Home
Links
Contact
About us
Impressum
Site Map?


Afrikaans
عربي
বাংলা
Dan (Mande)
Bahasa Indones.
Cebuano
Deutsch
English-1
English-2
Español
Français
Hausa/هَوُسَا
עברית
हिन्दी
Igbo
ქართული
Kirundi
Kiswahili
മലയാളം
O‘zbek
Peul
Português
Русский
Soomaaliga
தமிழ்
తెలుగు
Türkçe
Twi
Українська
اردو
Yorùbá
中文



Home (Old)
Content (Old)


Indonesian (Old)
English (Old)
German (Old)
Russian (Old)\\

Home -- Tamil -- 17-Understanding Islam -- 013 (CHAPTER THREE: AXIOMS OF FAITH)
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Ukrainian -- Yoruba

Previous Chapter -- Next Chapter

17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
பகுதி இரண்டு:இஸ்லாத்தின் நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் புரிந்துகொள்ளுதல்
அத்தியாயம் 3: அடிப்படை நம்பிக்கைகள்

3.2. அடிப்படை நம்பிக்கை 2: இறை தூதர்களில் நம்பிக்கை


முஸ்லீம்களுக்கான இரண்டாவது அடிப்படை நம்பிக்கை இறை தூதர்களின் மீதான நம்பிக்கை ஆகும். குர்ஆன் (21:31) "நீரிலிருந்தே அனைத்து உயிர்களையும் படைத்தோம்" என்று கூறுகிறது. ஆனால், ஹதீஸ் இறை தூதர்கள் ஒளியிலிருந்தும், ஜீன்கள் நெருப்பின் கலவையிலிருந்தும், ஆதாம் களிமண்ணிலிருந்தும் படைக்கப்பட்டனர்" என்று கூறுகிறது. (சஹீஹ் முஸ்லீம்). குர்ஆனில் சில இறை தூதர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன, ஆனால் பெரும்பாலும், இறை தூதர்களைப் பற்றி இஸ்லாமிய அறிஞர்கள் மிகக் குறைவாகவே ஒப்புக்கொள்கிறார்கள். இறை தூதர்கள் பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டம் கிறிஸ்தவ கண்ணோட்டத்திலிருந்து மிகவும் வேறுபட்டது. சில நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களில் ஓரளவு ஒற்றுமை காணப்பட்டாலும், விவரங்கள் அல்லது பின்னணியிலுள்ள செய்தியில் கணிசமான வேறுபாடுகள் உள்ளன. இதற்கு ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். வெளிப்படுத்தின விசேஷத்தில் இறை தூதன் எக்காளம் ஊதுவது தீர்ப்புக்கான சின்னமாக இருக்கிறது. ஆனால் எக்காளம் ஊதுவது போன்ற கதை ஒன்று இஸ்லாத்தில் உள்ளது; இஸ்லாமியர்கள், இஸ்ராஃபீல் என்ற இறை தூதன் மறுமை நாளின் தொடக்கத்தையும், இறந்தோர் உயிர்த்தெழுதலையும் குறிக்கும் வகையில் அடையாளமாக அல்ல, உண்மையில் மூன்று முறை எக்காளம் ஊதுவார் என்று நம்புகிறார்கள்.

குர்ஆனில் சில இறை தூதர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஜிப்ரீல் (கபிரியேல்) முதன்மை வாய்ந்த தலைமை இறை தூதர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார். ஜிப்ரீல் முதன்மையான தலைமை இறை தூதர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார். இவர் புனித ஆத்மா உள்ளவர், வெளிப்படுத்தும் இறை தூதர், நம்பிக்கையான ஆவி என்றும் அழைக்கப்படுகிறார். ஆனால், இது கிறிஸ்தவ மரபிலுள்ள பரிசுத்த ஆவியுடன் இந்த தூதனை ஒப்பிடப்படவில்லை என்பது கவனிக்க வேண்டியது அவசியம்.

இந்த பெயர் கொடுக்கப்பட்ட இறை தூதர்களில் சிலருக்கு குறிப்பிட்ட பணிகள் உள்ளன, உதாரணமாக, நரகத்தின் காவலாளி இறை தூதன் மாலிக். குர்ஆன் கூறுகிறது:

“நிச்சயமாக, குற்றவாளிகள் நரக வேதனையில் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவர்களுக்கு அ(வ்வேதனையான)து குறைக்கப்பட மாட்டாது அதில் அவர்கள் நம்பிக்கையையும் இழந்து விடுவார்கள். எனினும், நாம் அவர்களுக்கு யாதோர் அநியாயமும் செய்யவில்லை ஆனால் அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டவர்களே. மேலும், அவர்கள் (நரகத்தில்) "யா மாலிக்" உமது இறைவன் எங்களை முடித்து விடட்டுமே!" என்று சப்பதமிடுவார்கள்; அதற்கு அவர் "நிச்சயமாக நீங்கள் (இங்கு) நிலைத்து இருக்க வேண்டியவர்களே" என்று கூறுவார்.’” (குர்ஆன் 43:74-77)

எல்லா இறை தூதர்களுக்கும் பெயர்கள் இருக்காது. சில இறை தூதர்களை அவர்கள் செய்யும் வேலைகளால் மட்டுமே அடையாளம் காண முடியும். உதாரணமாக, அல்லாவின் அரியணையை சுமக்கும் இறை தூதர்களும், கருவிலிருக்கும் குழந்தைக்கு உயிரை வழங்கும் இறை தூதர்களும் பெயரால் அறியப்படவில்லை. செய்யும் செயல்கள் அனைத்தையும் பதிவு செய்ய ஒவ்வொருவருக்கும் இறை தூதர்கள் இருப்பதாக நம்புகிறார்கள். குர்ஆன் கூறுகிறது:

“நிச்சயமாக, உங்கள் மீது பாது காவலர்கள் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர். (அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள்.” (குர்ஆன் 82:10-11)

இஸ்லாத்தில் இன்னொரு முக்கிய இறை தூதன் இப்லிஸ் ஆவான், இது குர்ஆன் சாத்தானுக்கு கொடுக்கும் பெயர்களில் ஒன்றாகும். கிறிஸ்தவ பைபிளின் கதையைப் போன்றே, இஸ்லாமிய குர்ஆனிலும் இப்லிஸ் கடவுளுக்கு கீழ்ப்படியாத இறை தூதனாகச் சித்தரிக்கப்படுகிறான். இருப்பினும், அவன் அல்லாவின் அருளை இழந்ததற்குப் பின்னாலுள்ள சூழ்நிலைகள் மிகவும் வேறுபட்டவை. குர்ஆன் (2:34 முதல்) இப்லிஸ் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட விதத்தை விவரிக்கிறது. அனைத்து இறை தூதர்களும் ஆதமுக்கு முன் சாஷ்டாங்கம் செய்ய (ஸஜ்தா) கட்டளையிடப்பட்டபோது, இப்லிஸைத் தவிர அனைவரும் சாஷ்டாங்கம் செய்தனர். இப்லிஸ் மறுத்துவிட்டான், இதன் காரணமாக அவன் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டான் - ஆதாம் மற்றும் ஏவாளுடனும் வெளியேற்றப்பட்டான் - மேலும் அல்லா அவர்களுக்கு இடையே பகை இருக்கும் என்று கட்டளையிட்டான்.

முஸ்லீம் அறிஞர்களின் கூற்றுப்படி, இறை தூதர்கள் ஒளியிலிருந்து படைக்கப்பட்ட சிருஷ்டிகள் ஆகும், அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளைகளை துல்லியமாகச் செய்கின்றனர், மேலும் அவர்கள் அல்லாவுக்கு ஒருபோதும் கீழ்ப்படிய மறுக்க மாட்டார்கள். ஆனால், குர்ஆன் (2:30) ஆதம் படைப்பைப் பற்றி இறை தூதர்கள் கேள்வி எழுப்புவதாகக் கூறுவதால் இது ஒரு சிறிய சர்ச்சையை உருவாக்குகிறது.

இப்பகுதியை முடிப்பதற்கு முன், இஸ்லாத்தில் ஜின் என்று அழைக்கப்படும் மற்றொரு வகையான உயிரினங்களைப் பற்றி சுருக்கமாக குறிப்பிட விரும்புகிறேன். இவற்றுக்கு குர்ஆனில் (சூரா 72) ஒரு முழு அத்தியாயமே உள்ளது. இறை தூதர்களைப் போலல்லாமல், ஜின்களில் சில மட்டுமே நேர்மையானவை; சில நேர்மை குறைந்தவை. இவைகளில் சிலர் முஸ்லீம்கள்; மற்றவர்கள் இஸ்லாத்திலிருந்து விலகி, நரகத்திற்கு தள்ளப்படுபவர்கள். ஜின்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே திருமணம் சாத்தியம் என்று சில இஸ்லாமிய அறிஞர்கள் நம்பினாலும், பெரும்பாலான இஸ்லாமிய அறிஞர்கள் அதன் அதிகாரப்பூர்வத்தன்மையை மறுக்கின்றனர். இதன் விளைவாக, சில இஸ்லாமிய சட்டப் பிரிவுகள் கர்ப்பத்தை திருமணத்திற்கு வெளியேயுள்ள உறவின் (ஜினா) சான்றாக ஏற்றுக்கொள்வதில்லை. ஏனென்றால், ஒரு பெண் தனக்குத் தெரியாமல் ஒரு ஜினுடன் உடலுறவு கொண்டிருக்கலாம் அல்லது உண்மையில் ஒரு ஜினுடன் திருமணம் செய்திருக்கலாம் என்பது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியம்.

www.Grace-and-Truth.net

Page last modified on April 11, 2026, at 09:00 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)