Previous Chapter -- Next Chapter
24. போலியான சமயங்களைக் கையாளுதல் - முன்ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரை அளவுக்கதிகமான முறையில் பகுத்தறிவு சார்ந்தது என்ற குற்றச்சாட்டுக்கு பதிலுரைத்தல்
முன்ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரை அளவுக்கு அதிகமாக பகுத்தறிவு சார்ந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டு கீழ்காணும் இரண்டு காரணங்களினால் முன்வைக்கப்படுகின்றது:
- அ) பகுத்தறிவு என்றால் என்ன என்பதை தவறாகப் புரிந்துகொள்ளுதல்.ஆ) முன்ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரையைப் பின்பற்றுகிறவர்கள் ஒவ்வொரு வாக்கியத்தையும் வேதாகமத்தை மேற்கோள் காட்டி முடிப்பதில்லை. அவை நேரடியான வேதாகம மேற்கோள்களாக இருந்தாலும் அவர்கள் அப்படித்தான் செய்கிறார்கள்.
ஆகவே நாம் இங்கு சில சொல்லாடல்களை வரையறை செய்து இந்த அணுகு முறைக்கான வேதாகம அடிப்படையை எடுத்துரைப்போம். இதுவரை நீங்கள் வாசித்தவரை இந்த அணுகுமுறை முழுவதுமே முழுவதும் வேதாகமத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதைப் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். உண்மையில் இந்த அணுகுமுறை இதைக் கோரி நிற்கிறது. ஆனால், முன்ஊகக் கிறிஸ்தவ காப்புரைக்கான வேதாகம நியாயத்தை அல்லது வேதாகம கட்டளையைப் பார்ப்பது நமக்கு உதவிகரமாகவே இருக்கும்.
நாம் பகுத்தறிவு அல்லது நியாயம் போன்ற சொற்களைப் பயன்படுத்தும் போது, ஒரு மனிதவியலாளரோ அல்லது பகுத்தறிவாளரோ பயன்படுத்துவது போல பயன்படுத்துவதில்லை. அல்லது பிரெஞ்சுப் புரட்சியின் பெண் தெய்வமாகிய அறிவு என்பதையும் நாம் குறிப்பிடுவதில்லை. நாங்கள் வேதாகமத்தில் பயன்படுத்தப்படாத சொற்களைப் பயன்படுத்தி வேதாகம உலக நோக்கைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம் அவ்வளவுதான். நாம் பகுத்தறிவுள்ளவர்களாக, மாறாத பேச்சுள்ளவர்களாக, முரண்பாடற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதற்கு உறுதியான அடித்தளத்தை வேதாகமத்தில் பார்க்கிறோம். வேதாகமத்தில் கடவுள் தம்மைத் தாம் மறுதலிப்பதில்லை (2 தீமோ. 2:13); கிறிஸ்து “ஆம்” என்றும் “இல்லை” சொல்லப்படாமல் எப்போதும் “ஆம்” என்றுதான் இருக்கிறது (2 கொரி. 1:19); பொய் சொல்வது கடவுளுக்கு முடியாத காரியம் (எபிரெயர் 6:18, தீத்து 1:2). தம்முடைய வார்த்தைகளில் ஒன்றையும் அவர் மாற்றுவதில்லை (சங்கீதம் 89:34). வேதாகமம் கடவுளுடைய குணாதிசயங்களை மனிதனுடைய குணாதிசயங்களோடு ஒப்பிட்டுப் பேசுகிறது; அவற்றில் ஒன்று கடவுள் மனிதர்களைப் போல பொய் சொல்வதில்லை (எண். 23:19). இவ்வாறு நாம் பொய் சொல்லக்கூடாது அல்லது பொய் சாட்சி சொல்லக்கூடாது என்ற கட்டளையை பெற்றிருக்கிறோம் (யாத். 20:16, யாத். 23:1, லேவியராகமம் 19:11, உபாகமம் 5:20). உண்மை சொல்வதுதான் சரி என்ற காரணத்தினால் நாம் பொய் சொல்லக்கூடாது என்று கட்டளை கொடுக்கப்பட்டிருக்கிறது. நாம் யாரையும் ஏமாற்றக்கூடாது (நீதி. 12:17), பொய் சொல்கிறவர்கள் தப்பிக்க முடியாது (நீதி. 19:5). ஆகவே, நாம் அவநம்பிக்கையாளர்களிடம் பேசும்போது நம்முடைய கூற்றுகளையே நாம் முரண்படுத்திப் பேசக்கூடாது, ஏனெனில் அது பொய்யின் ஒரு வடிவமாகும்; கடவுள் உண்மையுள்ளவர் என்றும் எந்த மனிதனும் பொய்யன் என்பதைக் காண்பிக்கும் வண்ணம் உண்மையை அடைவதே நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும் (ரோமர் 3:4, சங். 116:11).
இது நம்மை இரண்டாவது கருத்துக்கு நேராக இட்டுச் செல்கிறது. அதாவது, நாம் வேதாகம வசனங்களை ஆதாரமாக மேற்கோள் காட்ட வேண்டும். இங்கு நற்செய்தி அறிவித்தலுக்கும் கிறிஸ்தவ நம்பிக்கைக்கு காப்புரை வழங்குவதற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை நாம் அறிந்திருக்க வேண்டும். நற்செய்தி என்பது அவநம்பிக்கையாளர்களைக் கடவுளிடம் திருப்பும் நோக்குடன் கடவுளின் சத்தியத்தை அவர்களுக்கு எடுத்துரைப்பது. காப்புரை என்பது வேதாகமத்தில் வெளிப்படுத்தியிருக்கிற சத்தியத்தின் அடிப்படையில் அவநம்பிக்கையாளர்களுடைய எதிர்ப்புகளுக்கு பதிலுரைப்பது (ரோமர் 3:19, சங். 107:42, மத். 22:46, லூக். 14:6, லூக். 20:40).
இந்த இரண்டு நோக்கங்களையும் அடைய இரண்டு வெவ்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்த வேண்டும். நற்செய்தி அறிவித்தல் என்பது சீடராக்குவதையும், திருமுழுக்கு கொடுப்பதையும் கடவுளுடைய வார்த்தைகளை அவர்களுக்குப் போதிப்பதையும் நோக்கமாகக் கொண்டது. காப்புரை என்பது நாம் ஏற்கனவே நீதிமொழிகளில் இருந்து பார்த்த இருபடி வழிமுறையைப் பயன்படுத்தி அவநம்பிக்கையாளர்கள் சத்தியத்தை நம்பாமல் இருப்பதற்கு எந்த சாக்குப்போக்கும் சொல்ல முடியாது என்பதைக் காண்பிப்பது.
இதைச் செய்ய ஆரம்பிக்கும்போது நாம் அவர்களுடைய உலக நோக்கை எடுத்து, அவர்களுக்குக் காண்பித்து அது “போலியான அறிவு” (1 தீமோ. 6:20) என்பதை அவர்களுக்குக் காண்பிக்க வேண்டும் என்பதை நாம் ஏற்கனவே கற்றிருக்கிறோம். இந்த படியில் காப்புரையாளர் அவநம்பிக்கையாளரின் சொல்லாடல்களைப் பயன்படுத்துகிறார். காப்புரையாளர் கிறிஸ்தவத்திற்கு எதிரான உலக நோக்குகள் அனைத்தைப் பற்றியும் முழுமையான அறிவைப் பெற்றிருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால் அவநம்பிக்கையாளர்களிடம் பேசி அவர்களுடைய கருத்துக்களை எப்படி அவர்கள் நியாயப்படுத்த முடியும் என்று கேட்கும் அளவிற்கு அவர்களுடைய சொல்லாடல்களை அறிந்திருப்பது அவசியம்.ஆகவே, இந்த பகுதி பகுத்தறிவுவாதம்/இஸ்லாம்/பௌத்தம்/இந்து மதம் அல்லது ஏதாவது பிற நம்பிக்கையாளர்களின் பேச்சைப் போல காணப்படும். ஏனெனில் இங்கு நாம் கிறிஸ்தவமல்லாத சொல்லாடல்களைப் பயன்படுத்தி கிறிஸ்தவமல்லாத உலக நோக்கில் இருந்து பார்க்கும் போது காரியங்கள் எப்படியிருக்கும் என்று விளக்குகிறோம்.
இரண்டாவது படியில் அவநம்பிக்கையாளர் கிறிஸ்தவ உலக நோக்கைப் பார்த்து அது எப்படி பொருள்ள, அறிவுடைமையை சாத்தியமாக்குகிறது என்பதைக் காண்பிக்க முயற்சிக்க வேண்டும். ஆகவே இந்த பகுதியில் முதல் பகுதியைவிட அதிகமான கிறிஸ்தவ சொல்லாடல்களைப் பயன்படுத்துகிறோம்.