Grace and Truth

This website is under construction !

Search in "Tamil":
Home -- Tamil -- 11-Presuppositional Apologetics -- 047 (Answering the worldviews of polytheistic biblical counterfeits -- MORMONISM)
This page in: -- Chinese -- English -- French? -- German -- Indonesian -- Russian -- TAMIL -- Ukrainian

Previous Chapter -- Next Chapter

11. முன்ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரைக்கான விவிலிய அறிமுகம்
கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிரான தாக்குதல்களில் மறைந்திருக்கும் பொய்களையும் அடிப்படைத் தவறுகளையும் எப்படி அம்பலப்படுத்துவது?
பாகம் 4 – செயலில் ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரை

32. பல தெய்வ வழிபாட்டு வேதாகமப் போலிகளின் உலகநோக்கிற்கு பதிலுரைத்தல் – மோர்மனிசம்


சில சமயங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தெய்வங்களில் நம்பிக்கை வைத்திருக்கின்றன. இந்த தெய்வங்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொள்ளும் (சொராஸ்ட்ரிய மதத்தில் உள்ளதைப் போல) அல்லது வாழ்வின் வெவ்வேறு பகுதிகளுக்கு ஒவ்வொரு தெய்வங்களும் பொறுப்புள்ளவையாக இருக்கும். இந்த சமயங்களைப் பின்பற்றுகிறவர்கள் இந்த தெய்வங்களில் அனைத்தையுமோ அல்லது ஏதாவது ஒரு தெய்வத்தையோடு வழிபடுவார்கள். இப்போது நாம் மோர்மன் மார்க்கத்தைப் பற்றி படிக்கப் போகிறோம். இவர்கள் தங்களை ஒரு கிறிஸ்தவ மார்க்கமாக சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் கிறிஸ்தவ மார்க்கமாக இருக்கவே முடியாது.

நம்மில் பலருக்கு மோர்மன் மார்க்கத்தின் முக்கிய பிரிவாகிய இறுதி கால பரிசுத்தவான்களுடைய இயேசு கிறிஸ்துவின் திருச்சபை என்பதைப் பற்றி தெரிந்திருக்கும். இந்த அமைப்பு மேற்கு நியூயார்க்கில் 1820 மற்றும் 30-களில் ஜோசப் ஸ்மித் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. இந்த மோர்மன் மார்க்கத்தோடு காப்புரையில் ஈடுபடுவதைப் பற்றி சிந்திப்பதற்கு முன்பாக இந்த மார்க்கத்தின் சுருக்கமான வரலாற்றையும் அடிப்படையான நம்பிக்கைகளையும் பற்றி பார்க்க வேண்டும்.

நியூயார்க் நகரம், பெயின் பிரிட்ஜ் வரலாற்றில் நமக்குத் தெரியவருகிறது என்னவென்றால், மோர்மன் மார்க்கத்தின் தீர்க்கதரிசியாக உருவெடுப்பதற்கு முன்பாக ஜோசப் ஸ்மித் அவர்கள் ஒரு கண்கட்டி வித்தைக்காரராக இருந்திருக்கிறார். ஒரு குறிப்பிட்ட கண்ணாடியின் மூலமாகப் பார்த்து புதையல்களைத் தன்னால் கண்டுபிடிக்க முடியும் என்று சொல்லியிருக்கிறார். மோர்மன் மார்க்கத்தைச் சேர்ந்தவர்களையோ ஜோசப் ஸ்மித்தையோ கேவலப்படுத்துவதற்காக இதை நான் சொல்லவில்லை. கடவுளின் தீர்க்கதரிசியாக மாறுவதற்கு முன்பு அவர் கண்கட்டி வித்தைக்காரராக (ஆங்கிலத்தில் இதற்கு con-man என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு மக்கள் நம்பிக்கையை அடிப்படையாக கொண்டு வித்தை காண்பிப்பவர் என்று பொருள் இருந்திருக்கிறார் என்ற உண்மையை வலியுறுத்தவே குறிப்பிடுகிறேன். மேலும் நீங்கள் மோர்மன் மார்க்கத்தாரிடம் பேசும்போது அவர்களுக்கு எதிரான ஆதாரங்களையும் இறையியல் வாதங்களையும் நீங்கள் வைத்த பிறகு, அவர்கள் “நாங்கள் ஜோசப் ஸ்மித்தை நம்புகிறோம்” என்று சொல்வார்கள். ஆகவே, அவர்களுடைய முதன்மையான பிரச்சனை அவர்கள் ஒரு நிரூபிக்கப்பட்ட வித்தைக்காரரை நம்புவதுதான்.

ஸ்மித் 1805-ல் வெர்மான்டில் பிறந்தார். அவர் 11 வயதாயிருக்கும்போது நியூயார்க்க நகரில் அவரது குடும்பம் குடியேறியது. தன்னுடைய குடும்பத்தாரைப் போல அவர் பிரஸ்பைடீரியன் திருச்சபையில் சேரவில்லை. பல்வேறு திருச்சபைப் பிரிவுகளைப் பார்த்து குழப்பமடைந்த ஸ்மித் காட்டுக்குள் சென்று விண்ணப்பிக்க ஆரம்பித்தார். தனது 14-ம் வயதில் இரண்டு பேர் காட்டில் தனக்கு காட்சி கொடுத்ததாக கூறினார். அவர்களில் ஒருவர், “இவர் என்னுடைய நேச மகன், இவருக்குச் செவிகொடுங்கள்” என்று சொன்னாராம். ஸ்மித் ஒரு திருச்சபைப் பிரிவிலும் சேரக்கூடாது என்றும் ஏனெனில் அவை அனைத்தும் தவறானவை என்றும் அனைத்து நம்பிக்கைக் கூற்றுகளும் அருவருப்பானவைகள் என்றும் அவருக்குச் சொல்லப்பட்டதாம். 1823-ல் அவருக்கு இன்னொரு காட்சி அருளப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அது ஒரு இரவில் இரண்டு முறை அவருக்குக் கிடைத்தராம். தன்னுடைய படுக்கைக்கு அருகில் மோரோனி என்ற பெயருடைய ஒரு கடவுளுடைய பிரசன்னத்தின் தூதன் தோன்றியதாகச் சொல்லப்படுகிறது. அவர் தங்கத் தட்டில் எழுதப்பட்ட ஒரு புத்தகம் இருப்பதாகவும் அது வட அமெரிக்கக் கண்டத்தில் முன்பு குடியிருந்தவார்களின் விவரங்களைக் கொண்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது. அந்த பூர்வ குடிகளுக்கு அருளப்பட்ட நித்திய நற்செய்தியின் முழுமை ஜோசப் ஸ்மித் வாழ்ந்த கிராமத்தின் மலைப்பகுதியில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. அடுத்த நாள் ஜோசப் ஸ்மித் தேடிச் சென்று ஒரு கல் பெட்டிக்குள் அவற்றைக் கண்டதாகவும் சொல்லப்படுகிறது. அப்போது தோன்றிய ஒரு தேவதூதன் அவற்றை எடுத்துச் செல்ல வேண்டாம் என்றும் அடுத்த நான்கு வருடங்களுக்கு அதே தேதியில் அதே இடத்திற்கு தொடர்ந்து வருமாறும் கட்டளையிட்டது. 1927-ல் அவர் அந்த தங்கத் தட்டுகளை பத்திரமாக வைத்துக்கொள்ளும்படி எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டாராம். இந்த இரகசியங்களை அவர் காத்துக்கொண்டு வந்தார். அவரைத் தவிர இன்னும் 11 பேர் மட்டுமே அதைப் பார்த்தாகச் சொல்லப்படுகிறது. இந்த தட்டுகளில் எழுதப்பட்டிருந்தது சீர்திருத்த எகிப்திய மொழி என்று ஸ்மித் கூறுகிறார் (அப்படி ஒரு மொழி உலகத்தில் எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை). அவர் அந்த தட்டுகளை மொழிபெயர்க்க ஆரம்பித்தார். நியூயார்க்கைச் சேர்ந்த ஒரு விவசாயியான மார்டின் ஹாரிஸ் என்பவர் ஸ்மித் எழுதிய நூலைப் பதிப்பித்ததாகத் தெரிகிறது. ஆயினும், அவர் மொழிபெயர்த்த இந்த தட்டுகள் உண்மைதானா என்றும் அவற்றை அவர் சரியாக மொழிபெயர்த்திருக்கிறாரா என்று அவர் உறுதி செய்துகொள்ள விரும்பினார். மார்டின் ஹாரிஸ் அவர்களுக்கு ஸ்மித் அந்த தட்டுகளைத் தரவில்லை, அவற்றின் பிரதிகள் என்று அவர் சொன்னவற்றைக் கொடுத்தார். மார்டின் ஹாரிஸ் அவர்கள் நியூயர்க் நகரில் இருந்த சார்ளஸ் ஆண்டன் என்ற ஒரு பேராசிரியரிடம் அவற்றைக் கொடுத்திருக்கிறார். அந்த பேராசிரியர் அவை உண்மையான எழுத்துக்கள்தான் என்றும் அவை எகிப்திய, கல்தேய, சிரிய மற்றும் அரபி மொழிக்குரியவை என்று உறுதி செய்ததாகவும் சொல்லப்படுகிறது. ஹாரிஸ் அவர்களுடைய கூற்றுப்படி ஆண்தன் அவர்கள் தனக்கு ஒரு கடிதம் எழுதி ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ளவை எகிப்திய எழுத்துக்கள் என்று உறுதி செய்தார். இந்த எழுத்துக்களை மொழிபெயர்த்திருப்பதும் சரியாகத்தான் இருக்கிறது என்று உறுதி செய்ததாகவும் சொல்லப்படுகிறது.* (ஆனால் ஆர்வமளிக்கும் உண்மை என்னவென்றால், இந்த புத்தகம் எந்த மனிதனும் அறியாத மொழியில் எழுதப்பட்டிருக்கிறது என்றும் தேவதூதர்களின் உதவியினால்தான் மொழிபெயர்க்கப்பட்டது என்றும் சொல்கிறது. அப்படியிருக்கும்போது, மனிதர்கள் இதை ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என்று அவர்கள் ஏன் எதிர்பார்க்க வேண்டும்? அது எப்படி சாத்தியமாகும்?)

* 1834-ல் ஆன்தன் ஒரு கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: "மோர்மன் எழுத்துக்கள் சீர்திருத்த எகிப்திய எழுத்துக்கள் என்று நான் அறிவித்தாகச் சொல்லப்படும் முழுக் கதையும் முற்றிலும் பொய்யானது… அது ஒரு தந்திரம் என்றும் கட்டுக்கதை என்றும் நான் சீக்கிரமே முடிவு செய்துவிட்டேன்” (Wikipedia - Anthon Transcript)

1829-ல் முன்னாள் பள்ளி ஆசிரியராக இருந்த ஆலிவர் கௌட்ரீ என்பவர் ஸ்மித்தின் எழுத்தாளராக மாறி ஸ்மித்தின் மொழிபெயர்ப்புகளை எழுதுகிறவரானார். கௌட்ரீ அவர்களும் அந்த தட்டுகளைப் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஸ்மித்துக்கும் கௌட்ரீக்கும் இடையில் ஒரு தடுப்பு வைத்து மறைக்கப்பட்டிருந்தது. ஒரு பக்கத்தில் இருந்து ஸ்மித் மொழிபெயர்த்துச் சொல்வார் மற்ற பக்கத்தில் இருந்து கௌட்ரீ எழுதுவார். ஒரு மாதம் கழித்து இருவரும் காட்டிற்குள் ஜெபிக்கச் சென்றார்கள். அங்கு திருமுழுக்கு யோவான் பரலோக தூதனாக இறங்கி வந்து அவர்களுக்கு ஆரோனுடைய ஆசாரியத்துவத்தைக் கொடுத்தாராம். அதன் பிறகு அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லவும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட எழுத்துக்களைப் புரிந்துகொள்ளவும் ஆரம்பித்தார்களாம். அதன் பிறகு, பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் ஆகியோர் சஸ்குவானா ஆற்றங்கரையில் தோன்றி மெல்கிஷதேக்கின் ஆசாரியத்துவத்தை அவர்களுக்குக் கொடுத்தார்கள். 1830-ம் வருடம் மார்ச் மாதம் 26-ம் தேதி மோர்மன் புத்தகம் விற்பனைக்கு வந்தது. ஏப்ரல் 6-ம் தேதி இறுதிகால பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை அதிகாரபூர்வமாக உருவாக்கப்பட்டு, அதில் ஆறு அங்கத்தவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள் (அவர்களில் 31 வயதுடையவரே மூத்தவர்). ஒரு மாத காலத்திற்குள் அங்கத்தவர்களுடைய எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது. அவர்கள் ஓஹியோ மகாணத்தின் கிர்லாண்ட் பகுதியில் இருந்த செவ்விந்தியர்களுக்கு நடுவில் அருட்பணி செய்தார்கள். இந்த கால கட்டத்தில்தான் ஜோசப் ஸ்மித்திற்கு மீண்டும் கொள்கைகள் மற்றும் உடன்படிக்கைகள் குறித்த வெளிப்பாடுகள் கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது. அவர் கிங் ஜேம்ஸ் ஆங்கில வேதாகமத்தை திருத்தி எழுதினார். அதன் பிறகு மிஷெளரியிலுள்ள ஜேக்சன் கௌன்டி என்ற இடம் “வாக்குத்தத்த நாடு என்றும் சீயோன் நகரத்துக்கான இடம்” என்றும் வெளிப்பாட்டைப் பெற்றுக்கொண்டார். அதன் காரணமாக மிஷெளரி சுதந்தர நகரத்தில் அவரைப் பின்பற்றிய பலர் குடியேறினார்கள். இங்கு குடியேறிவர்களுக்கும் மோர்மன்களுக்கும் நடுவில் பல போர்கள் நடைபெற்ற பிறகு மாகாணத்தின் இராணுவம் அதில் தலையிட்டது. ஆயினும், மக்கள் கூட்டம் அவர்களைத் தாக்கியதால் அவர்கள் மிஷெளரியின் தூர கிழக்குப் பகுதிக்குச் சென்றுவிட்டார்கள். ஸ்மித்தும் இன்னும் சில மோர்மன் தலைவர்களும் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் தப்பி இல்லிநாய்ஸ் என்ற இடத்திற்குச் சென்றார்கள். 1839-ல் மிசிசிப்பு ஆற்றங்கரையில் நாவூ என்ற நகரம் உருவாக்கப்பட்டது. “நாவூ படை” என்ற சிறிய இராணுவம் நிறுவப்பட்டது. மோர்மன்களுக்கு எதிரான எந்த கருத்தையும் செய்தித்தாள்களில் பார்க்கும்போது அவற்றை வெளியிடும் அச்சகத்தை அழித்து, அந்த பத்திரிகையின் பிரதிகளை எரித்துவிடும்படி அந்த இராணுவத்திற்கு ஜோசப் ஸ்மித் கட்டளை கொடுப்பார். மாநிலத்தின் ஆளுனரிடத்தில் புகார் கொடுக்கப்பட்ட போது ஸ்மித் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு விடுவிக்கப்பட்ட அவர் மீண்டும் அவருடைய சகோதரருடன் சேர்ந்து கைது செய்யப்பட்டார். அந்த தருணத்தில் இல்லிநாய்ஸில் உள்ள கார்த்தேஜ் நகரத்து சிறையை ஒரு கும்பம் தாக்கியதில் அவர் கொல்லப்பட்டார்.

மோர்மன் போதனைகள்:

ஆக்கம் 8 - “வேதாகமம் சரியாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் வரை அதை கடவுளுடைய வார்த்தை என்று நாங்கள் நம்புகிறோம். மோர்மன் புத்தகமும் கடவுளுடைய வார்த்தை என்று நாங்கள் நம்புகிறோம்.”
ஆக்கம் 9 - “கடவுள் இதுவரை வெளிப்படுத்தியவைகள், இப்போது அவர் வெளிப்படுத்திக் கொண்டிருப்பவைகள் அனைத்தையும் நாங்கள் நம்புகிறோம். மேலும் கடவுளுடைய அரசைக் குறித்த பல பெரிய மற்றும் முக்கியமான காரியங்களை அவர் இன்னும் வெளிப்படுத்தவிருக்கிறார் என்றும் நாங்கள் நம்புகிறோம்.”
ஆக்கம் 11 - “எங்களுடைய மனசாட்சியின்படி எல்லாம் வல்ல கடவுளை வணங்க எங்களுக்கு உரிமை இருக்கிறது என்றும் அனைத்து மனிதர்களுக்கும் உள்ள இந்த உரிமையின்படி அவர்கள் எப்படி, எங்கே அல்லது என்ன வணங்க வேண்டும் என்பதில் உரிமையுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் நாங்கள் நம்புகிறோம்.”
“இப்போது மனிதன் எப்படியிருக்கிறானோ அப்படித்தான் கடவுள் ஒரு காலத்தில் இருந்தார். இப்போது கடவுள் எப்படியிருக்கிறாரோ அப்படி மனிதன் ஒரு காலத்தில் இருப்பான்.” (From: “The Grand Destiny of Man,” Deseret Evening News, July 20, 1901, 22)
"நாம் இப்போது இருப்பதைப் போலவே கடவுள் ஒரு காலத்தில் இருந்தால். கடவுள் உயர்த்தப்பட்ட மனிதனாக அங்கு வானத்தின் சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார்” (From: “Teachings of Presidents of the Church: Joseph Smith” Chapter 2: God the Eternal Father (2011), 36–44)
"அவர் நம்முடைய பிதா – ஆவிகளின் பிதா, ஒரு காலத்தில் இப்போது நாம் இருப்பதைப் போல அழிந்து போகும் மாம்சமுள்ள மனிதனாக இருந்தவர், இப்போது உயர்த்தப்பட்டவராக இருக்கிறார். இருளடைந்ததும் தவறு நிறைந்ததுமான பாரம்பரியங்கள் உள்ள இந்த உலகத்திற்கு கடவுள் ஒரு காலத்தில் மனிதனைப் போல அளவுக்கு உட்பட்டவராக இருந்தார் என்றால் பைத்தியமாகத் தோன்றும்;" (Brigham Young in the Journal of Discourses, v. 7, p. 333)
உபதேசமும் உடன்படிக்கைகளும் பணியின் அகத்தூண்டுதலையும் வெளிப்பாட்டுத் தன்மையையும் காட்டுகின்றன: "வேத வாக்கியங்கள் என்னுடைய சொந்த மடியில் இருப்பதைப் போல என்னுடைய சொந்த தெரிந்துகொள்ளப்பட்ட மக்களின் மீட்புக்காக கொடுக்கப்படும் " (D&C 34:5b)
“அவருடைய பெயர் யோசேப்பு என்று அழைக்கப்படும்; அவர் அவருடைய தந்தையின் பேரினால் அழைக்கப்படுவார்; அவர் உங்களைப போல் இருப்பார்; கர்த்தர் அவருடைய கையினால் நடப்பிக்கும் காரியம் என்னுடைய மக்களுக்கு இரட்சிப்பைக் கொண்டுவரும்” (ஆதியாகமம் 50:32, மோர்மன் மொழிபெயர்ப்பு)
“1 ஆண்டவராகிய கடவுள் மோசேயிடம் பேசிச் சொன்னது என்னவென்றால், என்னுடைய ஒரே பேறானவருடைய திருப் பெயரால் நீ கட்டளையிட்ட சாத்தான் ஆதியில் இருந்து இருப்பவன்; 2. அவன் எனக்கு முன்பாக வந்து, இதோ, நான் என்னை அனுப்புகிறேன்; நான் அனைத்து மனுக்குலத்தையும் மீட்பேன், ஒரு ஆத்துமாவும் கெட்டுப்போவதில்லை, நிச்சயமாக நான் அதைச் செய்வேன்; ஆகவே, உமது கனத்தை எனக்குத் தாரும்.” (ஆதியாகமம் 3:1-2, மோர்மன் மொழிபெயர்ப்பு)

இந்த மோர்மன்களை நாம் எப்படி கையாள்வது? அவர்கள் வேதாகமத்துடன் முரண்படும் ஒவ்வொரு வசனங்களையும் நாம் எடுத்துக் கையாள வேண்டுமா? அல்லது அவர்கள் ஒரு கடவுளை வணங்கினாலும் உண்மையில் பல கடவுள்களை நம்புகிறார்கள் என்பதை அவர்களுக்குக் காண்பிக்க வேண்டுமா (இந்த நிலைப்பாடு ஆங்கிலத்தில் Henotheism என்று அழைக்கப்படுகிறது)? நாம் வேதாகம முறையைப் பயன்படுத்தி மூடனுக்கு அவனுடைய மூடத்தனத்தின்படி பதிலுரைக்க வேண்டும். வாதத்திற்காக மோர்மன்களுடைய உலக நோக்கு சரியென்றே வைத்துக்கொள்வோம். அவர்களுடைய நம்பிக்கையின்படி கடவுள் ஒரு காலத்தில் நம்மைப்போல அழிந்து போகும் மாம்சத்தில் இருந்தார். வேதாகமத்தில் குறிப்பிட்டுள்ள நித்தியராகவுள்ள இயேசுவைப் போல கடவுளாக இருந்து மனிதனாகாமல் அவர்களுடைய கடவுள் மனிதனாக ஆரம்பித்து கடவுளாக மாறியிருக்கிறார். இதன் பொருள் மோர்மன்களுடைய உலக நோக்கு புறவயப்பட்ட ஒழுக்கத்தைப் பற்றி பேச முடியாது. ஏனெனில் அவர்களுடைய கடவுள் நித்தியமானவரும் அல்ல, இறுதியானவரும் அல்ல. இவைதான் புறவயப்பட்ட தன்மைக்குரிய அடிப்படைத் தேவைகள். அதே காரியத்தை நாம் தர்க்கநியாய விதிமுறைகளைக் குறித்தும் பேச முடியும். அவர்களுடைய கடவுள் நித்தியராக இல்லாத காரணத்தினால் மாறாத சட்டத்தையோ, சத்தியத்தையோ குறித்து அவர்கள் பேச முடியாது. மோர்மன்கள் எந்த காரியத்தையும் நிச்சயமாக அறிய முடியாத நிலையில் இருக்கிறார்கள். அவர்களுடைய கடவுள்கள் உண்மையில் இருக்கின்றனவா, புறவயப்பட்ட ஒழுக்கவிதிகள், உலகளாவிய உண்மை, மாறாக தர்க்கவியல் சட்டம் போன்ற காரியங்களை அவர்கள் அறிந்துகொள்ள எந்த அடிப்படையும் இல்லை. ஏனெனில் அவர்களுடைய கடவுள் ஒரு காலத்தில் மனிதனாக இருந்து இப்போது கடவுளாகியிருப்பவர்.

மேலும், மோர்மன்கள் பல அண்டங்களில் பல கடவுள்கள் இருப்பதாக நம்புவதால், அவர்கள் சரியான கடவுளைத்தான் நம்புகிறார்கள் என்பதற்குரிய அறிவை அவர்கள் எப்படி பெற்றுக்கொள்ள முடியும்? இது அவர்களுக்கு புதிய பிரச்சனையை உருவாக்குவதாகத் தோன்றுகிறது. கடவுள்கள் அளவுக்கு அதிகமாக இருக்கும்போது, கடவுள்களைக் குறித்த காரியத்தில் இறுதியான, சரி பிழை என்று எதுவும் இருக்க முடியாது. (இதுவே தன்னையே மறுத்துரைக்கும் கூற்று. ஏனெனில் இது இறுதியில்லாத ஒன்றைக் குறித்து இறுதியாக காரியத்தைப் பேசுகிறது).

இருப்பினும், நாம் ஏற்கனவே பார்த்தபடி, ஒரு மோர்மன் ஆசிரியர் சொல்வதைப் போல அனைத்தும் இவ்வாறுதான் முடியும்: “ஜோசப் ஸ்மித்தினால் உருவாக்கப்பட்ட வரலாற்றுப் பதிவுகளை நம்புவதா இல்லையா என்பதை ஒரு தனிப்பட்ட நபர்தான் முடிவு செய்ய வேண்டும்” (Steven Harper, Suspicion or trust). இந்த இடத்தில் நாம் மோர்மன்களைப் பார்த்து கேட்க வேண்டிய கேள்வி இதுதான். ஜோசப் ஸ்மித்தின் கூற்றுக்களுக்கு எந்தவித புறவயப்பட்ட ஆதாரமும் இல்லை. அவர் முன்வைத்த புத்தகத்திற்கு மூலப்பிரதி எதுவும் இல்லை. இவருடைய செய்தி இதுவரை வரலாறு தோறும் இருந்து வந்த நம்பிக்கைக்கு மாறுபட்டிருக்கிறது. ஒரு வித்தைக்காரிடத்தில் உங்கள் நித்திய மீட்பை ஒப்படைக்கப் போகிறீர்களா? முடியாது என்றே நான் நினைக்கிறேன்.

www.Grace-and-Truth.net

Page last modified on April 13, 2023, at 02:30 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)