Grace and TruthThis website is under construction ! |
|
|
Home Afrikaans |
Home -- Tamil -- 17-Understanding Islam -- 046 (Do we have to?)
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Ukrainian -- Yoruba
Previous Chapter -- Next Chapter 17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
இஸ்லாத்தில் சுவிசேஷத்திற்கு இருக்கும் தடைகளைப் புரிந்துகொள்ளுதல்
அத்தியாயம் 9: முஸ்லீம்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கும்போது கிறிஸ்தவர்கள் கடந்து வர வேண்டிய தடைகள்
9.1. நாம் இதைச் செய்ய வேண்டுமா?எந்த கடினமான வேலையைப் பற்றியும் பேசும்போதும், மிக முக்கியமான ஒரு விஷயம் அதன் அவசியம் பற்றிய கேள்வியே ஆகும். முஸ்லீம்களுக்கு நாம் சுவிசேஷத்தை அறிவிக்க வேண்டுமா? மீட்பின் வரலாற்றையும், கடவுள் ஒருவரைத் தெரிந்தெடுப்பதற்கு பின்னணியில் உள்ள காரணங்களையும் ஆராய்வது இந்தக் கேள்விக்கான பதில்களில் ஒன்றாகும். கடவுள் ஆபிரகாமைத் தெரிந்துகொண்டபோது, அவருக்கு ஒரு கட்டளையைக் கொடுத்து, இவ்வாறு சொன்னார்: “ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு.” (ஆதி 17:1) அவர் இஸ்ரவேலைத் தெரிந்துகொண்டபோது, இவ்வாறு சொன்னார்: “நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள் என்று நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்ல வேண்டிய வார்த்தைகள் என்றார்.” (யாத்திராகமம் 19:6). ஆபிரகாமை கடவுள் தெரிந்தெடுத்ததற்கான காரணம், அவர் கடவுளுக்கு முன்பாக நடக்க வேண்டும் என்பதற்காகத்தான். கடவுளுக்கு முன்பாக நடப்பது என்பது, அவரைப் பற்றி மற்ற தேசங்களுக்கு அறிவிப்பதையும் உள்ளடக்குகிறது. கடவுளுக்கு முன்பாக நடப்பதன் அர்த்தம், தேசங்களுக்கு அவருடைய செயல்களையும் அவருடைய வார்த்தைகளையும் அறிவிப்பதே ஆகும். கடவுள் இஸ்ரவேலை ஒரு ஆசாரியத்துவ ராஜ்ஜியமாக ஆக்குவதற்கே தெரிந்தெடுத்தார். ஆசாரியன் என்பவர் மக்களுக்கு கடவுளைப் பற்றிச் சொல்லி, கடவுள் சொல்வதை அவர்களுக்கு போதிப்பவர் ஆவார். பழைய ஏற்பாட்டில் கடவுள் யாரைத் தெரிந்தெடுத்தாலும், அது அவர்களுக்கு சிறப்புரிமை வழங்குவதற்காக அல்ல, மாறாக ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே ஆகும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், கடவுள் யாரையும் அவர்கள் மற்றவர்களை விட சிறந்தவர்கள் அல்லது பக்திமான்கள் என்பதற்காக தேர்ந்தெடுக்கவில்லை, மாறாக ஒரு வேலைக்காக அவர்களை நியமித்தார். தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் "கர்த்தர் ஆட்சி செய்கிறார்" (சங்கீதம் 96:10) என்று எல்லா தேசங்களுக்கும் அறிவிப்பதற்காகவே தெரிந்துகொள்ளப்பட்டார்கள். புதிய ஏற்பாட்டிலும் இதே நிலைதான், இயேசு கிறிஸ்துவிடமிருந்து வந்த கடைசி கட்டளை இதுவே ஆகும்: “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.” (மத்தேயு 28:18-20)
இந்தக் கட்டளை தவிர்க்க முடியாததும், விளக்கி சொல்லித் தப்பிக்க முடியாததும் ஆகும். எல்லா தேசங்களும் என்றால், அது எல்லாவற்றையும் குறிக்கிறது, எந்த விதிவிலக்கும் இல்லை. "எல்லா" என்பதில் நிச்சயமாக முஸ்லீம்களும் அடங்குவர். கிறிஸ்து பரலேகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பு, இவ்வாறு சீஷர்களிடம் சொன்னார். “… பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.” (அப். 1:8)
இந்த வசனத்தைப் பற்றி குறிப்பிட வேண்டிய ஒரு முக்கியமான கருத்து உள்ளது. கிறிஸ்துவின் சாட்சிகளாக இருக்கும்படி கொடுத்தக் கட்டளை எருசலேமிலிருந்து தொடங்குகிறது. இது பொதுவாக நமது நெருங்கிய வட்டத்தில் இருந்து தொடங்கி வெளிப்புறமாக நகர வேண்டும் என்று பொருள்படுத்தப்படுகிறது. என்றாலும், இவ்வாறான விளக்கம், அப்போஸ்தலர்கள் எவரும் எருசலேமைச் சேர்ந்தவர்கள் அல்ல, மாறாக அவர்கள் கலிலேயாவைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கவனிக்காமல் விட்டுவிடுகிறது. அவர்களைப் பொறுத்தவரையில், சுவிசேஷத்தை அறிவிப்பதற்கு எருசலேம் மிகவும் கடினமான இடமாக இருந்தது. எருசலேம் மத மற்றும் அரசியல் அதிகாரத்தின் மையமாக இருந்தது. எருசலேமில் அந்த சமயத்தில் சுவிசேஷத்தை அறிவிப்பது மிகவும் ஆபத்தான பணியாக இருந்தது, ஏனென்றால் அது ரோம ஆட்சியையும் யூத அதிகாரத்தையும் ஒரே நேரத்தில் எதிர்த்து நிற்பது போல் கருதப்படும். எருசலேமில் சுவிசேஷத்தை அறிவித்த பிறகு, உலகின் மற்ற பகுதிகளில் அதையே செய்வது மிகவும் எளிதான பணியாகும். ஆதி சபை இந்தப் பணியை தெளிவாக புரிந்துகொண்டது. “யூதர்களுக்கும், எருசலேமில் வாசம்பண்ணுகிற ஜனங்களுக்கும்” பேதுரு பிரசங்கித்தார். (அப். 2:14b). தண்டனையை எதிர்கொள்ளும் அபாயம் இருந்தபோதிலும், ஆதி சபை கண்டவற்றையும் கேட்டவற்றையும் பற்றி பேச வேண்டிய கட்டாயத்தில் இருந்தது என்பதை அப்போஸ்தலர் 4:20-29 தெளிவாக விளக்குகிறது. அந்தக் காலக்கட்டத்தில், சுவிசேஷத்தை அறிவிப்பது தண்டிக்கப்படக்கூடிய குற்றமாக இருந்தது, சில நேரங்களில் மரண தண்டனை கூட விதிக்கப்பட்டது - ஏனென்றால் சுவிசேஷத்தை அறிவிப்பது யூத மதத்தினர் பார்வையில் தேவநிந்தனையாகவும் ரோம சாம்ராஜ்யத்தினர் பார்வையில் விசுவாசதுரோகமாகவும் கருதப்பட்டது. வேதாகமத்தில் இந்தப் பணியின் அவசியத்தை நிரூபிக்கும் மேலும் பல சான்றுகள் உள்ளன, ஆனால் அவற்றை எல்லாம் ஆராய்வதற்கு நமக்கு நேரம் இல்லை. இருப்பினும், வேதாகமம் முழுவதும் இந்தக் கருத்து மிகவும் தெளிவாக உள்ளது என்று நான் நம்புகிறேன். ஆபத்து அல்லது சிரமம் எதுவாக இருந்தாலும், கிறிஸ்துவைப் பற்றி அனைவருக்கும் சொல்ல வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதாக ஏற்றுக்கொண்ட பிறகு, ஏன் மிகக் குறைவான கிறிஸ்தவர்கள் இஸ்லாமிய மக்களிடையே சுவிசேஷத்தைப் அறிவிப்பதில் ஈடுபடுகின்றனர் என்ற கேள்வி எழுகிறது. எவைகள் தடைகளை ஏற்படுத்துகின்றன, இன்னும் சொல்லப்போனால் – நாம் எப்படி அவை நம்மைத் தடுக்க முடியாமல் இருக்கும்படி செய்ய முடியும்? இந்த அதிகாரத்தின் மீதமுள்ள பகுதிகளில், இந்தக் கட்டளையை நிறைவேற்றுவதில் இருந்து நம்மைத் தடுத்து நிறுத்தக்கூடிய பல காரணங்களில் சிலவற்றை ஆராய்வோம். வழியில் எதெல்லாம் தடுக்கின்றன? எப்படி அவற்றை கடந்து செல்ல முடியும்? |