Home
Links
Contact
About us
Impressum
Site Map?


Afrikaans
عربي
বাংলা
Dan (Mande)
Bahasa Indones.
Cebuano
Deutsch
English-1
English-2
Español
Français
Hausa/هَوُسَا
עברית
हिन्दी
Igbo
ქართული
Kirundi
Kiswahili
മലയാളം
O‘zbek
Peul
Português
Русский
Soomaaliga
தமிழ்
తెలుగు
Türkçe
Twi
Українська
اردو
Yorùbá
中文



Home (Old)
Content (Old)


Indonesian (Old)
English (Old)
German (Old)
Russian (Old)\\

Home -- Tamil -- 17-Understanding Islam -- 078 (Objections to the trinity)
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Telugu? -- Ukrainian -- Yoruba

Previous Chapter -- Next Chapter

17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
பாகம் ஐந்து: கிறிஸ்தவத்துக்கான முஸ்லீம்களின் எதிர்ப்பைப் புரிந்துகொள்ளுதல்
அத்தியாயம் 13: கிறிஸ்தவத்துக்கு இஸ்லாமின் எதிர்ப்பு

13.3. திரித்துவத்துக்கான மறுப்புக்கள்


மூன்றாவது ஆட்சேபனையாக நாம் பார்க்கப் போவது திரித்துவக் கொள்கைக்கான ஆட்சேபனை ஆகும். முஸ்லீம்கள் கிறிஸ்தவ திரித்துவக் கருத்தை எதிர்த்துப் பேசினாலும், குர்ஆனும் ஹதீஸும் வேறொரு விஷயத்தை எதிர்க்கின்றன. கிறிஸ்தவர்கள் அல்லாவைத் தவிர இயேசு மரியாள் ஆகிய இரண்டு கடவுள்களை வணங்குவதாக குர்ஆன் குற்றம் சாட்டுகிறது (குர்ஆன் 5:116-117), அல்லது மூன்று கடவுள்கள் (குர்ஆன் 5:73, 4:171) என்று குற்றம் சாட்டுகிறது. இன்றைய முஸ்லீம்கள் கூட, திரித்துவத்தைப் பற்றி பேசும்போது, கிறிஸ்தவம் கடவுள் ஒரு நபரில் மூன்று ஆட்கள் என்று கற்பிக்கிறது என்று கூறுகின்றனர். இதோ ஒரு முஸ்லீம் மதவாதி இவ்வாறு கூறுகிறார்:

“கிறிஸ்தவ சபையின் ஞான உபதேசக் கூற்றுப்படி, "தந்தை ஆள்தத்துவம் உள்ளவர், மகன் ஆள்தத்துவம் உள்ளவர், பரிசுத்த ஆவி ஆள்தத்துவம் உள்ளவர்; ஆனால் அவர்கள் மூன்று ஆள்தத்துவங்கள் அல்ல, ஒரே ஆள்தத்துவமாகும்.” (Dr. Zakir Naik, The concept of Trinity!! - lecture given 2012).

எனினும், ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் தெரிந்தபடி, எந்த கிறிஸ்தவ உபதேச நூலும் இதைச் சொல்லவில்லை; மாறாக கடவுள் ஒரே "தன்மையுள்ளவர்" அல்லது இயற்கையைக் கொண்ட மூன்று ஆள்தன்மைகள் என்று கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள். கிறிஸ்தவர்கள் மூன்று பேர் ஒரு நபர் என்று ஒருபோதும் சொல்லவில்லை, மாறாக ஒரே கடவுள் மூன்று ஆள்தன்மைகள் ஆகும்.

மனிதர்களாகிய நம்மிடம் கடவுள் யார் என்று சொல்ல உரிமையும், அதிகாரமும், திறனும் இல்லை. கடவுள் யார் என்று சொல்ல கடவுளுக்கே உரிமை, அதிகாரம் மற்றும் அறிவு இருக்கிறது. எனவே, கடவுள் யார் என்பதை அறிந்துகொள்ள கடவுளின் வார்த்தையையே நம்ப வேண்டும். பைபிளின் தொடக்கத்திலிருந்தே, கடவுள் ஒரே கடவுளாகவே வெளிப்படுத்தப்படுகிறார்:

“இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.” (உபாகமம் 6:4; மாற்கு 12:29).

இது கிறிஸ்தவ மதத்தின் அடிப்படை உபதேசம், இதை பைபிள் வலியுறுத்துகிறது. பவுல் அப்போஸ்தலர் இவ்வாறு கூறுகிறார்:

“விருத்தசேதனமுள்ளவர்களை விசுவாசத்தினாலும், விருத்தசேதனம் இல்லாதவர்களை விசுவாசத்தின் மூலமாயும் நீதிமான்களாக்குகிற தேவன் ஒருவரே.” (ரோமர் 3:30),

மேலும்,

“தேவன் ஒருவரே தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.” (1 தீமோத்தேயு 2:5).

அதே சமயத்தில், பைபிள் இந்த ஒற்றுமையை ஒரு எளிய ஒற்றுமையாகக் காட்டவில்லை, மாறாக ஒருங்கிணைந்த ஓரிறையாகக் காட்டுகிறது. உபாகமப் புஸ்தகத்தில் எகத் “דחא” என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இந்த வார்த்தை பைபிளில் பெரும்பாலும் "ஒன்றுபட்ட" என்று பொருள்படும்படி பயன்படுத்தப்படுகிறது, உதாரணமாக ஆதியாகமம் 2:24 "அவர்கள் ஒரு மாம்சமாக இருப்பார்கள்", ஆதியாகமம் 11:6 "ஒரே குழு", யாத்திராகமம் 36:13 "ஒன்று", யாத்திராகமம் 23:29 "ஒரு வருடம்" போன்றவை. எபிரேய மொழியில் இன்னொரு வார்த்தை ஒன்று என்பதைக் குறிக்கிறது: யாக்கித் "דיחי". இந்த வார்த்தை எப்போதும் தனிப்பட்ட எண்ணிக்கையைக் குறிக்கும், நியாயாதிபதிகள் 11:34 "ஒரே மகன்", நீதிமொழிகள் 4:3 "ஒரே மகன்" போன்றவற்றில் உள்ளது போல். இந்த வார்த்தை பைபிளில் எங்கும் கடவுளைக் குறிக்கப் பயன்படுத்தப்படவில்லை.

கடவுளின் மூன்று ஆள்தன்மைகள் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

www.Grace-and-Truth.net

Page last modified on April 24, 2026, at 02:03 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)