Home -- Tamil -- 17-Understanding Islam -- 071 (Did Mohammed memorise the Qur’an at the point of revelation?)
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Telugu? -- Ukrainian -- Yoruba
Previous Chapter -- Next Chapter
17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
பாகம் ஐந்து: கிறிஸ்தவத்துக்கான முஸ்லீம்களின் எதிர்ப்பைப் புரிந்துகொள்ளுதல்
அத்தியாயம் 13: கிறிஸ்தவத்துக்கு இஸ்லாமின் எதிர்ப்பு
13.1. குர்ஆன் அப்படியே இருக்கிறது, ஆனால் பைபிள் திருத்தப்பட்டிருக்கிறது என்ற நம்பிக்கை
13.1.1. தனக்கு குர்ஆன் வெளிப்படுத்தப்பட்ட சமயத்தில் முகமது அதை மனனம் செய்தாரா?
இஸ்லாமிய ஆதாரங்களின்படி, முகமதுவுக்கு முஸ்லீம்கள் சொல்வது போன்ற சரியான நினைவாற்றல் இருக்கவில்லை. அவர் கூறினார்:
“நான் உங்களைப் போன்ற மனிதன் தான், உங்களைப் போலவே மறந்துவிடக் கூடியவன். நான் மறந்துவிட்டால் எனக்கு நினைவூட்டுங்கள்.” (ஸாஹீஹ் புகாரி).
உண்மையில், முகமது சில சமயங்களில் குர்ஆனை மறந்துவிடுவார், யாராவது அவருக்கு நினைவூட்ட வேண்டியிருந்தது:
“ஆயிஷா விளக்குகிறார்: இரவு நேரத்தில் ஒருவர் குர்ஆன் ஓதுவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்டு, ‘அல்லாஹ் அவன் மீது கருணை பொழிவான் ஆக! ஏனென்றால், அவர் எனக்கு இன்ன சூராவின் இன்ன வசனங்களை நினைவூட்டினார், அவற்றை மறந்துவிட்டேன்’ என்றார்.” (ஸஹீஹ் புகாரி)
முகமது குர்ஆனை மறந்துபோனதாகவும் கூறினார்:
“இன்ன வசனத்தை நான் மறந்துவிட்டேன்’ என்று சொல்பவர் எவ்வளவு இழிந்தவன்! மாறாக, அவர் மறக்கடிக்கப்பட்டிருக்கிறார். குர்ஆனை நினைவில் வைக்க முயற்சி செய்யுங்கள், ஏனென்றால் அது ஒட்டகங்கள் தங்களின் கயிறுகளிலிருந்து தப்பிச்செல்வதை விட மனிதர்களின் உள்ளங்களிலிருந்து மறைந்து போக அதிக வாய்ப்பு உள்ளது.” (ஸஹீஹ் முஸ்லீம்)
எனவே, முகமதுவின் பூரண நினைவாற்றல் என்ற கருத்து இஸ்லாமிய மூலங்களால் ஆதரிக்கப்படவில்லை, என்றாலும் அப்படிச் சொல்வது முஸ்லீம்களிடையே பொதுவானது.