Previous Chapter -- Next Chapter
9.2. நம்மைக் குறித்து நமக்கிருக்கும் பயம்
உலகின் பல்வேறு பகுதிகளில் சுவிசேஷம் அறிவிப்பதன் விளைவுகள் கிண்டல் செய்யப்படுவது அல்லது மதவெறியுடன் இருப்பதாக குற்றம் சாட்டப்படுவது முதல் கைது, சிறை, மரணம் வரை பல்வேறு விதமாக இருக்கும். சில இஸ்லாமிய அரசுகள், எடுத்துக்காட்டாக சவுதி அரேபியா அல்லது ஈரான் போன்றவை, இஸ்லாத்தின் காவலர் என்ற நிலையில் தங்களின் அதிகாரத்திற்கான தார்மீக அடிப்படையைக் கண்டடைகின்றன. அந்த அரசாங்கம் மத போதனைகளை அனுமதித்தால், அது தன் சொந்தக் கொள்கைகளுக்கே முரண்பட்டு விடும் / தன் இருப்பின் நோக்கத்தையே விட்டுவிடும். அந்த அரசாங்கத்தில் உள்ள தனிநபர்கள் வேறு மதங்களையும் கருத்துக்களையும் பொறுத்துக்கொண்டாலும், பொது வெளியில் அப்படிப்பட்ட சகிப்புத்தன்மையை வெளிப்படுத்த முடியாது (1 கொரிந்தியர் 1:18). மிகக் குறைந்த தீவிர அரசாங்கங்களான எகிப்து போன்றவை கூட தங்கள் அதிகாரத்திற்கான காரணத்தை மதத்திலிருந்தே பெறுகின்றன, எனவே அந்த மதத்தின் பாதுகாவலர்களாக செயல்பட வேண்டியுள்ளது. சுவிசேஷத்தை அறிவிப்பதைத் தடைசெய்வதற்கான மற்றொரு காரணம், சில அரசாங்கங்கள் தங்கள் நாட்டிலுள்ள இஸ்லாமிய தீவிரவாதிகளின் எதிர்வினையைப் பற்றி அஞ்சுவதே ஆகும். இது இஸ்லாமிய நாடுகளுக்கு மட்டுமே பொருந்தாது, மேற்கத்திய நாடுகளிலும் கூட, சில இடங்களில் மத போதனை அனுமதிக்கப்படவில்லை அல்லது மக்கள் அதை விரும்புவதில்லை. ஏனென்றால், அதிகாரிகள் தீவிரவாதிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று அஞ்சுகிறார்கள்.
சில கிறிஸ்தவர்களுக்கு, ஆபத்துகள் குறைவு. சுவிசேஷத்தை அறிவிப்பது சட்டவிரோதமானதாக இல்லாத நாடுகளிலும் கூட, கிறிஸ்தவர்கள் கிண்டல் செய்யப்படுவது அல்லது அவமதிக்கப்படுவது ஆகிய இரண்டையும் சந்திக்க நேரிடலாம். இதன் விளைவாக, உலகமெங்கும் பல கிறிஸ்தவர்கள் முஸ்லீம்களிடம் கிறிஸ்துவைப் பற்றி பேசுவதற்கு அஞ்சுகிறார்கள். என்றாலும், பைபிள் நம்மை நினைவூட்டுகிறது: கடவுளின் அன்பு ஜீவனை விட மேலானது, ஆகவே நாம் நிச்சயமாக அவரை மகிமைப்படுத்த வேண்டும் (சங்கீதம் 63:3).