Previous Chapter -- Next Chapter
15.9. கிறிஸ்தவ சொற்களைப் பயன்படுத்த வேண்டாம்
கிறிஸ்தவர்கள் பயன்படுத்தும் மொழியும் சொல்லாடலும் பெரும்பாலும் முஸ்லீம்களுக்கு அர்த்தமில்லாமல் போகலாம், சில சமயங்களில் அவை மனதைக் காயப்படுத்துவதாகவும் இருக்கலாம். புதிதாக மதம்மாறியிருந்த என்னை, சபையிலிருந்த ஒருவர், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் நான் கழுவப்பட்டிருக்கிறேனா என்று கேட்டதை நான் நினைவுகூருகிறேன். அவர் என்ன பேசுகிறார் என்று எனக்கு கொஞ்சம் கூட புரியவில்லை! ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் கழுவப்படுவது என்பது உண்மையில் ஒரு கிறிஸ்தவ சடங்கு என்று நான் நினைத்தேன், இது என்னை மிகவும் கலக்கமடையச் செய்தது. புதிய கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவர் ஸ்பாஞ்சு போன்று இந்த எல்லா புதிய தகவல்களையும் உள்வாங்குகிறார்; அனைத்தும் அவருக்கு புதிது; சில விஷயங்களை தவறாகப் புரிந்துகொள்ள வாய்ப்பு இருக்கிறது. எனவே, தேவையற்ற கடினமான சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், அல்லது புதிய சொற்களை விளக்க நேரம் ஒதுக்குங்கள், அவை பரிச்சயமில்லாதவை அல்லது சபையில் வளராத ஒவருக்கு அவற்றின் அர்த்தம் உடனடியாக புரியாமல் இருக்கலாம்.