Grace and Truth

This website is under construction !

Search in "Tamil":
Home -- Tamil -- 11-Presuppositional Apologetics -- 048 (Answering the worldview of pseudo-messianic biblical counterfeits -- MOONIES)
This page in: -- Chinese -- English -- French? -- German -- Indonesian -- Russian -- TAMIL -- Ukrainian

Previous Chapter -- Next Chapter

11. முன்ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரைக்கான விவிலிய அறிமுகம்
கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிரான தாக்குதல்களில் மறைந்திருக்கும் பொய்களையும் அடிப்படைத் தவறுகளையும் எப்படி அம்பலப்படுத்துவது?
பாகம் 4 – செயலில் ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரை

33. போலி மேசிய வேதாகமப் போலிகளின் உலகநோக்கிற்கு பதிலுரைத்தல் – மூனீக்கள் (MOONIES)


ஒன்றிப்புத் திருச்சபை (The Unification Church) இந்த வகைக்கு ஒரு நல்ல உதாரணம் ஆகும். இந்த ஒன்றிப்புத் திருச்சபை சன் மியாங் மூன் (Sun Myung Moon) என்பவரால் உருவாக்கப்பட்டது. அவர் 1920 பிப்பிரவரி மாதத்தில் கொரியாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார். அவருடைய பெற்றோர்கள் பிரஸ்பைடீரியன் சபையைச் சேர்ந்தவர்கள். அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் மன் யொங்-மியொங் (Mun Yong-myeong) என்பதாகும், அதன் பிறகு அவர் ஆங்கில வார்த்தைகளில் சூரியனையும் சந்திரனையும் குறிக்கும்படி பெயரை மாற்றிக்கொண்டார். அவர் 16 வயதுடையவராக இருக்கும்போது ஒரு ஈஸ்டர் ஞாயிறு அன்று ஒரு மலையுச்சியில் ஒரு தரிசனத்தைக் கண்டார். இயேசு அவருக்குத் தோன்றி தான் இந்த உலகத்தில் செய்யத் தவறிய பணியை செய்யும்படி அவருக்குக் கட்டளை கொடுத்தார். இந்த உலகில் கடவுளுடைய அரசை நிறுவுவதும் பூமிக்கு சமாதானத்தையும் கொண்டுவருவதுதான் அந்த பணியாகும். “எங்களுடைய குழு நிறுவன சபைகளோடு ஒப்பிடுகையில் உயர்ந்து பரிமாணமுள்ள ஒன்றாகும். கிறிஸ்தவர்களுக்கும் எங்களுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் உண்டு. 6000 வருடங்களாக கடவுள் வளர்த்துவரும் கிறிஸ்தவம் அழிவுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது. இது காலம் வரை கடவுள் கிறிஸ்தவத்தோடு இருந்தார். இப்போது நிலைமை இக்கட்டாக மாறியிருக்கிறது” என்று எழுதுகிறார் (The Master Speaks).

இந்த உலகத்திலேயே மிகச் சிறந்தவன் தான் என்றும் கடவுளால் அனுப்பப்பட்ட பரிசுத்தவான்களில் தானே முற்றிலும் வெற்றிகரமானவர் என்றும் அவர் கோருகிறார். “இயேசு உள்ளிட்ட பல குருக்களிடம் நான் பேசியிருக்கிறேன். அவர்கள் அனைவரும் ஞானத்தைப் பொருத்தவரையில் எனக்கு கீழ்ப்பட்டுவிட்டார்கள். அவர்கள் வெற்றி பெற்ற பிறகு சரணாகதி அடைந்துவிட்டார்கள்.” (Kenneth Boa,Cults, World Religions and the Occult, p. 214). மூனுடைய கூற்றுப்படி, கடவுளுடைய அன்புக்கு பதிலாக அவருடைய பிள்ளைகள் அவரை அன்பு செய்யவில்லை என்றால் கடவுளால் சந்தோஷமாகவோ முழுமையாகவோ இருக்க முடியாது. இயேசு கடவுளின் மகனாக இருப்பதைப் போல அனைத்து மனிதர்களும் கடவுளின் மகன்களும் மகள்களுமாக இருக்க வேண்டும் என்பதுதான் கடவுளுடைய ஆரம்ப திட்டம். ஆதாமும் ஏவாளும் வீழ்ச்சியடைந்திருக்கவில்லை என்றால் அனைத்து மனிதர்களும் இயேசுவைப் போலவே முழுமையானவர்களாக இருந்திருப்பார்கள்” (Moon, The Divine Principle).

சன் மியங் மூனுடைய போதனைகளைப் பற்றி இன்னும் சிறிது பார்க்கலாம்.

““கிறிஸ்தவ திருச்சபையுடனான நம்முடைய அருட்பணி முடியும்வரை, வேதாகமத்திலிருந்து மேற்கோள் காட்டி தெய்வீக விதிமுறையை விளக்க வேண்டும். கிறிஸ்தவர்களுடைய சுதந்தரத்தை நாம் பெற்றுக்கொண்ட பிறகு நாம் வேதாகமம் இன்றி போதிக்கும் விடுதலையைப் பெற்றுவிடுவோம்.” (Master Speaks, March/April, 1965, p.1).
“வேதாகமமே சத்தியம் ஆகாது, அது சத்தியத்தைப் போதிக்கும் பாடநூல் அவ்வளவுதான். அனைத்து காரியங்களுக்கும் அதையே இறுதி அதிகாரமாக நாம் கருதக்கூடாது” (Divine Principle p.9).
“இவ்வுலகத்தில் உள்ள ஐநூறு கோடி மக்களும் ஆதாமும் ஏவாளும் செய்யத் தவறிய கடமையின் ஒரு பகுதியினால் கட்டப்பட்டிருக்கிறார்கள். கோபத்தின் சமுத்திரம் தொடர்ந்து கடவுளுக்கு மனத்துக்கத்தைக் கொடுக்கிறது. ஆவியுலகத்திற்குள் கடந்து சென்ற எண்ணற்ற மூதாதையர்களும் இங்கே பிடிப்பட்டிருக்கிறார்கள். இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கும் கடவுள் வீழ்ச்சிக்கு முன்பிருந்த நிலையை எப்படி திரும்பக் கொண்டு வருவார்? இந்த காரணத்தினால்தான் நாம் கடவுளைப் பார்த்து பரிதாபப்பட வேண்டிருக்கிறது” (Cheon Seong Gyeong, Sun Myung Moon. Book Eight, Sin and Restoration Through Indemnity).
“இப்போது கடவுள் கிறிஸ்தவத்தை தூரத்தில் எறிந்துவிட்டு, புதிய சமயத்தைப் படைத்துக்கொண்டிருக்கிறார். அந்தப் புதிய சமயம் ஒன்றிப்புத் திருச்சபைதான்” (Time, Sept. 30, 1974, p. 68).
பரிசுத்த ஆவியானவர் பெண்பாலாகவும் ஆண்பாலாகவும் ஆள்தன்மை அற்றவராகவும் தோன்றுகிறார்… கடவுளைப் போல அவரும் காணப்படாதவர் எதிலும் அடங்காதவர் – ஒரு பிரகாசமான வெளிச்சத்தைப் போலவோ அல்லது காந்த சக்தியைப் போலவோ இருப்பவர்” (Unification Theology, p.201-202).
“பரிசுத்த ஆவியானவர் ஒரு பெண்பால் ஆவியானவர், ஏனெனில் அவர் உண்மையான தாயாக வந்தவர். அதாவது, இரண்டாவது ஏவாளாக.. அவர் இயேசுவின் ஆவிக்குரிய மனைவியாக இருக்கிறார்” (Divine Principle, p. 215).
“கடவுளும் இழந்து போன தனது பிள்ளைகளுக்காவும் உலகத்திற்காகவும் கவலைப்படுகிறார். அவைகளைத் தன்னிடம் மீண்டும் சேர்த்துக்கொள்வதற்காக “திருமுழுக்கு யோவானுடைய இரண்டாம் வருகைக்கு ஆயத்தப்படுத்தப்படுவதைப் போல பில்லி கிரஹாமை எழுப்புவதற்காக கடவுள் அமெரிக்காவில் செயல்பட்டார். அவர் அறியப்படாத வாலிபராக இருந்து இந்த உலகத்தில் அதிகம் பார்க்கப்பட்ட ஒரு கிறிஸ்தவராக மாறினார். தான் ஏன் இவ்வளவு பிரபலமானேன் என்று பில்லி கிரஹாமுக்குத் தெரியவில்லை. அவர் முதல் மேசியாவுக்கு சாட்சி கொடுக்கும்படி அல்ல, இரண்டாம் இறுதி மேசியாவுக்குச் சாட்சி கொடுக்கும்படியே கடவுள் அவரை பிரபலமாக்கினார்” (Jon Quinn,1920: The Birth of a Messiah, p. 17).
“திருமுழுக்கு யோவானுடைய இரண்டாம் வருகையாக இருக்கும்படி கடவுள் பில்லி கிரஹாமைத் தெரிந்துகொண்டார். ஆனால் இரண்டாவது உலக பெரு யுத்தத்திற்குப் பிறகு அவர் சன் மியங் மூனைப் பற்றி கேள்விப்படாமல் உலகத்திலேயே அதிக புகழ்பெற்ற கிறிஸ்தவராக மாறியது கவலைக்குரியது. திருமுழுக்கு யோவானைப் போலவே பல வருடங்கள் மேசியாவைப் பற்றி கேள்விப்படாமல் இருந்த காரணத்தினால் தாழ்மையுள்ள மேசியாவைப் பார்க்கத் தவறிவிட்டார்.” (Jon Quinn,1920: The Birth of a Messiah, p. 20)
“மீட்பரின் அருட்பணி கடவுளை விடுவித்து சாத்தானைத் தண்டிப்பது. மனித இனத்தை தொடர்ச்சியாக குற்றஞ்சொல்லி வரும் இந்த அருவருக்கத்தக்க தலைவரை அழிப்பது யார்? கடவுளால் அதைச் செய்ய முடியாது. இரட்சகராகிய மேசியா மட்டும்தான் அதைச் செய்ய முடியும்” (Cheon Seong Gyeong, Selections from the Speeches of True Parents).

தன்னுடைய நம்பிக்கைகள் எவ்வளவு மூடத்தனமானது என்பதை விளக்கும் இன்னும் பல காரியங்களை மூன் சொல்லியிருக்கிறார். ஆனால் அடிப்படையான காரியத்தை மட்டும் நாம் பார்ப்போம்: நாம் ஏன் மூனை நம்ப வேண்டும், பின்பற்ற வேண்டும்?

மூனுடைய கூற்றுப்படி இயேசு அவருக்குக் காட்சியளித்து தான் செய்யத் தவறிய காரியத்தைச் செய்யும்படி அவருக்குக் கட்டளை கொடுத்திருக்கிற காரணத்தினால். இயேசு ஒரு இரண்டாவது ஏவாளைக் கண்டுபிடித்து அவளோடு பிள்ளைகளைப் பெற்று கடவுளின் அரசை திரும்ப நிலைநிறுத்தியிருக்க வேண்டும். இயேசுவே தோல்வியடைந்து விட்டாரே அவருடைய கூற்றுக்கு நாம் ஏன் செவிகொடுக்க வேண்டும். ஆகவே மூனை அனுப்பிய இந்த இயேசு கடவுளுடைய விருப்பத்தைச் சரியாகப் பின்பற்றவில்லை. அப்படியானால் அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?

மூனுடைய இறையியலின்படி கடவுள் எப்படிப்பட்டவர் என்பது ஒரு வியப்பே. இந்த கடவுள் ஆதாம் ஏவாளில் தோல்வியடைந்தார், இயேசுவில் தோல்வி, இரண்டாவது ஏவாளில் தோல்வி இப்போது மூனுடைய 2012-ல் நடைபெற்ற மரணத்திற்குப் பிறகு இப்போதும் இந்த கடவுள் தோல்வியடைந்துவிட்டார். உண்மையிலேயே மூனுடைய கடவுள் பரிதாபப்பட வேண்டிய ஒருவர்தான். அவர் ஆராதனைக்கு தகுதியானவர் அல்ல. மூனுடைய இறையியலில் இறுதியில் மூன் கடவுளைவிட பெரியவராக இருக்கிறார். ஏனெனில் அவர்தான் கடவுளையே விடுதலை செய்ய வேண்டியவராக இருக்கிறார், நாம் நான்காவது ஆதாமுக்கும் நான்காவது ஏவாளுக்கும் நாம் காத்திருக்க வேண்டியதுதான் என்று நினைக்கிறேன்.

மூனுடைய கூற்றுக்கள் சோதித்தறிய முடியாத தாறுமாறான கூற்றுகள் ஆகும். மூனுடைய சீடர்களைப் பார்த்து நாம் இப்படிக் கூறலாமா: “மூன் அரசியல் தலைவர்களோடு கலந்துவிட்டபடியால் மூனும் தன்னுடைய பணியில் தவறிவிட்டார் என்றும் இப்போது என்னை நான்காவது ஆதாமாக இயேசு அனுப்புகிறார். எனக்குக் காட்சியளித்து அதை எனக்குச் சொன்னார்.” ஆனால் அந்த மூனி நான் சொல்வதற்கு என்ன ஆதாரம் என்று என்னிடத்தில் கேட்பார். மூனிடம் என்ன ஆதாரம் இருந்ததோ அதுதான் என்னுடைய ஆதாரமும். என்னிடத்தில் எந்த ஆதாரமும் இல்லை. அப்போது அந்த மூனி நீங்கள் ஒரு கதையை உருவாக்கியிருக்கிறீர்கள் என்று என்னைக் குற்றப்படுத்துவார். அவ்வாறுதான் மூனும் ஒரு கதையை உருவாக்கினார் என்று நான் அவருக்கு பதிலுரைப்பேன். மூன் மட்டும் தன்னைக் குறித்து தாறுமாறான கோரிக்கைகளை முன்வைக்கலாம் நான் வைக்க முடியாதா? என்னித்தில் மட்டும் நீங்கள் ஆதாரத்தைக் கேட்பீர்கள் அவரிடம் நீங்கள் கேட்க மாட்டீர்களா? அவர் மட்டும் முரண்பட்டு பேசலாம். நான் முரண்படக் கூடாதா?

இவ்வாறு தன்னை ஞானி என்று சொல்லும் மூனி பைத்தியக்காரராகிறார் (ரோமர் 1:22), தாறுமாறான கோரிக்கைகளுக்கும் முரண்பாடுகளுக்குமிடையிலான நடனம் அவரை பைத்தியக்காரனாக்கியது. அவர் எப்படி விகற்பமான கோரிக்கைளை முன்வைத்தார் என்று நாம் பார்ததோம். அவை தோற்றுப் போன போது அதிலும் விகற்பமான கோரிக்கைகளை முன்வைத்தார். அநீதியினால் சத்தியத்தை அடக்கி வைக்கிறவர்களுக்கு இவர் இன்னொரு உதாரணம் (ரோமர் 1:18).

www.Grace-and-Truth.net

Page last modified on April 13, 2023, at 02:33 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)