Grace and TruthThis website is under construction ! |
|
|
Home Afrikaans |
Home -- Tamil -- 17-Understanding Islam -- 045 (CHAPTER NINE: BARRIERS FOR CHRISTIANS TO OVERCOME WHEN EVANGELISING MUSLIMS)
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Ukrainian -- Yoruba
Previous Chapter -- Next Chapter 17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
இஸ்லாத்தில் சுவிசேஷத்திற்கு இருக்கும் தடைகளைப் புரிந்துகொள்ளுதல்
அத்தியாயம் 9: முஸ்லீம்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கும்போது கிறிஸ்தவர்கள் கடந்து வர வேண்டிய தடைகள்முஸ்லீம்களுக்கு கிறிஸ்துவை அறிமுகப்படுத்துவது மிகவும் சவாலான பணியாகும் என்பதை யாரும் மறுக்க முடியாது. சிலர், முஸ்லீம்களுக்கு கிறிஸ்துவை அறிமுகப்படுத்துவது என்பது முற்றிலும் சாத்தியமற்ற செயல் என்று கருதக்கூடும். வேலை மிகவும் கடினமானது என்பதை ஒப்புக்கொண்டாலும், அதை சாத்தியமற்றது என்று நான் கருதவில்லை. வேலையின் சிரமத்தைப் பொறுத்தவரை, அந்த சிரமத்திற்கு பல காரணங்கள் இருக்கின்றன. வேலையின் சிரமத்திற்கு காரணங்கள் பல இருந்தாலும், முதலில் பார்ப்பது ஒரு கிறிஸ்தவருடைய தனிப்பட்ட காரணங்களைப் பற்றித்தான். முஸ்லீம் சமூகத்தினர் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றியும், கிறிஸ்தவர்கள் அவற்றை அறிந்திருப்பதன் அவசியம் மற்றும் பயன் பற்றியும் அடுத்த அத்தியாயங்களில் விளக்கமாகக் காண்போம். முதலில், ஏன் முஸ்லீம்களுக்கு கிறிஸ்துவை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கேள்வியைக் கவனிப்போம். இதில் தெரிவுசெய்ய வாய்ப்பு உண்டா, அல்லது கிறிஸ்தவர்களாக நாம் தவிர்க்கக்கூடிய ஒன்றா இது? |