Home -- Tamil -- 17-Understanding Islam -- 034 (Christ’s Infallibility)
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Ukrainian -- Yoruba
Previous Chapter -- Next Chapter
17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
பகுதி மூன்று: முஸ்லீம் கிறிஸ்துவைப் புரிந்துகொள்ளுதல்
அத்தியாயம் 6: இஸ்லாத்தில் கிறிஸ்து
6.6. கிறிஸ்துவின் பாவம்செய்யாத தன்மை
இஸ்லாம் அனைத்து தீர்க்கதரிசிகளும் தவறாதவர்கள் என்று போதிக்கிறது, ஆனால் நாம் குர்ஆனையும் ஹதீஸையும் படிக்கும்போது, அவை முகமது உள்ளிட்ட தீர்க்கதரிசிகள் செய்த ஏராளமான பாவங்களைக் குறிப்பிடுவதைக் காண்கிறோம். உண்மையில், முகமது பாவமில்லாதவர் அல்ல என்று குர்ஆன் தெளிவாக கூறுகிறது:
"உமக்காக உம்முடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும் அல்லா மன்னித்து, உமக்காக தனது அருட்கொடையையும் பூர்த்தி செய்து உம்மை நேரான வழியில் நடத்துவதற்காகவும்.. (அல்குர்ஆன் 48:2)
ஒன்று முகமது பாவமுள்ளவர் மற்றும் அவருக்கு மன்னிப்பு தேவை, அல்லது அவர் பாவமற்றவர் மற்றும் குர்ஆன் அவருக்கு மன்னிப்பு தேவை என்று சொல்வது தவறு என்பது தெளிவாகிறது. இஸ்லாமில் எந்த வகையிலும் பாவம் செய்யாத ஒரே தீர்க்கதரிசி கிறிஸ்து மட்டுமே, அவருக்கு மன்னிப்பு தேவை என்று எங்கும் கூறப்படவில்லை.