Grace and TruthThis website is under construction ! |
|
|
Home Afrikaans |
Home -- Tamil -- 17-Understanding Islam -- 021 (PILLAR 1: The Shahada (Islamic creed))
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Ukrainian -- Yoruba
Previous Chapter -- Next Chapter 17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
பகுதி இரண்டு:இஸ்லாத்தின் நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் புரிந்துகொள்ளுதல்
அத்தியாயம் 4: இஸ்லாத்தின் தூண்கள்
4.1. தூண் 1: ஷஹாதா - இஸ்லாத்தின் விசுவாச அறிக்கைஷஹாதா அல்லது விசுவாச அறிக்கை “அல்லா ஒருவனைத் தவிர வேறு கடவுள் இல்லை, முகமது அல்லாவின் தூதர்” என்று கூறுகிறது. இஸ்லாமிய நம்பிக்கையில், அல்லாவை மட்டும் நம்புவது போதாது என்பதைக் காட்டுவதாக இது உள்ளது. (ஒரு படைப்பாகிய) இறைத்தூதர் முகமது அவர்களையும் நம்ப வேண்டியது அவசியம் என்று இரண்டாம் பகுதி வலியுறுத்துகிறது. இது, தன்னை முழுமையான ஏக கடவுள் கொள்கையைக் கொண்டிருப்பதாகக் கூறும் மதத்திற்கு விந்தையானதாக உள்ளது. முகமது அனைத்து அல்லாவின் தூதர்களைக் காட்டிலும் சிறப்பானவர் இல்லை என்று முஸ்லீம்கள் உறுதியாகக் கூறும் நிலையில், இங்கு அடிப்படை விசுவாச அறிக்கையில் அவர் மட்டும் தனியாக எடுத்துச் சொல்லப்படுவது மேலும் சிந்திக்க வேண்டிய விஷயம். ஷஹாதாவை அரபு மொழியில் ஓத வேண்டும் என்று முஸ்லீம்கள் நம்புகிறார்கள், இருப்பினும் இஸ்லாமிய கருத்துக்களில் இதை அரபு மொழியிலேயே சொல்ல வேண்டும் என்று எந்தக் குறிப்பும் இல்லை. முகமதுவின் கூற்றுப்படி, ஷஹாதாவை உச்சரித்தாலே போதும், அதுவே நரகத்திலிருந்து முஸ்லீம்களை காப்பாற்றுவதற்கு போதுமானது என்றார். “(அல்லாவைத் தவிர வேறு யாரும் தொழும் உரிமை அற்றவர்கள், முகமது அல்லாவின் தூதர்) என்று தனது இருதயத்திலிருந்து உண்மையாக சாட்சி கூறுவோரை மட்டுமே, நரகத்தின் நெருப்பிலிருந்து அல்லா நிச்சயமாகக் காப்பாற்றுவான்.” (ஸாஹீஹ் புகாரி)
எனவே, இதுவே ஒருவர் முஸ்லீமாக ஆவதற்குத் தேவையான ஒரே விஷயம். தொழுகைக்கான அழைப்பின் போது ஒவ்வொரு நாளிலும் இருபதுக்கும் மேற்பட்ட தடவை இதைக் கேட்க வேண்டும், மேலும் ஒவ்வொரு தொழுகையிலும் தனிப்பட்ட முஸ்லீம்கள் இந்த விசுவாச அறிக்கையை (ஷஹாதா) பல முறை திரும்பச் சொல்ல வேண்டும். உண்மையில், நடைமுறையில் இதை விட மிக அதிகமாக இந்தச் சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது. சில முஸ்லீம்கள் கோபம், மனக்குறை, நன்றியைத் தெரிவிப்பதல் போன்றவைகளுக்குக் கூட இந்த சொற்றொடரைப் பயன்படுத்துகிறார்கள். முகமது சொன்னார்: “நான் மக்களை எதிர்த்துப் போர் செய்ய கட்டளையிடப்பட்டேன், அவர்கள்: அல்லாவைத் தவிர வேறு யாரும் தொழுதுகொள்ளப்பட உரிமை இல்லை என்று சொல்லும் வரை போர் தொடரும்.” "அவர்கள், அல்லாவைத் தவிர வேறு இறை இல்லை' என்று உறுதி கூறினால், நம்மைப் போலவே தொழுகை நடத்தி, நம் குِப்லாவை (மெக்காவிலுள்ள கஃபா) நோக்கித் தொழுது, நாம் அறுப்பது போலவே அறுத்து விட்டால், அவர்களின் உயிரும் சொத்தும் நமக்குப் புனிதமானவையாக கருதப்படும். சட்டத்திற்குப் புறம்பான எந்த காரணத்திற்காகவும் அவர்களிடம் தலையிட மாட்டோம். அவர்களின் கணக்கு அல்லாவிடமே இருக்கும்." (ஸாஹீஹ் புகாரி).
சில முஸ்லீம் அறிஞர்கள் இந்த "மக்கள்" என்ற சொல் முகமது நபியின் குலத்தைச் சேர்ந்தவர்களைக் குறிக்கிறது என்று விளக்கம் அளிக்கின்றனர், வேறு சிலர் இது முஸ்லீம் அல்லாதவர்களைக் குறிக்கிறது என்று கருதுகின்றனர். |