Previous Chapter -- Next Chapter
11. முன்ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரைக்கான விவிலிய அறிமுகம்
கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிரான தாக்குதல்களில் மறைந்திருக்கும் பொய்களையும் அடிப்படைத் தவறுகளையும் எப்படி அம்பலப்படுத்துவது?
பாகம் 4 – செயலில் ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரை
25. உலகநோக்கு கொள்கைக் காப்புரை
வரையறை: உலக நோக்கு என்பது அனைத்தையும் விளக்குவதும் தொடர்புபடுத்துவதுமான முன்ஊகங்களின் தொகுப்பாகும்.
நம்பிக்கையாளர்களும் அவநம்பிக்கையாளர்களும் கலந்துரையாடலில் ஈடுபடும்போது, சீக்கிரமாகவோ, தாமதமாகவோ தங்கள் இருவருடைய உலக நோக்கும் வெவ்வேறானவை என்பதைக் கண்டுகொள்வார்கள். இதன் பொருள் என்னவென்றால் முன்வைக்கப்படும் வாதங்கள் அனைத்தும் எதிர் தரப்பில் உள்ளவரால் வித்தியாசமான முறையில் விளங்கிக்கொள்ளப்படும். மற்ற காரியங்களையும் இருவரும் இரு வேறுபட்ட முறையில் அணுகுவார்கள்.
வேதாகமம் சொல்வதைப் போல, கிறிஸ்து மட்டுமே கடவுளிடம் செல்வதற்குரிய ஒரே வழி (யோவான் 14:6). இதை தவிர வேறு எந்த வழியும் எங்கும் இல்லை என்பதை நாம் அறிவோம். வேறு வழிகள் இருக்கின்றன என்று முன்வைக்கப்படும் வாதங்களுக்கு பதிலுரைப்பதுதான் காப்புரையாளரின் கடமையாகும். அதற்காக நாம் உலகத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான சமயங்கள் அனைத்தையும் பற்றி படித்து அதில் புலமை பெற வேண்டுமா? இல்லவே இல்லை! அப்படிச் செய்வது பயனுள்ளதாகவும் கால விரயத்தைத் தடுப்பதாகவும் இருந்தாலும், கிறிஸ்தவம் உட்பட அனைத்து நம்பிக்கை வடிவங்களும் பதிலுரைக்க வேண்டிய அடிப்படைக் கேள்விகளில்தான் நாம் கவனம் செலுத்த வேண்டும்:
அ) நாம் எங்கிருந்து வந்திருக்கிறோம்?
ஆ) இன்றைய மனித நிலையின் பிரச்சனை என்ன?
இ) இந்த பிரச்சனையை நாம் எப்படி தீர்ப்பது?
ஈ) இவையெல்லாம் எப்படி முடியும்?
அல்லது இதே காரியத்தை இறையியல் வார்த்தைகளில் சொன்னால் ஒவ்வொரு நம்பிக்கை அமைப்புகளும் படைப்பு, வீழ்ச்சி, மீட்பு மற்றும் மீட்டுருவாக்கம் ஆகிய கேள்விகளுக்கு பதிலுரைக்க வேண்டும்.
இந்த கேள்விகளுக்கு பதில் காணப்பட வேண்டும்:
அ) பகுத்தறிவு ரீதியில் முரண்பாடற்ற நிலையில்: நம்முடைய கூற்றுகளில் நாம் முரண்பாடுள்ளவர்களாக இருந்தால் ஒருபோதும் நாம் உண்மையைச் சென்றடைய முடியாது. ஏனெனில் முரண்பாடு எதையும் உண்மையென்று சொல்லும். எதிரெதிரான காரியங்களை உண்மை என்று ஏற்றுக்கொள்ளும். கிறிஸ்தவர்களாக நாம் முரண்பாடில்லாதவர்களாக இருக்கும் படி அழைக்கப்பட்டிருக்கிறோம். ஏனெனில் முரண்பாடு என்பது பொய்யின் ஒரு வடிவமாக கடவுளின் தன்மைக்கும், அவருடைய கட்டளைகளுக்கும் நம்முடைய உலக நோக்குக்கும் எதிரானதாக இருக்கிறது
ஆ) தாறுமாறற்ற நிலையில்: தாறுமாறான நிலையில் நாம் சிந்திக்கவும் பேசவும் அனுமதிக்கப்பட்டோமானால் ஆதாரமோ நியாயமோ இல்லாமல் நாம் எதை வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டே போகலாம். நாம் சொல்லும் காரியங்களில் உண்மையும் இருக்காது பொய்யும் இருக்காது. ஒருவர் சொல்லும் காரியம் எதுவாக இருந்தாலும் அது அடுத்தவர் சொல்லும் காரியத்தினால் மறைக்கப்பட்டுப் போகும்.
இ) இணக்கமான நிலையில்: ஒரு உலக நோக்கில் ஒன்றுடன் ஒன்று உடன்படாத இரண்டு முன்ஊகங்கள் இருக்குமானால் அந்த உலக நோக்கு தாறுமாறானதும் பகுத்தறிவுக்கு ஒவ்வாததுமான ஒன்றாகும். உதாரணமாக, ஒரு சார்பியலாளர் நல்லது என்றும் கெட்டது என்றும் எதுவும் கிடையாது என்று நம்புவாரானால் இவ்வுலகத்தில் எவ்வளவு கெட்ட காரியம் நடைபெற்றாலும் அதை அவர் கண்டிக்க முடியாது. அல்லது பிபிசி வானொலியில் இறை மறுப்புக் கோட்பாட்டாளரும் பரிணாமக் கொள்கையாளருமான ரிச்சர்ட் டாக்கின்ஸ் முன்வைத்த கூற்றைக் கவனியுங்கள், “மதம்தான் தீமையின் தோற்றுவாய்”. இதே இறை மறுப்புக் கோட்பாட்டாளர் இவ்வாறும் சொல்லியிருக்கிறார்: “குருட்டுத்தனமான பௌதீக சக்திகளும் மரபணு மறுஉருவாக்கமும் நிறைந்த இந்த அண்டத்தில், சிலர் துன்பத்திற்கு உள்ளாகிறார்கள்; சிலர் நல்வாய்ப்பைப் பெறப்போகிறார்கள்; இதில் நீங்கள் எந்த விதியையும், நியாயத்தையும், நீதியையும் பார்க்க முடியாது. அடிப்படையில் எந்த ஒரு வடிவமைப்பும், நோக்கமும், தீமையும் நன்மையும் எதுவும் இல்லாமல், வெறும் இரக்கமற்ற அலட்சியமான குருட்டுத்தனத்தைத் தவிர வேறு எதுவும் இல்லையெனில், நாம் கவனித்துக்கொண்டிருக்கும் இந்த அண்டம் நாம் எதிர்பார்க்க வேண்டிய அதே குணாதியங்களையே பெற்றிருக்கும்.” (Richard Dawkins,The Blind Watchmaker, p. 133). இவ்வுலகின் டாக்கின்ஸ்களிடம் நாம் கேட்க வேண்டியது இதுதான்: “எப்படி எந்த நன்மையும் எந்த தீமையும் இல்லாத உலகத்தில் எந்த தீமையின் தோற்றுவாயாக மதம் ஆனது?” என்பதைத்தான்.
ஈ) ஒழுக்கரீதியாக முரண்பாடற்ற நிலையில்: அவர்களுடைய கனிகளினால் அவர்களை அறிவீர்கள் (மத். 7:16) என்று இயேசு சொன்னார். ஒருவர் குறிப்பிட்ட உலக நோக்கை நம்புகிற ஒருவர் ஒரு நிலைப்பாட்டை முன்வைத்தல் என்பது வேறு அதன்படி வாழ்தல் என்பது வேறு. அவர்கள் மிக இலகுவாக கீழ்க்காணும் காரியத்தை அறிவிக்கலாம்: “உண்மையில், அவர்கள் தங்களுக்கே தவறிழைத்துக்கொண்டிருக்கும்போது தேவதூதர்கள் அவர்களை (மரணத்தில்) எடுத்துக்கொள்ளும்போது – தேவதூதர்கள், “நீங்கள் என்ன நிலையில் இருந்தீர்கள்?” என்று கேட்பார்கள். அதற்கு அவர்கள், “நாங்கள் கொடுமையின் நாட்டில் இருந்தோம்” என்பார்கள். அதற்கு மறுமொழியாக தேவதூதர்கள், “அல்லாஹ்வின் நாடு நீங்கள் குடியேறுவதற்கு போதிய அளவு விசாலமாக இருக்கவில்லையா?” என்பார்கள். ஏனெனில், அவர்களுடைய அடைக்கலம் நரகம் – தீமை அங்குதான் சென்றடையும்” (குர்ஆன் 4:98). ஆயினும், இப்படிப்பட்ட கூற்றுகளைச் சொல்கிறவர் இதன் விளைவுகளை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்களா? இக்கூற்றின்படி முஸ்லிம்கள் இஸ்லாமைத் தழுவாத நாடுகளில் வாழ்வதற்கு குர்ஆன் அனுமதியளிப்பதில்லை. தாங்கள் ஒடுக்கப்படுவதாக அவர்கள் கருதும் நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் நரகத்தையே சென்றடைவார்கள். இஸ்லாத்தை தழுவாத நாட்டில் வாழும் முஸ்லிம்கள் தங்கள் வாழ்க்கைச் சூழல் சரியில்லை என்று அந்த அரசுகளிடம் முறையிடும்போது அவர்கள் முஸ்லிம் நாடுகளுக்குச் சென்றுவிட வேண்டும் என்று பதிலுரைக்கலாமா? அப்படி பதிலுரைப்பது தவறு என்று ஒரு முஸ்லிம் கூறுவார். உண்மைதான், அது தவறுதான். ஆனால், அவர்கள் முரண்பாடற்ற முஸ்லிமாக இருப்பதற்கு அவர் குர்ஆன் சொல்வதைக் கேட்க வேண்டும் அல்லவா? அல்லது டாக்கின்ஸின் கூற்றை எடுத்துக்கொள்ளுங்கள்: “நன்மையும் இல்லை, தீமையும் இல்லை”. இக்கூற்று அவர் பழைய ஏற்பாட்டு ஒழுக்கவியல் குறித்த அவருடைய கோபத்துடன் முரண்படுகிறது: “யாவே போன்ற ஒரு பயங்கரமானவரை மக்கள் தங்கள் வாழ்க்கைக்கு மாதிரியாக எடுத்துக்கொள்வது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. அதைவிட மோசமானது அப்படிப்பட்ட ஒரு தீய அரக்கனை (கதையோ உண்மையோ) நாமும் பின்பற்ற வேண்டும் என்று நம்மிடத்திலும் திணிப்பதாகும்.” இங்கு டாக்கின்ஸின் ஒழுக்கம் தொடர்பான கோபம், “நன்மையும் இல்லை, தீமையும் இல்லை” என்ற அவருடைய முந்தைய தீர்ப்புக்கு நேர் எதிராகச் செல்கிறது. இது எளிமையாகச் சொல்லப்போனால் அறிவுசார் மனக்கோளாறு ஆகும்.
ஒவ்வொரு உலக நோக்கும் அது உருவாக்கப்படும் அடிப்படைக் கட்டுமானங்களாகிய முன்ஊகங்களுக்கு பொருள் கூற வேண்டிய நிலையில் உள்ளது. உதாரணமாக, இவ்வுலகில் உண்மையில் எதுவும் இல்லை என்று கூறும் அத்வைதம் போன்ற உலக நோக்கை எடுத்துக்கொள்ளுங்கள். அவை ஒருபோதும் தர்க்கநியாயத்தை தங்களுடைய கருத்துக்களை நிறுவுவதற்குப் பயன்படுத்த முடியாது. ஏனெனில் இவ்வுலகில் எந்த “பௌதீக விதிகளும் இல்லை” என்றால் எப்படி அவற்றை அடிப்படையாகக் கொண்ட “தர்க்கநியாய விதிகள்” இருக்க முடியும்.
இந்த கேள்விகளில் நாம் கவனம் செலுத்துவதற்கான காரணம் வெளிப்படையானது. இரண்டு பேர் இவ்விதமான விவாதத்தில் ஈடுபடுகிறார்கள் என்றால் அவர்கள் இருவரும் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் இருவருடைய உலக நோக்குகளும் ஒன்றுக்கொன்று எதிரானவை என்றும் இருவரும் நம்புகிறார்கள். ஆகவே, “நாம் இங்கே எப்படி வந்தோம்” என்பதும் “நாம் இப்போது என்ன பிரச்சனையைச் சந்தித்திக்கிறோம்” என்பது நம்முடைய கலந்துரையாடலுக்கு மிகவும் முக்கியமான கேள்விகள் ஆகும்.
ஒரு காப்புரையாளர் பல்வேறு வித்தியாசமான உலக நோக்குகளை எதிர்கொள்ளக்கூடும். அவற்றில் சில சமயம் சார்ந்தும் சில மனிதவியல் சார்ந்தும் இருக்கும். அப்படிப்பட்ட சில உதாரணங்களைப் பார்ப்பது நமக்குப் பயனுள்ளதாக இருக்கும். அவற்றை நாம் முழுமையாகவோ விவரமாகவோ பார்க்கப்போவதில்லை. அப்படிப் பார்க்க வேண்டியதில்லை என்பதுதான் முன்ஊக காப்புரையின் வாதமே. அவநம்பிக்கையாளர்களின் கூற்றுகள் அனைத்தையும் நாம் மறுத்துரைக்க வேண்டியதில்லை. அவர்கள் நமக்கு எதிராக முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் பதிலுரைக்க வேண்டிய தேவையும் இல்லை. நாம் காப்புரையில் ஈடுபடும்போது உலக நோக்குகளின் அடிப்படையான முன்ஊகங்களில் மட்டும் கவனம் செலுத்துவோம்.