Grace and TruthThis website is under construction ! |
|
|
Home Afrikaans |
Home -- Tamil -- 17-Understanding Islam -- 023 (PILLAR 3: Sawm (fasting))
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Ukrainian -- Yoruba
Previous Chapter -- Next Chapter 17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
பகுதி இரண்டு:இஸ்லாத்தின் நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் புரிந்துகொள்ளுதல்
அத்தியாயம் 4: இஸ்லாத்தின் தூண்கள்
4.3. தூண் 3: நோன்புநோன்பு இஸ்லாத்தின் மூன்றாவது தூண் ஆகும். இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதத்தில், விடியல் முதல் சூரிய அஸ்தமனம் வரை உண்ணுதல், குடிப்பது, மற்றும் தாம்பத்திய உறவு ஆகியவை முஸ்லீம்களால் தவிர்க்கப்படுகிறது, அனுமதிக்கப்படுவதில்லை. பகல் வேளையின் மாற்றங்கள் சூரிய உதயம் மற்றும் மறைவு நேரத்தைப் பொறுத்து மாறுபடுவதால், இது குளிர்காலத்தில் 9 மணிநேரங்கள் முதல் கோடை காலத்தில் 15 மணிநேரங்கள் வரை இருக்கும், மேலும் இது புவியியல் இருப்பிடத்தைப் பொறுத்து மேலும் வேறுபடும். மதம் சார்ந்த நியாயமான காரணம் சொல்ல முடியாத ஒவ்வொரு முதிர்ந்த முஸ்லீமும் நோன்பு நோற்க கடமைப்பட்டிருக்கிறார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், வாய்வழியாக தினசரி மருந்துகளை உட்கொள்ள வேண்டிய நிலையிலிருப்பவர்கள், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தங்களின் அல்லது குழந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் அபாயம் இருந்தால் நோன்பு நோற்க வேண்டியதில்லை. கர்ப்பிணி பெண்கள் ரமலான் நோன்பு நோற்க வேண்டியதில்லை. மருத்துவ காரணங்கள், முதுமை, கர்ப்பம் போன்ற காரணங்களால் ரமலான் நோன்பு நோற்க இயலாதவர்கள் விலக்கு பெறலாம் என்று இஸ்லாம் கூறுகிறது. இருப்பினும், பெரும்பாலான இஸ்லாமிய மரபுகள், விலக்கு பெற தகுதி இருந்தாலும், உடல்நிலை அனுமதித்தால் நோன்பு நோற்க முயற்சிக்குமாறு முஸ்லீம்களுக்கு அறிவுறுத்துகின்றன. மாதவிடாய் காலத்தில் பெண்கள் நோன்பு நோற்க வேண்டியதில்லை, நோன்பு விலக்கப்பட்டிருக்கிறது. இந்த காலத்தில் நோன்பு நோற்றாலும் அது செல்லாது, பின்னர் வரும் நாட்களில் நோன்பு கடனை ஈடு செய்ய வேண்டும். போர்க்களத்திலிருக்கும் போர் வீரர்களுக்கும் பயணத்திலிருப்பவர்களுக்கும் நோன்பு நோற்பதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ரமலான் மாதத்தில் நோன்பு நோற்க இயலாத சூழ்நிலையில் இருந்தவர்கள், ரமலான் மாதம் முடிந்த பின்னரும், அடுத்த ரமலான் மாதம் வருவதற்கு முன்னதாகவே தவற விட்ட நோன்புகளை நோற்க வேண்டும். நோன்பு நோற்க இயலாத சூழ்நிலை நிரந்தரமாக இருந்தால், நோன்புக் கடனை ஈடுசெய்ய முடியாது இருந்தால், நீண்ட காலம் நோன்பு நோற்க இயலாத சூழ்நிலை நீடித்திருந்தால், தவற விட்ட ஒவ்வொரு நோன்புக்கும், ஏழை எளியோருக்கு உணவளிப்பதன் மூலம் பரிகாரம் செய்யலாம். ஒரு முஸ்லீம் ரமலான் மாதத்தில் நோன்பு இருக்காமல் இருந்தாலோ, அல்லது சொல்லத்தக்க காரணமில்லாமல் சாப்பிடுதல், குடிப்பது அல்லது பகலில் வேண்டுமென்றே உடலுறவு கொள்வது போன்ற செய்து நோன்பை மீறினாலோ, அவர் தவறிழைத்தவராகக் கருதப்படுவார். அவர் நோன்பைத் தவற விட்ட ஒவ்வொரு நாளுக்கும் 60 தொடர் நாட்கள் நோன்பு இருப்பதன் மூலமோ அல்லது ஒரு அடிமையை விடுதலை செய்வதன் மூலமோ அல்லது 60 ஏழைகளுக்கு உணவளிப்பதன் மூலமோ அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும். (ஸாஹிஹ் முஸ்லீம், 2599). இந்த வகையான நோன்பு ரமலான் மாதத்திற்கு வெளியே பாவங்களுக்கான பிராயச்சித்தமாக கடைப்பிடிக்கப்படுகிறது. உதாரணமாக, ஒரு முஸ்லீம் சபதத்தை மீறினால் அவர் மூன்று நாட்கள் நோன்பு இருக்க வேண்டும் (குர்ஆன் 5:89), மற்றொரு முஸ்லீமை தவறாக கொலை செய்தால் அறுபது நாட்கள் நோன்பு இருக்க வேண்டும் (குர்ஆன் 4:92), விவாகரத்தை திரும்பப் பெறுவதற்கும் அறுபது நாட்கள் நோன்பு இருக்க வேண்டும் (குர்ஆன் 58:2-4). இன்றைய காலக்கட்டத்தில், ரமலான், பல இஸ்லாமிய சமூகங்களில், ஒரு மாத கால கொண்டாட்டமாக கடைப்பிடிக்கப்படுகிறது. நம்பிக்கைக்கு மாறாக, இந்த மாதத்தின் போது உணவு உண்ணும் அளவு கணிசமாக அதிகரிக்கிறது. முஸ்லீம் மக்கள் அதிகமுள்ள பல நாடுகளில், பகல் நேர வேலை நேரங்கள் குறைக்கப்பட்டு, பகல் நேர வேலைகள் இரவு நேரத்திற்கு மாற்றப்படுகின்றன. சில நாடுகளில், பகல் நேரத்தில் எல்லா ஹோட்டல்களும் மூடப்பட்டிருக்கும், மேலும் சில நாடுகளில், மக்கள் முஸ்லீமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், அல்லது மத ரீதியான காரணங்களுக்கான விலக்கு அவர்களுக்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும், பொது இடங்களில் உண்பது அல்லது குடிப்பது போன்ற செயல்களுக்கு தண்டனை வழங்க சட்டங்கள் உள்ளன. தண்டனை வகைகள் புருனேயில் அபராதம் செலுத்துவது போல் தொடங்கி, பாகிஸ்தானில் சிறைத் தண்டனை வழங்குவது போன்று கடுமையாக இருக்கும். இது போன்ற சட்டங்களுக்கு இஸ்லாமிய சட்ட திட்டங்களில் எந்த அடிப்படையுமில்லை. இந்த சட்டங்கள் மக்களை மாய்மாலம்செய்ய மட்டுமே வழிவகுக்கும். ஏனென்றால் இந்த சட்டங்கள் அனைத்தும் வெளிப்படையான நோன்பு கடைப்பிடித்தலை மட்டுமே கவனிக்கின்றன. ரமலான் நோன்பு காலத்தில், முஸ்லீம்கள் சீக்கிரம் கோபப்பட்டு விடலாம், பொறுமை குறைவாக இருக்கலாம், குறிப்பாக வெயில் காலத்தில் இது இருக்கும். இது நோன்பின் முக்கிய நோக்கமான தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வது மற்றும் நேர்மையான வாழ்க்கைக்கு முரண்பாடாக இருக்கும். சிலருக்கு, நோன்பு என்பது மத நம்பிக்கையை விட சமூக பழக்கமாக மாறிவிட்டது. சில இஸ்லாமிய நாடுகளில், ரமலான் கட்டுப்பாடுகள் மிகவும் விசித்திரமாக மாறிவிட்டன, அவை எந்த அர்த்தத்தையும் தருவதில்லை. உதாரணமாக, எகிப்தில் ரமலான் காலத்தில், எகிப்தியர்களுக்கு மது பரிமாறுவது தடை செய்யப்பட்டுள்ளது, அவர்கள் முஸ்லீம்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் (எகிப்தில் குறிப்பிடத்தக்க கிறிஸ்தவ சிறுபான்மை இருக்கிறது). ஆனால், எகிப்தியர்கள் அல்லாதவர்களுக்கு, அவர்களின் மதம் எதுவாக இருந்தாலும், மது பரிமாற அனுமதி உண்டு. எகிப்தில் ரமலான் காலத்தில், ஒரு கிறிஸ்தவ எகிப்தியர் ஒரு சவுதி முஸ்லீம் நபருடன் வெளியே சாப்பிடச் சென்றால், கிறிஸ்தவருக்கு பீர் கொடுக்க மறுக்கப்படலாம், ஆனால் முஸ்லீமுக்கு மது பரிமாறப்படலாம். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ரமலான் கட்டுப்பாடுகள் வருடத்திற்கு வருடம் மாற்றமடைகின்றன. அண்மை ஆண்டுகளில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உணவகங்கள் மற்றும் கிளப்புகளில் மது அருந்துவது அனுமதிக்கப்பட்டுள்ளது, ஆனால் நேரடி இசைக் கச்சேரி கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமிய சட்டப்படி, மது அருந்துவது ஆண்டு முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது நீங்கள் அறிந்ததே, அதனால் ரமலான் மாதத்தில் தடைசெய்வது என்பது ஒன்றும் விசேஷமானதல்ல. சில அரசாங்கங்கள் இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றுவதைவிட மக்களின் மத உணர்வுகளை மதிக்கும் வகையில் ரமலான் காலத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. |