוֹרָה”) என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆகவே முஸ்லிம்கள் கீழ்க்காணும் காரியங்களில் எதையாவது ஒன்றைத்தான் தெரிவு செய்ய வேண்டும்: இயேசு இஸ்ரவேல் மக்களுக்கு மட்டும் அனுப்பப்படவில்லை, அல்லது அவர் நற்செய்தியுடன் அனுப்பப்படவில்லை, அல்லது ஒரு செய்தியாளர் வேற்று மொழியுடன் அனுப்பப்பட முடியும், அல்லது அல்லாஹ்விற்கு தான் என்ன பேசுகிறோம் என்பது தெரியவில்லை. இந்த கூற்றுகளில் எதை தெரிவு செய்தாலும் அது குர்ஆனை நம்பத்தகுந்த நூல் அல்ல என்று நிறுவிவிடும், ஆகவே அது ஒரு ஒத்திசைவான உலக நோக்கின் அடிப்படையாக இருப்பது ஒருபோதும் சத்தியமற்றது என்பது நிச்சயமாகிவிடும்.

www.Grace-and-Truth.net

Page last modified on April 13, 2023, at 02:20 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)