Home
Links
Contact
About us
Impressum
Site Map?


Afrikaans
عربي
বাংলা
Dan (Mande)
Bahasa Indones.
Cebuano
Deutsch
English-1
English-2
Español
Français
Hausa/هَوُسَا
עברית
हिन्दी
Igbo
ქართული
Kirundi
Kiswahili
മലയാളം
O‘zbek
Peul
Português
Русский
Soomaaliga
தமிழ்
తెలుగు
Türkçe
Twi
Українська
اردو
Yorùbá
中文



Home (Old)
Content (Old)


Indonesian (Old)
English (Old)
German (Old)
Russian (Old)\\

Home -- Tamil -- 17-Understanding Islam -- 012 (Mohammed’s move to Madina and the establishment of Islam as a military force)
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Ukrainian -- Yoruba

Previous Chapter -- Next Chapter

17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
பாகம் ஒன்று: இஸ்லாத்தின் தொடக்கத்தைப் புரிந்துகொள்ளுதல்
அத்தியாயம் 2: முகம்மதின் வாழ்க்கை

2.4. முகம்மது மதினாவுக்கு இடம்பெயர்தலும் இஸ்லாத்தை ஒரு இராணுவ சக்தியாக ஸ்தாபித்தலும்


தூதர் கபிரியேலைக் கண்டதாக முகம்மது சொன்ன பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, கதீஜா உயிரிழந்தார். கதீஜா உயிருடன் இருந்த காலத்தில், முகம்மது மற்றொரு பெண்ணை மணக்கவில்லை. கதீஜா இறந்த பிறகு சிறிது காலத்திலேயே, சவுதா என்ற கைம்பெண்ணை மணந்தார் முகம்மது. அவரை மணந்திருந்த சமயத்திலேயே, ஆயிஷா என்ற இளம் பெண்ணையும் மணந்துகொண்டார்.

முகம்மது கதீஜாவை இழந்த பிறகு, ஏற்பட்ட பெரிய மாற்றம் இது மட்டுமல்ல. கதீஜாவை இழந்த சிறிது காலத்திலேயே, முகம்மதுவின் மாமாவும் இறந்தார். அவரது மறைவுடன், முகம்மது அதுவரை பெற்றிருந்த பாதுகாப்பையும் இழந்தார். முகம்மதுவின் குலத்தினர் பெரும்பாலானோர் தொடர்ந்து சிலை வழிபாட்டாளர்களாகவே இருந்தனர். இருப்பினும் அவர்களுக்கும் முகம்மதுக்கும் இடையே அன்பு நிலவியது. உபத்திரவத்திலிருந்து தப்பிக்க முகம்மது தனது மனைவிகளுடனும், அவரைப் பின்பற்றிய சுமார் எழுபது பேருடனும் மெக்காவை விட்டு வெளியேறி, மதீனாவுக்கு குடிபெயர்ந்தார். மதீனாவில், மேலும் சில பெண்களை மணந்துகொள்ள முகம்மது முடிவு செய்தார். இதன் மூலம், அவருக்கு ஒரே நேரத்தில் 11 முதல் 15 மனைவிகள் (சில ஆதாரங்களின் படி) இருந்தனர். சில பெண்களை விவாகரத்து செய்தார், இதன் காரணமாக அவர் மொத்தம் 15 முதல் 25 மனைவிகளை (சில ஆதாரங்களின் படி) கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

முகம்மது ஏன் மதீனாவைத் தனது இடமாகத் தேர்வு செய்தார்? முன்னர் சொன்னது போல், முகம்மதுவின் தாயார் வழி உறவினர்கள் அனைவரும் மதீனா நகரின் குடிமக்கள். அவர் அந்தக் குலத்தைச் சேர்ந்தவர் இல்லை என்றாலும் (அப்போதைய சமுதாயம் தந்தையின் வழித்தோன்றல்களை மட்டுமே சேர்த்துக்கொண்டது), அவர்கள் அவருக்கு புதிய இடத்தில் சிறிது பாதுகாப்பைக் கொடுத்தனர். அவரை தீர்க்கதரிசி என்று ஏற்றுக்கொண்ட அரபு குலத்தினர் மதீனாவிலும் இருந்தனர் (ஆனால் அனைவரும் உண்மையில் அவரது புதிய மதத்துக்கு மாறவில்லை). மதீனாவுக்குச் செல்வதற்கு முன்பே கூட, அவர் திறமையான தலைவர் என்று அங்கீகரிக்கப்பட்டார். மேலும் மதீனாவின் பகைமை கொண்ட இரண்டு குழுக்களான பனு கதீஜ் மற்றும் பனு அவ்ஸ் இடையே சமாதானத்தை ஏற்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார். அவர் அவர்களை ஒன்று சேர்த்த பிறகு, அவர்கள் பகையை மறந்து பொது மதத்தின் மீது விசுவாசம் கொண்டனர். அவர்கள் ஆதரவாளர்கள் அல்லது முகம்மதுவின் "உதவியாளர்கள்" என்று அறியப்பட்ட அன்சார் ஆயினர்.

மதீனாவின் சமூகக் கட்டமைப்பு வித்தியாசமானதாக இருந்தது. அதில் இரண்டு பெரிய அரபு பழங்குடியினர் இருந்தனர், பானூ கஜ்ராஜ் மற்றும் பானூ அவ்ஸ். யூத மக்களின் சில பிரிவுகளும் இருந்தன: அவை பனு குரைஜா, பனு கைநுகா, பனு நதீர் ஆகியவை. இந்த யூத குழுக்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் லெவண்ட்டிலிருந்து புலம்பெயர்ந்து, அரேபியா முழுவதும் தங்களை நிலைப்படுத்திக்கொண்டு, பெரும்பாலும் வர்த்தகம் அல்லது நகை தயாரிப்பில் ஈடுபட்டிருந்தன.

மதீனாவுக்கு இடம் பெயர்வு அவரது போதனைகளிலும், இருப்பிடத்திலும் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. இந்த அளவுக்கு முக்கியமான இந்த இடப்பெயர்வு இப்போது இஸ்லாமிய நாட்காட்டியின் (ஹிஜ்ரி நாட்காட்டி - இடம் பெயர்வு என்பதற்கு அரபு வார்த்தை) தொடக்கமாகக் கருதப்படுகிறது. மேலும், அவருடன் இடம் பெயர்ந்தவர்கள் முஹாஜிரூன் (குடியேறியவர்கள்) என்று அழைக்கப்படுகிறார்கள். மெக்காவில் அவர்கள் சந்தித்த இன்னல்களையும் துன்ப துயரங்களையும் கருத்தில்கொண்டு, இன்றும் அவர்கள் முஸ்லீம்களிடையே மதிப்புக்குரியவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

முகம்மது மெக்காவை விட்டு வெளியேறிய பிறகு, அவர் முன்பு போதித்த சமாதான சமயம் முடிவுக்கு வந்தது, அவரது போதனைகளின் தொனி வேறு வடிவத்தைப் பெற்றது. குர்ஆன் - பின்னர் தொகுக்கப்பட்டாலும் - முகம்மதின் இரு காலகட்டங்களின் போதனைகளும் அதில் காணப்படுகின்றன. அத்தியாயங்கள் என்றும் அழைக்கப்படும் மெக்கா சூராக்களுக்கும் மதீனா சூராக்களுக்கும் இடையே தெளிவான வேறுபாடு உள்ளது. . மெக்கன் சூராக்கள் ஆன்மீக இயல்புடையவை. இதற்கு நேர்மாறாக, மதினா சூராக்கள் பெரும்பாலும் போருக்கான கையேடு போல காணப்படுகின்றன. இந்த மாற்றம் முகம்மது முதன்மையாக ஒரு ஆன்மீக போதகராக இருந்து ஒரு கொடூர இராணுவ ஜெனரலைப் போல மாறினார் என்ற கருத்தோடு ஒத்துப்போகிறது.

ஹிஜ்ராவிற்கு சற்று முன்னதாக மதீனாவில் பஞ்சம் நிலவியது, மேலும் அதிகரித்து வரும் மக்கள் தொகையைக் காப்பாற்றுவதற்கு அப்பகுதி போதுமான வளங்களைக் கொண்டிருக்கவில்லை. இதன் விளைவாக, முகம்மது நபி வந்தபோது, தனக்கும் தன்னைப் பின்பற்றியவர்களுக்கும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டதை அறிந்தார், ஏற்கனவே அங்கிருந்த பிற பழங்குடியினருக்கும் போதுமான உணவு இருக்கவில்லை. மதீனாவில் குடியேறிய பிறகு, மெக்காவுக்குச் சென்று வந்த குறைஷி வணிகக் கூட்டங்களை (caravans) தாக்குவதற்கான நான்கு முயற்சிகளை முகம்மது மேற்கொண்டார், ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன. மார்ச் 624ல், ஹிஜ்ரி ஆண்டு துவங்கி இரண்டாம் ஆண்டில், முகம்மது ஒரு பயணம் செய்யும் வியாபாரிகளின் கூட்டத்தைத் தாக்குவதற்குத் திட்டமிட்டார். இந்தக் வியாபாரிகளின் குழுவிற்கு அபு சுஃப்யான் இப்னு ஹர்ப் என்பவர் தலைமை தாங்கிவந்தார். இவர் மெக்கா வணிகர்களின் தலைவர்களில் ஒரு செல்வாக்குமிக்கவர். இந்த வணிகக் குழு முஹம்மதின் தந்தையின் பூர்வகுடியைச் சேர்ந்தது. அந்தச் சமயத்தில் இந்தக் வியாபாரிகள் குழு சிரியாவிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தது. தனது கண்காணிப்பாளர்கள் மூலம் அபு சுஃப்யான் இந்தச் சதித் திட்டத்தை அறிந்து, உதவி கேட்டு மெக்காவுக்குச் செய்தி அனுப்பினார். குறைஷி ஏறக்குறைய ஆயிரம் வீரர்களை அவரிடம் அனுப்பி வைத்தது; ஆனால், அபு சுஃப்யான் இப்னு ஹர்ப் தனது பயணப் பாதையை மாற்றிக்கொண்டு, தாக்குதலை வெற்றிகரமாகத் தவிர்த்தார். என்றாலும், மெக்கா மக்கள் முகம்மதுவிற்கு எதிராக எப்படியும் படையெடுப்பு செய்ய முடிவு செய்தனர். இரு படைகளும் பத்ரி கிணறு (Badr well) அருகில் சந்தித்தன. அது மதீனாவிலிருந்து தென்மேற்குத் திசையில் 70 மைல் தொலைவில் உள்ளது. குறைஷி போர் படை முஸ்லீம் போர் படையை விட மூன்று மடங்கு பெரிதாக இருந்த போதிலும், பத்ரி கிணற்றின் நீராதாரத்தைக் கைப்பற்றியதன் மூலம் முஸ்லீம்கள் வெற்றி பெற்றனர்.

அவர்களின் ஆரம்ப ஆயுத மோதலில் கிடைத்த வெற்றி, புதிய இஸ்லாமிய அரசுக்கு குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்தது. மிகப் பெரிய படைகளுக்கு எதிரான போர்களில் வெற்றிக்கான சாத்தியத்தை முஸ்லீம்கள் உணரத் தொடங்கினர். மெக்காவிற்கும் அதன் கூட்டாளிகளுக்கும் எதிராக தாக்குதல்களை நடத்துவதற்கான வாய்ப்பையும் அவர்கள் சிந்தித்தார்கள். எனவே பத்ரி போருக்கு அடுத்த ஆண்டில், முகமதுவின் வெளிப்படையான விமர்சகர்கள் சிலரை குறிவைத்து தாக்க முஸ்லீம்கள் சிறிய பயணங்களில் ஈடுபட்டனர். முந்தைய பயணம் செய்யும் வியாபாரக் குழுவினரை தாக்கியதைப் போல, இந்த நடவடிக்கைகள் நடைமுறைத் தேவையான உணவுக்காக இயக்கப்படவில்லை, மாறாக, இஸ்லாமிய போதனைகளை எதிர்ப்பவர்களை அடக்குவது மட்டுமே அவர்களின் நோக்கமாக இருந்தது.

அபூ ஆஃபக் மற்றும் ஆஸ்மா பின்த் மர்வான் ஆகிய இருவரும் இதுபோன்ற தாக்குதல்களின் இலக்குகளாக இருந்தனர். வயதான பார்வையற்ற மனிதரான அபூ ஆஃபக், முகமதுவின் வன்முறை போக்குகளை விமர்சிக்கும் வசனங்களை எழுதினார். முகமதுவுக்கு எந்த உடல் ரீதியான அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாத போதிலும், விமர்சனத்தை பொறுத்துக்கொள்ளாத முகமதுவால் அவர் கொல்லப்பட்டார். சில சமகால இஸ்லாமிய ஆதாரங்கள் அவரது படுகொலையை நியாயப்படுத்த முயற்சிக்கின்றன, அவர் முகமதுவை விமர்சிக்கும் கவிதைகளுக்காக கொல்லப்படவில்லை, ஆனால் அவருக்கு எதிராக போரைத் தூண்டியதற்காக கொல்லப்பட்டார் என்று வாதிடுகின்றன. இருப்பினும், இந்தக் கூற்றை ஆதரிக்கும் எந்த ஆதாரமும் இல்லை. இந்தக் கூற்றை ஆதரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் வரலாற்றாசிரியர் இப்னு கதீரின் அரபு மொழி மேற்கோள், அபூ ஆஃபக் 120 வயதான கவிஞர் என்பதையும் அவரது படைப்பு போர் முழக்கத்திற்கு சமமாக இல்லை என்பதையும் குறைத்து மிகைப்படுத்தப்பட்டுள்ளது. இப்னு கதீர் பயன்படுத்திய "போரைத் தூண்டியது" என்று மொழிபெயர்ப்பிக்கப்பட்ட அல்லது விளக்கப்பட்ட - ஹரித் - என்ற சொல் குர்ஆனில் எப்போதும் "ஊக்குவித்தல்," "தூண்டுதல்," "உத்வேகம்," அல்லது "நெறிப்படுத்தல்" என்று நேர்மறையான அர்த்தத்தில் புரிந்துகொள்ளப்படுகிறது. எனவே, இந்தச் சூழலில் அது வேறுவிதமாக அர்த்தம் கொள்ள வேண்டும் என்று நம்புவதற்கு எந்தக் காரணமும் இல்லை. வாதத்திற்கு எதிரான எதிர் ஆதாரத்தை முற்றிலும் நீக்குவதன் மூலமோ அல்லது ஆதாரத்தை தவறாக மொழிபெயர்ப்பதன் மூலமோ மறுப்புக்கு பதிலளிக்க முயற்சிப்பது நம்பிக்கையான வழியாக இருக்க முடியாது. இஸ்லாமிய வாதத்தில், ஆதாரத்தை தன் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி (Procrustean bed) ஒரு குறிப்பிட்ட முடிவை அடைய தேவையற்ற தரத்தைப் பயன்படுத்துவது பரவலாக உள்ளது.

கொலை செய்தி வெளியானதும், ஆஸ்மா பிண்ட் மர்வான் என்ற பெண்மணி, அந்த செயலையும், முகம்மதுவைப் பின்பற்றுபவர்களையும் கண்டித்து ஒரு கவிதை இயற்றினார். இதைக் கேட்டதும், முகம்மது தன்னைப் பின்பற்றியவர்களிடம், “யார் என்னை பிண்ட் மர்வானிடமிருந்து விடுவிப்பார்?” என்று கேட்டார். அஸ்மா பின்ட் மர்வானின் பழங்குடியைச் சேர்ந்த அவரைப் பின்பற்றியவர்களில் ஒருவர், அந்த இரவில் அவளைக் கொலை செய்ய முடிவு செய்து, உறக்கத்தில் இருந்தவரைக் கொலை செய்தார். மறுநாள் அவர் கொலை செய்த செய்தியை முகம்மதுவிடம் தெரிவித்தார். முகம்மது அவரது செயலைப் பாராட்டி, "அவள் மரணத்திற்காக இரண்டு ஆடுகள் கூட சண்டையிட மாட்டா" என்று கூறியதன் மூலம், அந்தக் கொலையின் முக்கியத்துவத்தை அவர் அலட்சியமாகவும் கருதினார் என்ற உள் அர்த்தத்தை வெளிப்படுத்துகிறது. ஆஸ்மா பிண்ட் மர்வான், அபூ ஆபக் போல, போராளி அல்ல, விமர்சகர். இருப்பினும், அவர் தூக்கத்தில் கொலை செய்யப்பட்டார்.

ஆஸ்மா பிண்ட் மர்வானின் படுகொலை முகம்மதுவின் தலைமைப் பண்பில் ஒரு முக்கிய தருணமாக அமைந்தது. அவரது பழங்குடியைச் சேர்ந்த, முகம்மதுவை இரகசியமாகப் பின்பற்றியவர்கள் தங்கள் விசுவாசத்தை வெளிப்படையாகவே அறிவிக்கத் தொடங்கினர். வரலாற்று ஆசிரியர் இப்னு ஹிஷாம் கூற்றுப்படி, பழங்குடி மக்கள் அனைவரும் "இஸ்லாத்தின் சக்தியை" உணர்ந்து அதன் படையில் சேர்ந்தனர். இருப்பினும், இந்த மாற்றம் மரியாதையால் தூண்டப்பட்டதா அல்லது பயத்தால் தூண்டப்பட்டதா என்பதைத் தெளிவாக கூற இயலவில்லை.

முகம்மது தனது எதிரிகளுக்கு எதிரான படையெடுப்பைத் தொடரும் போது, மதீனாவில் இருந்த யூதக் குலங்களில் ஒன்றான பனு கயினுகா குலத்தை நோக்கி தனது கவனத்தைத் திருப்பினார். யூதர்களுக்கு எதிரான இந்தத் தாக்குதலுக்கான காரணங்கள் இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்களிடையே சர்ச்சைக்குரியவை. சில விவரங்கள் இது ஒரு முஸ்லீம் பெண்ணை யூத இளைஞர்கள் ஒருவர் அல்லது அதற்கு மேற்பட்டோர் மிரட்டியதால் ஏற்பட்டது என்று கூறுகின்றன, யூதர்களுக்கு எதிரான முஸ்லீம் ஆக்ரோஷத்திற்கான காரணங்கள் குறித்து முஸ்லீம் வரலாற்றாசிரியர்கள் பல்வேறு விளக்கங்களை வழங்குகின்றனர். சிலர் இது யூத இளைஞர்கள் ஒரு முஸ்லீம் பெண்ணை மிரட்டியதால் ஏற்பட்டது என்றும், மற்றவர்கள் யூத பழங்குடி முஹம்மதுவை குறைஷிகளை தோற்கடித்ததால் அவர்களையும் தோற்கடிக்க முடியும் என்று கருத வேண்டாம் என்று சவால் விடுத்ததால் ஏற்பட்டது என்றும் கருதுகின்றனர் (சபியூர் ரஹ்மான் அல்-முபாரக்கி, தி சீல்டு நெக்டர் என்பதன்படி). ஆரம்பத்தில், முகம்மது முழு பழங்குடியையும் அழிக்கும் திட்டத்தில் இருந்தார், ஆனால் இறுதியில் மதீனாவின் தலைவர்களில் ஒருவரான அப்துல்லா இப்னு உபை இப்னு சலூல் என்பவரால் அவர்களை கொல்லாமல் மதீனாவிலிருந்து வெளியேற்றுமாறு பரிந்துரைக்கப்பட்டார். முகம்மது அவர்களின் அனைத்து சொத்துக்களையும் கைப்பற்றி தன்னைப் பின்பற்றினவர்களுக்கு விநியோகித்தார், மேலும் கொள்ளையடித்த பொருட்களில் ஐந்தில் ஒரு பகுதியை தனக்காக வைத்துக் கொண்டார்.

மார்ச் 625 வரை முகம்மது தனது சிறிய படையெடுப்புகளைத் தொடர்ந்தார், பின்னர் குரைஷிகள் பதிலடி கொடுத்து, அபு சுஃப்யான், காலித் இப்னு அல்-வலீத், மற்றும் அம்ர் இப்னு அல்-ஆஸ் (தோல்விக்குப் பிறகு இஸ்லாத்திற்கு மதம் மாறியவர்) தலைமையில் 3000 படைவீரர்களைக் கொண்ட படையுடன் முகம்மது மீது தாக்குதல் தொடுத்தனர். இந்த போர் கி.பி 625 மார்ச் 23 சனிக்கிழமையில், மதீனாவின் வடக்கே மவுண்ட் உஹுத் முன்னால் அமைந்துள்ள பள்ளத்தாக்கில் நடந்தது. 200 பேர் கொண்ட மெக்காவின் குதிரைப்படை, முஸ்லீம் குதிரைப்படையை விட நான்கு மடங்கு அதிகமாக இருந்தது. இந்தப் போர் பொதுவாக முஸ்லீம்களுக்கு தோல்வியாகக் கருதப்படுகிறது, இந்த உண்மை குர்ஆனிலும் கூட ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது:

மேலும், (நீங்களும் முஷ்ரிக்குகளும் ஆகிய) இரு கூட்டத்தினரும் சந்தித்த நாளையில் உங்களுக்கு ஏற்பட்ட துன்பங்கள் அல்லாஹ்வின் அனுமதி கொண்டே தான் (ஏற்பட்டன. இவ்வாறு ஏற்பட்டதும்) முஃமின்களை (சோதித்து) அறிவதற்காகவேயாம். இன்னும் (முனாஃபிக் தனம் செய்யும்) நயவஞ்சகரை(ப் பிரித்து) அறிவதற்கும் தான்; அவர்களிடம் கூறப்பட்டது, "வாருங்கள்! அல்லாஹ்வின் பாதையில் போர் புரியுங்கள் அல்லது (பகைவர்கள் அணுகாதவாறு) தடுத்து விடுங்கள்," (அப்போது) அவர்கள் சொன்னார்கள்; "நாங்கள் போரைப் பற்றி அறிந்திருந்தால் நிச்சயமாக நாங்கள் உங்களைப் பின்பற்றியிருப்போம்." அன்றைய தினம் அவர்கள் ஈமானைவிட குஃப்ரின் பக்கமே அதிகம் நெருங்கியிருந்தார்கள்;. தம் உள்ளங்களில் இல்லாதவற்றைத் தம் வாய்களினால் கூறினர்;. அவர்கள் (தம் உள்ளங்களில்) மறைத்து வைப்பதையெல்லாம் அல்லாஹ் நன்கு அறிகிறான். (போருக்கு செல்லாமல் அம் முனாஃபிக்குகள் தம் வீடுகளில்) அமர்ந்து கொண்டே (போரில் மடிந்த) தம் சகோதரர்களைப் பற்றி; "அவர்கள் எங்களைப் பின்பற்றியிருந்தால் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்" என்று கூறுகிறார்கள்; (நபியே!) நீர் கூறும்; "நீங்கள் (சொல்வதில்) உண்மையாளர்களானால் உங்களை மரணம் அணுகாவண்ணம் தடுத்து விடுங்கள்" (பார்ப்போம் என்று). (குர்ஆன் 3:166-168)

போரின் போது, முகம்மது காயமடைந்தார், பற்கள் சேதமடைந்தன. அவரது மாமா ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் கொல்லப்பட்டார். தோல்வி இருந்தபோதிலும், உஹுத் போர்க்களத்தின் தந்திரோபாய இடத்தைத் தேர்வு செய்வதன் மூலம் முகம்மது தனது படைத்திறனை வெளிப்படுத்த இந்த போர் அனுமதித்தது. இந்த நிகழ்வு போராடும் இஸ்லாத்தின் கருத்தை வலுப்படுத்தியது மற்றும் புதிதாக உருவாகி வரும் இஸ்லாமிய அரசுக்கு போரின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது. இது முகம்மதுவின் அணுகுமுறையில் ஒரு திருப்புமுனையைக் குறித்தது, ஏனென்றால் அவர் தனது புதிய மதத்தைப் பரப்புவதற்காக இராணுவப் பிரச்சாரங்களை அதிகம் நம்பியிருக்கத் தொடங்கினார்.

அதனைத் தொடர்ந்த ஆண்டுகளில், மதீனாவில் இருந்த மீதமுள்ள யூதக் குலங்களைக் கையாண்டார் முகம்மது. பனு நதீரை வெளியேற்றி, பனு குறைஷி பழங்குடியினரின் ஆண்கள் அனைவரையும் கொலை செய்து, பெண்கள் மற்றும் குழந்தைகளை அடிமைகளாக ஆக்கிக்கொண்டார். கி.பி. 630ல், தனது மரணத்திற்கு இரண்டு ஆண்டுகள் முன்னதாக, தனது பிறந்த நகரமான மெக்காவிற்கு எதிராக ஒரு படையெடுப்பை நடத்தினார், அது முன்னதாக அவரையும் அவரது போதனைகளையும் நிராகரித்திருந்தது, மேலும் அதை வெற்றிகரமாக கைப்பற்றினார்.

முகம்மதுவின் மறைவுக்குப் பிறகு, இராணுவ நடவடிக்கைகள் மூலம் முஸ்லீம்கள் தங்கள் விரிவாக்கத்தைத் தொடர்ந்தனர். ஒரு நூற்றாண்டிற்குள், மேற்கில் பிரான்ஸ் நாட்டின் தென்பகுதி முதல் கிழக்கில் இந்தியா வரை, வடக்கில் ஆர்மீனியா முதல் தெற்கில் ஏமன் வரை பரந்த பேரரசை நிறுவினர்.

www.Grace-and-Truth.net

Page last modified on April 10, 2026, at 11:44 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)