Home
Links
Contact
About us
Impressum
Site Map?


Afrikaans
عربي
বাংলা
Dan (Mande)
Bahasa Indones.
Cebuano
Deutsch
English-1
English-2
Español
Français
Hausa/هَوُسَا
עברית
हिन्दी
Igbo
ქართული
Kirundi
Kiswahili
മലയാളം
O‘zbek
Peul
Português
Русский
Soomaaliga
தமிழ்
తెలుగు
Türkçe
Twi
Українська
اردو
Yorùbá
中文



Home (Old)
Content (Old)


Indonesian (Old)
English (Old)
German (Old)
Russian (Old)\\

Home -- Tamil -- 17-Understanding Islam -- 024 (PILLAR 4: Zakat (almsgiving))
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Ukrainian -- Yoruba

Previous Chapter -- Next Chapter

17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
பகுதி இரண்டு:இஸ்லாத்தின் நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் புரிந்துகொள்ளுதல்
அத்தியாயம் 4: இஸ்லாத்தின் தூண்கள்

4.4. தூண் 4: ஜக்காத் - தானதர்மம் செய்தல்


இஸ்லாத்தின் நான்கு தூண்களில் நான்காவது தூண் "ஜக்காத்" என்னும் தர்மம் செய்யும் செயலாகும். இஸ்லாமிய மார்க்கத்தைச் சார்ந்தவர்கள், ஒரு குறிப்பிட்ட அளவை விட அதிகமாக அவர்கள் ஓராண்டு சேர்த்த செல்வத்தில் 2.5 சதவீதத்தை தருமமாகக் கொடுக்க வேண்டும். ஜக்காத் தவிர, இஸ்லாமிய சட்டப்படி தருமம் செய்வதற்கு ஊக்குவிக்கப்படும் அல்லது தேவைப்படும் சில சூழ்நிலைகளும் உள்ளன. உதாரணமாக, பாவம் போன்றவற்றுக்கான பச்சாதாபத்திற்காக தருமம் செய்வது இதில் அடங்கும்.

குர்ஆன் ஜக்காத் தொகையைப் பெறத் தகுதி பெற்றவர்களின் வகைகளை விவரிக்கிறது. ஆனால், பயனாளிக்கு நேரடியாக பணத்தை கொடுக்க வேண்டுமா அல்லது பணத்தை பள்ளிவாசலுக்கு கொடுத்து அவர்கள் மூலம் வழங்க வேண்டுமா என்பதை தனிநபர் தான் முடிவு செய்ய வேண்டும். இஸ்லாமிய சட்டத்தின்படி ஜக்காத் செலவழிப்பதற்கு எட்டு ஏற்பாடுகள் உள்ளன:

“அவன் தான் இரவில் உங்களை மரிக்கச் செய்கிறான்; இன்னும் நீங்கள் பகலில் செய்தவற்றையெல்லாம் அறிகிறான்; மீண்டும் உங்களைக் குறிப்பிட்டதவணை முடிப்பதற்காக பகலில் எழுப்புகிறான்; பின்னர் உங்களுடைய (இறுதி) மீட்சி அவனிடமே இருக்கிறது அப்பால் நீங்கள் (இவ்வுலகில்) செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான்.” (குர்ஆன் 9:60)
  1. ஏழைகள். குர்ஆன் ஜக்காத் வழங்கப்பட வேண்டிய முதல் பிரிவினர் ஏழைகள் ஆவார்கள். ஃபுக்கரா (fuqara) என்ற அரபி வார்த்தை, உடல் ஊனம் அல்லது முதுமை காரணமாக தங்களைத் தாங்களே காப்பாற்றிக்கொள்ள இயலாதவர்களையும், தற்காலிக உதவி தேவைப்படும் அனாதைகள், கைம்பெண்கள், வேலையற்றவர்கள் போன்றவர்களையும் குறிக்கிறது.
  2. தேவை உள்ளவர்கள். இரண்டாவது பிரிவினர் தேவை உள்ளவர்கள் ஆவார்கள். மசாக்கின் (masakin) என்ற அரபி வார்த்தை, வறுமை அனுபவிக்கும் மற்றும் அவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள போதுமான வழிவகைகள் இல்லாதவர்களைக் குறிக்கிறது.
  3. மூன்றாவது பிரிவினர் ஜக்காத் நிர்வாகிகள் ஆவார்கள். தானம் திரட்டுவோர் மற்றும் வழங்குவோர், தங்களுக்கு பணம் தேவை இருந்தாலும் இல்லாவிட்டாலும் - ஒரு வகையான நிர்வாக கட்டணமாக இதைப் பெறலாம்.
  4. ஒப்புரவாக வேண்டியவர்கள். ஜக்காத் நிதியில் ஒரு பகுதியை, இஸ்லாத்தின் மீது ஈர்ப்பு ஏற்படுத்த, முஸ்லீம் சமூகத்திற்கு உதவியாக இருக்கும் திறன் கொண்ட முஸ்லீம் அல்லாதோருக்கு அல்லது புதிதாக இஸ்லாத்திற்கு மதம் மாறியவர்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால் வழங்கப்படலாம். இந்தக் குழுக்களில் உள்ளவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கலாம், அல்லது இஸ்லாத்திற்கு ஆதரவளிப்பதற்காக அல்லது அதற்கு கட்டுப்பட்டு நடப்பதற்காக அல்லது குறைந்தபட்சம் பிரச்சனை ஏற்படுத்தாத எதிரிகளாக இருப்பதற்காக நிதி உதவி வழங்கலாம். இன்று இந்தப் பகுதி பெரும்பாலும் இஸ்லாத்தைப் பற்றி நேர்மறையான பார்வையை உருவாக்குவதற்கான பொது உறவுகள், பிரச்சாரங்கள் அல்லது நிதி திரட்டும் ஊடக பிரச்சாரங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த வகை செலவு இன்றும் செல்லத்தக்கதுதானா என்பது குறித்து கருத்து வேறுபாடுகள் உள்ளன.
  5. அடிமைத்தனத்தில் இருப்பவர்களை விடுவிப்பதற்கும் ஜக்காத் நிதி பயன்படுத்தப்படலாம். ஜக்காத் நிதி அடிமைகளை மீட்பதற்கு இரண்டு வழிகளில் பயன்படுத்தப்படலாம். அடிமை தனது எஜமானருடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கிறார். அதாவது, அடிமை அவருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தினால், அவரை விடுதலை செய்வார் என்று ஒப்பந்தம் செய்துகொண்டால், அந்தத் தொகையை செலுத்த அடிமைக்கு ஜக்காத் நிதியிலிருந்து உதவி செய்யலாம். இரண்டாவது வழி: அடிமைத்தனத்தில் இருப்பவரின் விடுதலைக்கான தொகையை இஸ்லாமிய அரசாங்கமே நேரடியாக அடிமையின் உரிமையாளருக்கு கொடுத்து அவரை விடுவிக்கலாம். அறிஞர்கள் முதல் வழி அனுமதிக்கப்பட்டது என்று ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், அடிமையின் விடுதலைக்காக அரசாங்கத்திற்கு பணம் கொடுக்கலாமா என்பது குறித்து கருத்து வேறுபாடுகள் உள்ளன.
  6. கடன் சுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யலாம். தங்களின் சொந்த சொத்துக்களிலிருந்து கடனை முழுவதையும் திரும்ப செலுத்தினால் வறுமை நிலைக்கு தள்ளப்படுபவர்களுக்கு, அவர்கள் வருமானம் ஈட்டுகிறார்களா இல்லையா என்பதை பொருட்படுத்தாமல் ஜக்காத் வழங்கப்படலாம்.
  7. அல்லாவிற்காக கொடுக்கலாம். பொதுவாக இச்சொல் அல்லாவுக்காக செய்யப்படும் எந்த செயல்களையும் குறிக்கிறது என்றாலும், பெரும்பாலான இஸ்லாமிய அறிஞர்கள், இஸ்லாம் அல்லாத தரங்களை அடிப்படையாகக் கொண்ட சமூக, சட்ட அல்லது அரசியல் அமைப்புகளை ஒழிப்பதற்கும், அவற்றின் இடத்தில் இஸ்லாமிய அரசியல் மற்றும் சமூக அமைப்பை நிறுவுவதற்குமான போராட்டத்தையே (ஜிஹாத்) இச்சொல் குறிக்கிறது என்று ஒப்புக்கொள்கிறார்கள். எனவே, ஜிஹாத்துக்குத் தேவையான உபகரணங்கள், ஆயுதங்கள் மற்றும் பிற பொருட்களை வாங்குவதற்கான செலவுகளைச் சந்திக்க ஜக்காத் நிதி பயன்படுத்தப்படலாம்.
  8. வழிப்போக்கர்களுக்கு கொடுக்கலாம். உண்மையில், வசதியான வீடு இருந்தாலும், பயணத்திலிருக்கும் ஒரு முஸ்லீமுக்கு ஜக்காத் வழங்கப்படலாம். அவர்கள் தங்கள் பயணத்தை முடிக்க போதுமான பணம் இல்லாமல் இருந்தால் ஜக்காத் வழங்கப்படலாம். சில அறிஞர்கள் பயணம் பாவச் செயல்களுக்காக இருக்கக் கூடாது என்று நிபந்தனை விதிக்கின்றனர், ஆனால் குர்ஆனில் இதற்கான எந்த நிபந்தனையும் குறிப்பிடப்படவில்லை.

சில இஸ்லாமிய நாடுகளில், மத அறக்கட்டளை அமைச்சகம் ஒன்று உள்ளது, அது ஜக்காத் சேகரிப்பு மற்றும் செலவிடுதலை கையாள்கிறது. குர்ஆன் ஜக்காத் செலவிடுவதற்கு எந்த புவியியல் எல்லையையும் நிர்ணயிக்காததால், சில நாடுகள் அதை வெளிநாடுகளில் செலவிடுகின்றன, இயற்கை பேரிடர்கள் போன்ற மனிதாபிமான காரணங்களுக்காகவோ, அல்லது ஒரு இஸ்லாமிய நாட்டின் போரை ஆதரிப்பதற்காகவோ (உதாரணமாக, பாலஸ்தீன இஸ்லாமிய குழு ஹமாஸ் போன்றவை) அல்லது இஸ்லாமிய நாடு மற்றொரு இஸ்லாமிய நாட்டுடன் போரில் (ஈராக் ஈரானுக்கு எதிரான போர் போன்றவை) கூட செலவிடுகின்றன.

www.Grace-and-Truth.net

Page last modified on April 20, 2026, at 03:15 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)