Previous Chapter -- Next Chapter
10.2. தவறாகப் புரிந்துகொள்ளுதல்
இஸ்லாமியக் கருத்துக்கள் கிறிஸ்தவ மதத்தைப் பற்றிய முழுமையான புரிதலைக் காட்டவில்லை. முதலில், இஸ்லாமியர்கள் "கடவுள்" என்ற சொல்லை ஒரு பெயராக பயன்படுத்துகிறார்கள், எனவே கிறிஸ்தவர்கள், இயேசு கடவுள், தந்தை கடவுள், பரிசுத்த ஆவி கடவுள் என்று சொல்லும்போது, இஸ்லாமியர்கள் தந்தை என்பவர் இயேசுவும் பரிசுத்த ஆவியும் என்று புரிந்துகொள்கிறார்கள் (அதாவது, அவர்கள் ஒரே ஆளைக் குறிப்பிடுகிறார்கள்). திரித்துவ கொள்கையைக் குறித்து, குர்ஆன் கிறிஸ்தவர்கள் மூன்று கடவுளை (அல்லா, இயேசு, மரியாள்) வணங்குகிறார்கள் என்று கூறுகிறது. குர்ஆன் பல தெய்வ வணக்கத்தை மன்னிக்க முடியாது எனக் கூறுவதால், இது இஸ்லாமியர்களுக்கு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத அருவருப்பாகும்! கிறிஸ்தவர்கள் எங்கள் நம்பிக்கைகளை நீங்கள் தவறாக புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்று எவ்வளவு விளக்கினாலும், முஸ்லீம்கள் நிச்சயமாக குர்ஆன் கூறுவதைத் தான் நம்புவார்கள்.
பின்பு, நிச்சயமாக கிறிஸ்தவ மதத்தை மேற்கத்திய வாழ்க்கை முறையுடன் ஒப்பிடப்படுகிறது. மேற்கு நாடுகளுக்கு வெளியேயுள்ள முஸ்லீம்கள், ஹாலிவுட் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் காட்டப்படும், இஸ்லாமிய தரங்களுக்கு ஒவ்வாத முற்றிலும் ஒழுக்கமற்ற வாழ்க்கை முறையைக் காணும்போது, அது கிறிஸ்தவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று நினைப்பார்கள்.