Grace and TruthThis website is under construction ! |
|
|
Home Afrikaans |
Home -- Tamil -- 17-Understanding Islam -- 056 (Ignorance of Islamic beliefs)
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Ukrainian -- Yoruba
Previous Chapter -- Next Chapter 17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
இஸ்லாத்தில் சுவிசேஷத்திற்கு இருக்கும் தடைகளைப் புரிந்துகொள்ளுதல்
அத்தியாயம் 9: முஸ்லீம்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கும்போது கிறிஸ்தவர்கள் கடந்து வர வேண்டிய தடைகள்
9.11. இஸ்லாத்தின் நம்பிக்கைகளைப் பற்றி அறியாமைபெரும்பாலான கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாமிய மக்கள் எப்படி சிந்திக்கிறார்கள் அல்லது எப்படி முடிவுசெய்கிறார்கள் என்பது பற்றிய அறிவு மிகக் குறைவாக இருக்கிறது. இஸ்லாமிய மக்களின் மனோதத்துவம், அவர்களின் சிந்தனை முறை, அவர்களுக்கு மதம் என்பது எதைக் குறிக்கிறது என்பது பற்றி நமக்கு அதிகம் தெரியவில்லை. கடந்த காலங்களில், இஸ்லாத்தைப் பற்றிய சிறந்த புத்தகங்கள் கிறிஸ்தவர்களால் எழுதப்பட்டன; இன்று இஸ்லாத்தைப் பற்றி கிறிஸ்தவர்களால் எழுதப்படும் பெரும்பாலான புத்தகங்கள் மூன்று வடிவங்களில் ஒன்றை எடுக்கின்றன. அது தரம்குறைந்து பேசுவதாகவோ, பகைமையுடனோ அல்லது தனிப்பட்ட கருத்தாகவோ இருக்கும். கிறிஸ்தவ கண்ணோட்டத்தில் இஸ்லாத்தைப் பற்றிய புறநிலை ஆய்வு மிகவும் முக்கியமானது. இஸ்லாத்தைப் பற்றிய அறிவு இல்லாதது, கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே மதம் பற்றிய உரையாடலை சில சமயங்களில் சவாலானதாக ஆக்கும். |