Previous Chapter -- Next Chapter
4.1. தூண் 1: ஷஹாதா - இஸ்லாத்தின் விசுவாச அறிக்கை
ஷஹாதா அல்லது விசுவாச அறிக்கை “அல்லா ஒருவனைத் தவிர வேறு கடவுள் இல்லை, முகமது அல்லாவின் தூதர்” என்று கூறுகிறது. இஸ்லாமிய நம்பிக்கையில், அல்லாவை மட்டும் நம்புவது போதாது என்பதைக் காட்டுவதாக இது உள்ளது. (ஒரு படைப்பாகிய) இறைத்தூதர் முகமது அவர்களையும் நம்ப வேண்டியது அவசியம் என்று இரண்டாம் பகுதி வலியுறுத்துகிறது. இது, தன்னை முழுமையான ஏக கடவுள் கொள்கையைக் கொண்டிருப்பதாகக் கூறும் மதத்திற்கு விந்தையானதாக உள்ளது. முகமது அனைத்து அல்லாவின் தூதர்களைக் காட்டிலும் சிறப்பானவர் இல்லை என்று முஸ்லீம்கள் உறுதியாகக் கூறும் நிலையில், இங்கு அடிப்படை விசுவாச அறிக்கையில் அவர் மட்டும் தனியாக எடுத்துச் சொல்லப்படுவது மேலும் சிந்திக்க வேண்டிய விஷயம்.
ஷஹாதாவை அரபு மொழியில் ஓத வேண்டும் என்று முஸ்லீம்கள் நம்புகிறார்கள், இருப்பினும் இஸ்லாமிய கருத்துக்களில் இதை அரபு மொழியிலேயே சொல்ல வேண்டும் என்று எந்தக் குறிப்பும் இல்லை. முகமதுவின் கூற்றுப்படி, ஷஹாதாவை உச்சரித்தாலே போதும், அதுவே நரகத்திலிருந்து முஸ்லீம்களை காப்பாற்றுவதற்கு போதுமானது என்றார்.
எனவே, இதுவே ஒருவர் முஸ்லீமாக ஆவதற்குத் தேவையான ஒரே விஷயம்.
தொழுகைக்கான அழைப்பின் போது ஒவ்வொரு நாளிலும் இருபதுக்கும் மேற்பட்ட தடவை இதைக் கேட்க வேண்டும், மேலும் ஒவ்வொரு தொழுகையிலும் தனிப்பட்ட முஸ்லீம்கள் இந்த விசுவாச அறிக்கையை (ஷஹாதா) பல முறை திரும்பச் சொல்ல வேண்டும். உண்மையில், நடைமுறையில் இதை விட மிக அதிகமாக இந்தச் சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது. சில முஸ்லீம்கள் கோபம், மனக்குறை, நன்றியைத் தெரிவிப்பதல் போன்றவைகளுக்குக் கூட இந்த சொற்றொடரைப் பயன்படுத்துகிறார்கள்.
முகமது சொன்னார்:
சில முஸ்லீம் அறிஞர்கள் இந்த "மக்கள்" என்ற சொல் முகமது நபியின் குலத்தைச் சேர்ந்தவர்களைக் குறிக்கிறது என்று விளக்கம் அளிக்கின்றனர், வேறு சிலர் இது முஸ்லீம் அல்லாதவர்களைக் குறிக்கிறது என்று கருதுகின்றனர்.